Announcement

Collapse
No announcement yet.

ஒரு வீட்டுக்குள்ளே....

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஒரு வீட்டுக்குள்ளே....

    ஒரு வீட்டுக்குள்ளே....


    ஒரு வீட்டுக்குள்ளே இவ்வளவு விஷயம் இருக்குது !
    அந்தக்காலத்தில் ஒரு வீட்டை வைத்தே வாழ்க்கை பாடம் நடத்தினர். படி, நடை, கூடம், முற்றம், வெளி என பல பகுதிகள் வீட்டுக்குள் இருக்கும். முதலில் வாழ்வில் நல்லது எது கெட்டது எது என்பதை தெரிந்து கொள்ள படிக்க வேண்டும். படிப்படியாக வாழ்வில் ஏறுவதற்கு படிக்கட்டும், படிப்பும் ஒருவனுக்கு துணை செய்கிறது. படியில் ஏறினால் வருவது நடை ( வீட்டு வாசல் ). படித்ததைப் பின்பற்றி மனிதன் அதன்படி நடக்க வேண்டும். நடையின் முடிவில் கூடம் ( ஹால் ) வரும். எல்லோரும் ஒன்று கூடும் இடம் கூடம். நல்வழியில் நடப்பவர்கள் எல்லாம் சமுதாயத்தில் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். இதையே, 'சத்சங்கம், நல்லார் இணக்கம்' என்று சொல்வார்கள். கூடத்திற்கு அடுத்தது முற்றம். வாழ்வில் லட்சியம் முற்றுப் பெறுவது போல வீடும் முற்றத்தில் முடிவுறும். அடுத்தது கொல்லைப்புறம் என்னும் வெளிப்பகுதி. இறுதியில் மனிதன் கடவுள் என்னும் பெரு வெளியில் கலந்து விடுகிறான்.
    -- தினமலர் ஆன்மிக மலர். கோவை பதிப்பு . நவம்பர் 4, 2014 இதழுடன் இணைப்பு.
    -- இதழ் உதவி : K. கல்யாணம், சிறுமுகை ( கோவை ).
    Posted by க. சந்தானம்
Working...
X