Announcement

Collapse
No announcement yet.

Adisesha as patanjali

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Adisesha as patanjali

    சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *(27)*
    *தெரிந்தும் தெரியாமலும் தொடர்.*
    ●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
    *மாலனின் ஆதிஷேசனே, பதஞ்சலி முனிவராக.....*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    உலக இயக்கத்திற்கு காரணியாக விளங்குவது இறைவனின் இயக்கமே.


    நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் வாயிலாக உலகை அவன் இயக்கச் செய்து திருநடனம் அருளுகின்றான்.


    அவனின் ஒவ்வொரு அசைகின்ற அசைவினால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்பது புராணங்கள் எடுத்துத்தரும் உண்மைகளே.


    எனவேதான் *"அவனின்றி அணுவும் அசையாது"* ( அவன் இல்லாது எதுவுமே அசைவதில்லை.) என சொல்கிறோம்.


    சிவபெருமான் 108 நடனங்கள் புரிந்திருக்கிறார். அவற்றுள் 48 நடனங்கள் ஈசன் தனியாக ஆடியிருக்கிறார்.


    இந்நடனங்களில் மிக சிறப்பு வாய்ந்த நடனமாகத் திருவாதிரைத் திருத் தினத்தன்று சிவபெருமான் ஆடிய தாண்டவமாகும்.


    தில்லை கொண்ட சிதம்பர நடராஜர் கோவிலில் மார்கழி மாத திருவாதிரை தினத்தில் நடராஜர் நடன கோலத்தில் காட்சியளிப்பது *ஆருத்ரா தரிசனம்* என அழைக்கப்படுகிறது. இந்த தினத்தில் தில்லை நடராஜரின் திருநடனத்தை காண்பதற்கு எத்தனைக்கோடிக் கண்களும் பத்தாது.


    மார்கழி மாதம் என்பது தேவலோகத்தவர்களுக்கு வைகறை (அதிகாலை) பொழுதானதாகும்.


    இந்த நேரத்தில் காலைக் கடன்களை முடித்து நீராடி, இறைவனை தரிசிப்பது சிறப்பு வாய்ந்தது. எனவேதான் மார்கழி மாதத்தில் நடைபெறுகின்ற திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தைக் காண தேவலோக தேவர்கள் அனைவரும் சிதம்பர நகருக்கு வருவார்கள்.


    *ஆருத்ரா* என்றால் நனைக்கப்பட்டவை எனப் பொருள். பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ரபாதர் ஆகிய இருவரும், திருவாதிரை திருத் தினத்தில் சிவபெருமான் ஆடிய நடனத்தை காண வேண்டுமென்பதற்காக தவத்தை மேற்க் கொண்டனர்.


    இவர்களின் தவத்திற்கு பணிந்த ஈசன், தில்லையில் மார்கழி மாதம் திருவாதிரை தினத்தன்று தனது திருநடனத்தைக் காட்டி, கருணையால் இரு முனிவர்களையும் நனைத்த நிகழ்வே *ஆருத்ரா தரிசனம்* ஆகும்.


    ஒருசமயம் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த மாலன், திடீரென மகிழ்ச்சியில் திளைக்கத் தொடங்கினார். அவர் முகத்தில் தென்பட்ட சந்தோஷமானது பவுர்ணமி நிலவை போன்று பளிச்சிட்டன.


    தன்மீது சாந்தமாக படுத்திருக்கும் மாலன் இன்று ஏன் இவ்வளவு மகிழ்வு கொள்கிறார் என நினைத்த ஆதிசேஷன், அதற்கான காரணத்தை மாலனிடமே கேட்டார்.


    திருவாதிரை திருநாளன்று சிவபெருமான் நடராஜராக ஆடியத் திருத் தாண்டவத்தை நினைத்துப் பார்த்தேன். மகிழ்ச்சியானேன் என்றார் மாலன்.


    பரந்தாமனை இப்படி மகிழ்ச்சி காணச்செய்த அந்தத் திருநடனத்தை, தானும் காண வேண்டுமே என நாட்டம் கொண்டான் ஆதிசேஷனும்.


    தன் ஆவலை பரந்தாமனிடம் கூற , மாலனும் ஆசி கூறி போய் வர அனுமதிக்கிறார்.


    ஆதிசேஷன் பாதி முனிவவுருவமும், பாதி சர்ப்பவுருவமுமாக மாறி பதஞ்சலி முனிவர் ஆனார். பின்னர் நடராஜரின் திருநடனத்தைக் காண வேண்டி, ஈசனை நினைத்து தவமியற்றினார்.


    பதஞ்சலி முனிவரின் தவம் உச்சஸ்தானம் வரை நீண்டியது. அதனால் அவர் தன்னை (தன் நிலை) மறந்து தவத்திலிருந்தார்.


    அப்போது,..... *பதஞ்சலி!* *பதஞ்சலி!!* என சன்னமான குரலில் அழைத்தார் ஈசன். குரலொலி கேட்டு கண்விழித்தார் பதஞ்சலி முனிவர்.


    கண் திறந்த போது தன் முன்னே சர்வேசபெருமான் நிற்பதைக்.கண்டார். ஆனந்தித்தார். தாழ் பணிந்தார். தொழுதேத்தினார்.


    தவத்தின் நோக்கத்தைக் கூற எத்தனித்த முனிவனை....
    கைகளால் தளர்த்தி ஆசீர்வதித்த ஈசன்,..........


    அறிந்தவை அவருக்கா தெரியாது போயிற்று. ஆளும் இறைவனுக்கு ஆளுகையின் திண்ணம் தெரியாதா என்ன?"


    ஈசனே கூனினார்.....


    பதஞ்சலியே! உன்னைப் போன்றே, வியாக்ர பாதனும் திருவாதிரை திருநடனம் காண வேண்டி, என்னை நினைத்து உன் போலும் கடுந்தவம் செய்கிறான். எனவே நீங்களிருவரும் தில்லை வந்து திருவாதிரை திருநடனம் கண்டு மகிழ்வீராக! எனக்கூறி மறைந்தார்.


    ஈசன் கூறியபடி, பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும் தில்லை பதிக்குச் சென்றனர்.


    அங்கு வைத்து மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று தன் திருநடனத்தை அவர்களிருவருக்கும் காட்டியருளினார் சிவபெருமான்.


    இந்தத் தரிசனமே *ஆருத்ரா தரிசனம்* என அழைக்கப் பெறுகிறது.


    எனவேதான் தில்லை சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, ஈசனின் திருநடனத்தைக் காண்பது விஷேசம்.


    ஒவ்வொரு திருவாதிரை தினத்தன்றும் தில்லை சிதம்பரம் சென்று அங்கு திருநடனத்தைக்காணச் செல்லுங்கள்.


    இத் திருநடனத் தரிசித்திக் கொண்டே வருபவர்க்கு இப்பிறவியில் ஏற்பட்ட பாவங்கள் விலகி அழிந்தொலையத் துவங்கும்! இன்பமான வாழ்வு அமையும்!. முக்திக்கு வழி கோலும்.


    திருச்சிற்றம்பலம்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X