Announcement

Collapse
No announcement yet.

வியக்க வைக்கும் விஷயங்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வியக்க வைக்கும் விஷயங்கள்


    மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

    பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

    உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

    ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்துவிடலாம்.

    மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

    பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

    பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

    நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

    நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

    ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

    தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

    முன்னாள் பின்னல் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

    தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.

    மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண்கிருமிகள் வாழ்கின்றன.

    புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் - சுறாமீன்.

    நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் - சுறாமீன்.

    தயிராக மாற்ற முடியாத ஒரே பால் - ஒட்டகப்பால்

    ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் - கங்காரு எலி.

    துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.

    பின்புறமாக மரம் ஏறும் விலங்கு - கரடி.

    சுமார் 34 கோடி ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதையுண்ட பற்பல மாற்றங்களுக்கு உட்பட்டு நிலகரியாகமாறுகிறது. அதுதான் பின் வைரம் கிடைக்கிறது.

    ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.

    சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.

    ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

    குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.

    சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதைகணக்கிட்டுள்ளனர்.

    அரசர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு பணிபுரிய அவர்களின் பணியாட்களையும் கொன்று அரசருக்கு உதவியாக பிரமிடுகுள்புதைத்துவிடுவார்கள்.

    சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.

    பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

    நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.

    நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க...
    ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.

    தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.

    காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள்தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும்.
    மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு - சிங்கம்.

    "லங்கா வீரன் சுத்ரா " என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.

    தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு - ஒட்டகம்.

    பன்னீர் பூ இரவில்தான் பூக்கும்.

    இலைகள் உதிர்க்காத மரம் - ஊசி இலை மரம்.

    காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும்.

    குளிர் காலத்தில் குயில் கூவாது.

    எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
    அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.

    லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
    அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

    கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரைஉயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.

    கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.

    யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

    கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம்
    மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

    1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.

    ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் - ஈரிதழ்சிட்டு.

    வால்ட் டிஸ்னி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.

    ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

    பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம்பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள்11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.

    ஒட்டகம் ஒரே சமயத்தில் ௦90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.

    தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான் கராத்தே வீரர் ஆனார் - புருஸ்லீ.

    காரல் மார்க்ஸ் தனக்கு பிடிக்காத பக்கங்களை எல்லாம் புத்தகத்தில் இருந்து கிழித்துவிடுவாராம். தன் நூலகத்தில் கிழியாத பக்கங்களை உடைய புத்தகம் எதுவும் கிடையாது. தாஸ் காப்பிட்டல் நூல் எழுத அவருக்கு 14 ஆண்டுகள் தேவைப்பட்டது.

    சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.

    விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

    சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
    யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.
    நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
    டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்
    புழுக்களுக்கு தூக்கமே கிடையாது.

    மரங்கொத்தி பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தை கொத்தும்.

    நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

    எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்கும்.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: வியக்க வைக்கும் விஷயங்கள்

    ஒரே சிட்டா (தேன் சிட்டு, ஈரிதழ் சிட்டு-ன்னு)போட்டுருக்கீங்க....

    இதுல எனக்கு சில உண்மை தெரிஞ்சாகனும்....

    ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் - கங்காரு எலி.
    கங்காரு, எலி - யா? இல்லை கங்காரு எலி - ன்னே ஒண்ணு இருக்கா?

    சுமார் 34 கோடி ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதையுண்ட பற்பல மாற்றங்களுக்கு உட்பட்டு நிலகரியாகமாறுகிறது. அதுதான் பின் வைரம் கிடைக்கிறது.
    மண்ணில் எது புதையுண்டது?


    அரசர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு பணிபுரிய அவர்களின் பணியாட்களையும் கொன்று அரசருக்கு உதவியாக பிரமிடுகுள்புதைத்துவிடுவார்கள்.
    இவ்வாறு பிரமிடுக்குள் புதைக்கும் வழக்கம் எந்த நாட்டில் எப்போது இருந்தது?

    நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.
    அப்படியெண்டால், ஐந்து வயது குழந்தைகள் சுமார் 500; ஆறு வயது குழந்தை சுமார் 600 கேள்விகள் கேட்குமா? - ஹி.. ஹி.... கோவிக்காதீங்க சும்மா தமாசு....

    "லங்கா வீரன் சுத்ரா " என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.
    எந்த மொழியில்? யாரால்? எப்போது?

    இலைகள் உதிர்க்காத மரம் - ஊசி இலை மரம்.


    காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும்.


    குளிர் காலத்தில் குயில் கூவாது.

    இதெல்லாம் மெய்யாலுமா? புதுசா/ஆச்சர்யமா இருக்கு!!!!???

    எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்கும்.
    அப்படியா? அதான் ஒரு விளம்பரத்துல எறும்பு சர்கரை/சக்கரை மூட்டையை தூக்கிட்டு போறாமாதிரி காட்றாங்களா? ம்.... பார்ரா....

    Comment


    • #3
      Re: வியக்க வைக்கும் விஷயங்கள்

      நிறைய வியக்க வைக்கும் விஷயங்கள்தான் அருமையான collection மாமா
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment


      • #4
        Re: வியக்க வைக்கும் விஷயங்கள்

        wonderful collection sir how could you manage both your time and message collection

        Comment

        Working...
        X