Announcement

Collapse
No announcement yet.

Ninda stuti by sundarar swamigal ( Scolding Shiva)

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Ninda stuti by sundarar swamigal ( Scolding Shiva)

    திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே இதனைச் செய்தேன்!


    நால்வர் பெருமக்களுள் ஒருவரான சுந்தரர் ஒவ்வொரு கோவிலாக சென்று பாடி வந்தார். ஒருமுறை அவிநாசி செல்லும் வழியில், பரிசாக பெற்ற பொன், பொருளுடன், அவிநாசி ரோட்டில் தற்போதும் உள்ள கூப்பிடு பிள்ளையார் கோவிலில், இரவு தங்கினார்.
    .
    திருமுருகன்பூண்டியில் தாம் கோவில் கொண்டுள்ளதே தெரியாமல் சுந்தரன் உள்ளானே என எண்ணிய சிவன், திருவிளையாடல் ஒன்றை நிகழ்த்தினார். வேடன் உருவம் பூண்டு, பூத கணங்களுடன் சென்று பொருட்களை திருடியதோடு, வழி நெடுகிலும் வீசி விட்டு வந்தார்.
    காலையில் எழுந்து பார்த்த சுந்தரமூர்த்தி நாயனார் அதிர்ச்சியடைந்து, கூப்பிடு பிள்ளையார் கோயிலில் உள்ள விநாயகரிடம் கேட்டுள்ளார். தந்தையை மீறி பேச முடியாமல், அவரும் மவுனமானார்.


    வழியெல்லாம் பொன், பொருள் கிடப்பதை பார்த்த நாயனார், அங்கு சிவன் கோயில் இருப்பதை பார்த்து, உனது எல்லையில் எனது பொருள் திருடு போவதா? "எந்துற்கு எம்பிரான் நீரே என சிவனை திட்டி, பத்து பாடல் பாடியுள்ளார்.


    பிறகு காட்சியளித்த சிவன், நீர் திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனை செய்தேன் என கூறி, இரண்டு பங்கு பொருள் வழங்கி, அனுப்பி வைத்துள்ளார்.


    இக்கதையை விளக்கும் வகையில், கோவிலுக்கு நுழைவதற்கு முன், சிவன் வேடனாக, வில், கல்லுடன் நிற்கும் சிற்பமும், கோபத்துடன் சிவனை எதிர்த்து சுந்தர மூர்த்தி நாயனார் நிற்பது போலவும், சாந்த முகத்துடன், சிரித்தபடியே நிற்பது போலவும் சிலைகள் உள்ளன. இன்றும், சிவன் திருடி வந்து மறைத்து வைத்த, வேடுவ பறிகுழி கோவிலில் உள்ளது. வீட்டில் பொருட்கள் திருட்டு போனால், செய்வினை, திருமண தடை உள்ளிட்ட எந்த தடைகள் வந்தாலும், சுந்தரமூர்த்தி நாயனார், சிவனை திட்டி பாடிய பத்து பாடல்களையும், பாடி வணங்கினால், பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.


    தென்னாடுடைய சிவனே போற்றி…!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
    ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...! நமசிவாயம் வாழ்க...!
Working...
X