Announcement

Collapse
No announcement yet.

Sanskrit in tamil movie songs

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sanskrit in tamil movie songs

    courtesy:https://tamilandvedas.com/category/tamil/page/22/


    தமிழ் திரைப்படங்களில் சம்ஸ்கிருதம்! – 2

    by ச.நாகராஜன்



    திரைப்படங்களில் சுபாஷிதம்
    தமிழ் திரைப்படங்களில் சுபாஷிதம் எனப்படும் தனி ஸ்லோகங்களைக்கூட காண முடியும். கமலஹாஸன் நடித்த படத்தில் வரும் ஒருஸ்லோகம் இது:
    புஸ்தகம் வனிதா வித்தம் பரஹஸ்தம் கதம் கதம் I அதவாபுநராயேன ஜீரண ப்ரஷ்ட கண்டச II
    புஸ்தகம், பெண், பணம் ஆகியவை அடுத்தவன் கைக்கு மாறினால்போனது போனது தான்! திரும்பி வந்தாலும் ஜீரணிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு பின்னமும் துண்டுகளாகவும் உருமாறி வரும்என்பது இதன் திரண்ட பொருள்!
    கர்ணனில் கீதை
    பகவத் கீதை உலகமெலாம் போற்றப்படும் அற்புத நூல். இதையும் தமிழ்ப்படங்களில் பலவற்றிலும் காண முடியும். குறிப்பாகச் சொல்ல ஒரே ஒருபடத்தை எடுத்துக் காட்டலாம்.
    1963ஆம் ஆண்டில் வெளியாகிய படம் கர்ணன். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் கர்ணனாகவும் என் டி ராமாராவ் கண்ணனாகவும்எஸ்.பி.முத்துராமன் அர்ஜுனனாகவும் நடித்து அனைவரின் பாராட்டையும்பெற்ற படம் இது.
    அதில் கீதையை என் டி ராமாராவ் சுருக்கமாகவும் அழகாகவும்போர்க்களக் காட்சியில் இப்படிக் கூறுவார்:

    மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா!
    மரணத்தின் தன்மை சொல்வேன்;
    மானிடர் ஆன்மா மரணமெய்தாது,
    மறுபடிப் பிறந்திருக்கும்;
    மேனியைக் கொல்வாய்! மேனியைக் கொல்வாய்!
    வீரத்தில் அதுவும் ஒன்று;
    நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி,
    வெந்து தான் தீரும் ஓர் நாள்.

    என்னை அறிந்தாய், எல்லா உயிரும்,
    எனதென்றும் அறிந்து கொண்டாய்;
    கண்ணன் மனது கல் மனதென்றோ
    காண்டீபம் நழுவ விட்டாய்
    காண்டீபம் நழுவ விட்டாய்
    மன்னரும் நானே, மக்களும் நானே,
    மரம் செடி கொடியும் நானே;
    சொன்னவன் கண்ணன், சொல்பவன் கண்ணன்;
    துணிந்து நில் தர்மம் வாழ.

    புண்ணியம் இதுவென்றிவ் வுலகம் சொன்னால்,
    அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே;
    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
    போகட்டும் கண்ணனுக்கே.

    கண்ணனே காட்டினான், கண்ணனே சாற்றினான்;
    கண்ணனே கொலை செய்கின்றான்.
    காண்டீபம் எழுக! நின் கை வன்மை எழுக!
    இக்களமெலாம் சிவக்க வாழ்க!

    கண்ணதாசனின் அற்புத கவிதை வரிகள் கீதையின் சுருக்கத்தைத் தந்து நம் உளத்தை உருக்குகிறது; மகிழ்விக்கிறது. இதைத் தொடர்ந்து கீதையில் நான்காவது அத்தியாயத்தில் வரும் முக்கியமான ஸ்லோகம் அப்படியே சம்ஸ்கிருதத்தில் கம்பீரமாக ஒலிக்கிறது.
    நல்லோரைக் காத்தற்கும் தீயோரை அழித்தற்கும் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் யுகம் தோறும் அவதரிக்கிறேன் என்ற பொருள் உடைய இந்த ஸ்லோகம் கேட்போரைப் பரவசப்படுத்துகிறது:

    பரித்ராணாய சாதூனாம்,
    விநாசாய ச துஷ்க்ருதாம்;
    தர்ம சம்ஸ்தாபனார்த்தாய,
    சம்பவாமி யுகே யுகே. (கீதை நான்காம் அத்தியாயம் எட்டாவது ஸ்லோகம்)



