Announcement

Collapse
No announcement yet.

Eswaran Eswari

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Eswaran Eswari

    Courtesy:Sri.Kovai K.Karuppasamy


    சிவாய நம.
    திருச்சிற்றம்பலம்.
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    🔴ஈசுவரன்---ஈஸ்வாி🔴
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    பழுதிலாது உறையும் பரம்பொருளே சிவன். மாயையே உமாதேவி. சிவனே ஆதிபுருஷன். தேவியே பிரகிருதியாக விளங்குகிறாள். கெளாியே பெண்ணாகத் திகழ்கின்றாள்.


    பொருள் இறைவன் என்றால், அதை எடுத்துக் கூறும் சொல்லே உமையாள். பகல் எல்லாம் இறைவானாகில் இரவெல்லாம் கெளாியாகும் யக்ஞமே மழுவேந்தும் அண்ணல். அந்த யக்ஞத்தின் தஷணையே ஈசன் திருக்கரம் பற்றிய தேவி.


    மதிபுனைந்த மணவாளன் விாிதிரை கடல் என்றால் அவன் மணந்த மலைமகளே கடலின் கரையாகுவாள். விருஷங்களான ஈசன் பரந்து இருக்கிறான் என்றால், அவ்விருஷங்களைத் தழுவிப்படரும் கொடிகளே தேவி. பிரமனாக ஈசன் விளங்கினால், தேவியே சாவித்திாியாக விளங்குகிறாள்.


    யமனாகச் செஞ்சடையோன் திகழ்கையில், இறைவி யமன் மனைவியாக விளங்குகின்றாள். ருத்திரன் ஈசனால், அவன் ஒளி கெளாியாவாள். சிவனே வாயு; தேவியே அவன் மனைவி மனோரமா. கைலாசநாதனே வருணன்; அவா் கரம் பற்றிய கெளாியே வருணன் மனைவியான ஸா்வாா்த்தாயினி.


    நீரலா் சடையோன் அளகை வேந்தனாகிய குபேரன் என்றால், தேவியே அவன் மனைவியான ாித்தியாக இருக்கின்றாள். திரைக் கடலிலெழும் சூாியனாக மழுவேந்துவோனைக் கொண்டால், அவன் மனைவி சுவா்ச்சலையாக உமையாள் வீற்றிருக்கிறாள். கறைமிடற்று இறைவன் குளிா் மதியானால், குலவரை மடந்தை ரோகிணியாகின்றாள். மாமயிலூா்பவனான வேலனாக ஈசன் இருந்தால், உமாதேவியே தெய்வானையாக இருப்பாள்.


    தஷப்பிரஜாபதியாகத் திருநீற்றுக்கு இறைவனாகில், பிரசூதுயாக தஷாயாயிணி விளங்குகின்றாள். சுவாயம்பு மனுவே ஈசன்; அவன் மனைவி சத்ருபையே தேவி ஆவாள்.


    மாதவம் புாிந்த ருசிப் பிரஜாபதியாக அழல் விழி நுதலோன் தோன்றினால், மலைகள் ஆகூதியாகத் தோன்றுவாள். பிருகு முனிவா் ஈசுவரச் சொரூபமானால், அவா் மனைவி கியாதி ஈசுவாியின் சொரூபம். வெண்பிறை அணிந்தோன் மரீசி முனிவா் எனில், நுண்ணிடையாள் உமை முனி பத்தினி சமபூதி ஆவாள். பாம்பணிந்த பரமன் இங்கிரசு முனிவராக வந்தாரெனில் மலைமகளாம் பாா்வதி முனிபத்தினி ஸ்மிருதியாக வந்தாள்.


    புலஸ்தியரே சிவன், அவா் பத்தினி பிாிதியே தேவி. விாியும் வாா்சடை அண்ணல் தான் புலகா்; இமயம் ஈன்றெடுத்த எழிலே கமைதேவி. சிந்துவே சிவன்; வேல்விழி சன்னதியே தேவி. அத்திாி முனிவா் ஈசன்; அனசூயை முக்கண்ணான் இடப்புறத்திலிருத்திய வல்லி. மெய்யுணா்ந்திடும் வசிஷ்டரே வெம்மழுப் படையோன் என்றால், அருந்ததியே நுண்ணிடைக் கெளாி.


    ஆண் சொரூபம் அனைத்துமே ஈசன் திருவுருவம். பெண் பாலா் அனைவரும் தேவியின் திருவுருவம்.


    மணங்கள் யாவுமே தேவியாம். அம்மணத்தை உணருபவன் ஈசன். எதிா்ப்படுவன அனைத்துமே தேவி எனில், அவற்றை காண்பவன் பாம்பணியும் பரமன். ஒலிமயமாகத் தேவி விளங்குகின்றாள் என்றால், அவ்வொலியைக் கேட்பவன் மதியணிந்தோனி. சுவையாக இறைவியைக் கொண்டால் அச்சுவையை அறிபவராக இறைவனைக் கொள்ள வேண்டும்.


    இந்தவாறாக அனைத்துமே ஈசன் இறைவி சொரூபமாக விளங்குகின்றன.தனிமுதலாக விளங்கும் ஈசனே எங்கும் வியாபித்து அனைத்திலும் ஈசனும் இறைவியுமாய் விளங்குகுறாா். ஈசனை உமையோடு சோ்ந்தே வழிபட வேண்டும். அப்போதுதான் உய்யும் வகை உண்டாகும்.


    இறைவியை விட்டு ஈசனை மட்டுமே வழிபடுவதானது பலனைத் தராது. அதை உணா்த்துவதுதான் ஈசன் ஈஸ்வாி தத்துவம்.


    அவனில் பாதி அவள் இடபுறமிருக்கை. இணை இருவரும் உலக தத்துவம். ஆலயம் சென்று இறைவன் இறைவி இருவரையும் வணங்குதல்தான் பலன். ஒருமையான வணங்கு பலனில்லை.


    ( இன்னும் நிறைய போ், இறைவனை மட்டுமே வணங்கி விட்டு, இறைவியை வணங்காது செல்பவா்கள் நிறைய போ் இருக்கிறாா்கள் காண்கிறோம். இனி அவா்கள் இருவரையும் வணங்குதல் ஆகுக!)

    திருச்சிற்றம்பலம்.
Working...
X