    பாபநாசம் சிவனின் அமர கீதங்கள்
    இனி தமிழ் திரையுலகின் ஆரம்ப வருடங்களை எடுத்துப் பார்த்தாலோஅங்கும் சம்ஸ்கிருத வார்த்தைகளைப் பரவலாகக் கொண்ட பாடல்களை
    நாம் காண முடியும்:
    பாபநாசம் சிவன் பெரும் சாஹித்யகர்த்தா. அழகிய இனிமையானபாடல்களை எழுதிய திரைப்படப் பாடலாசிரியர். பெரும் புகழ் பெற்றகவிஞர். சுமார் 2400 கீதங்களை இயற்றியவர். இவற்றில்திரைப்படப்பாடல்கள் மற்றும் சுமார் 800. இதுவரை முறையாகத்தொகுக்கப்பட்ட கீர்த்தனைகள் 400. அனைத்துப் பாடல்களையும் முறையாகத் தொகுக்கும் முயற்சியை அவரது மகள் இப்போது செய்துவருகிறார்.
    என்ன தவம் செய்தனை –யசோதா என்ன தவம் செய்தனை என்ற இவரதுபாடலை இன்றும் மேடை தோறும் வீடு தோறும் கேட்க முடிகிறது. இதுபோல ஏராளமான உள்ளம் உருக்கும் கீதங்களை யாத்தவர் இவர்.
    மன்மத லீலையை வென்றார் உண்டோ?
    ராதே உனக்கு கோபம் ஆகாதடி போன்ற நூற்றுக் கணக்கான இவரதுபாடல்களுக்கு இன்றும் ஒரு தனிப் பெருமை உண்டு.
    1945இல் வெளியாகி சக்கைப் போடு போட்ட படமான சகுந்தலை படத்தில்அனைத்து பாடல்களையும் இயற்றியவர் பாபநாசம் சிவன் தான். இசை அமைத்தவர் எஸ்.வி.வெங்கட்ராமன்.எம்.எஸ். சுப்புலெட்சுமியும்ஜி.என்.பாலசுப்பிரமணியனும் பாடிய ஒரு பாடலின் சில வரிகள் இதோ:
    பிரேமையில் யாவும் மறந்தேனே
    பிரேமையில் யாவும் மறந்தேனே .. பிரேமையில் ஜீவனம் உனதன்பேஜீவனம் உனதன்பே – என்
    அன்பே வானமுதும் விரும்பேனே
    பிரேமையில் யாவும் மறந்தோமோ ..பிரேமையில்
    பிரேமை வெண்ணிலா ஜோதி வீசி . . என் உள்ளம்
    பரவசமாக பிரேமை வெண்ணிலா ஜோதி வீசி
    என்னை மறந்தேன் மதனமோகனா
    என்னை மறந்தேன் மதனமோகனா
    இப்படி தமிழும் சம்ஸ்கிருதமும் சரியான விகிதத்தில் கலந்து குழைத்துஅமுத கானம் வழங்கியவர் பாபநாசம் சிவன்.



    எம் கே டி பாடிய பாடல்கள்
    கிருஷ்ணா முகுந்தா முராரே போன்ற துதிப் பாடல்களில் இவர்சம்ஸ்கிருத சொற்களையே அதிகம் கையாண்டார். இன்றும் பக்தர்கள்தவறாமல் கேட்கும் பாடல் இது.
    எம்.கே.தியாகராஜர் நடித்துப் பாடி இவர் எழுதிய பாடல்கள் தமிழும்சம்ஸ்கிருதமும் கலந்த ஒரு அழகிய சங்கமம். காலத்தால் வெல்லமுடியாத இந்தப் பாடல்களின் பட்ட்டியலை எழுதத் தொடங்கினால் அதுஒரு தனி நூலாக விரியும்.

    ஆக இப்படி தமிழ் திரைப்படங்கள் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை சம்ஸ்கிருதம் உரிய இடத்தை தமிழ் திரைப்படங்களில் பெற்றுக்கொண்டே தான் இருக்கிறது.
    நம் கலைஞர்களுக்கு மொழிப் பற்று உணடு; மொழி வெறி இல்லை. இந்த நல்ல போக்கு எதிர்காலத்திலும் தொடரும்; தொடர வேண்டும்.
    இதை எதிர்ப்பவர்கள் அரசியலில் தமிழை வணிகமாகப் பயன்படுத்தும்சுயநலமிகள் என்பதை நன்கு அறிந்து கொண்ட தமிழர்கள் அவர்களைகாலம் தோறும் உதாசீனப்படுத்தி வருவதையே இது காட்டுகிறது
    தமிழும் சம்ஸ்கிருதமும் நமக்கு இரு கண்கள்
    நமது நோக்கம் தெளிவானதாக இருத்தல் வேண்டும். தமிழும் சம்ஸ்கிருதமும் இந்தியராகிய நமக்கு இரு கண்கள்.
    தமிழை உலகத்தின் தலையாய அழகிய மொழி என்பதைஆதாரங்களுடன் தருவோம்; நம் மொழியை இன்னும் அதிக வளம்வாய்ந்த செழுமை மொழியாக ஆக்குவோம். அதே நேரத்தில்சம்ஸ்கிருதத்தைக் கற்று நம் பண்பாட்டை இன்னும் அதிகமாக வேரூன்றவைப்போம், இதற்கு திரைப்படமும் ஒரு கருவி என்பதால் அதிலும் இதேகொள்கையைக் கடைப் பிடிப்போம்!
Working...
X