Announcement

Collapse
No announcement yet.

Guru bhakti - story

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Guru bhakti - story

    Courtesy: SRI. KS.Ramki
    "குருவருள் மற்றும் குருவின் உபதேசம் எவ்வளவு முக்கியமானது என்று நம்மக்கு உணர்த்தும் ஒரு கதை"
    முன்பு ஒரு காலத்தில் ஒரு குரு இருந்தார் அவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட சீடர்கள் இருந்தார்கள். அவர் எப்பொழுதுமே சீடர்களுக்கு தனது பாடத்தை காலையிலும் மாலையிலும் சொல்லிக்கொடுப்பது வழக்கம். யோக கலை மற்றும் தியானம் போன்றவை இவற்றில் உள்ளடங்கும். அவரிடம் ரிஷபன் என்ற ஒரு சீடன் இருந்தான், அவனுக்கு எவ்வளவு பாடம் சொல்லிக்கொடுத்தும் அவனுக்கு குரு சொல்லிக்கொடுப்பது புரியவில்லை மாறாக அவன் குருவிடம் கேட்கும் சந்தேகங்கள் எல்லாமே கேலி கூத்தாகி மற்ற சீடர்கள் எல்லாம் அவனை பரிகாசம் செய்ய தொடங்கினர். குருவிற்கு இது மிகுந்த மனஉளைச்சலை கொடுத்தது, குருவும் தன்னால் முயன்ற வரை போராடினார் ஆனால் இந்த சீடனோ மர மண்டை என்று சொல்லுவார்களே அதுபோன்று ஒன்றும் புரிந்து கொள்ளமுடியாமல் இருந்தான், இவனை இப்படி கேலி கூத்தவதற்கு பதிலாக இவனை தனது குருகுலத்திலிருந்து அனுப்பிவிட முடிவு செய்தார்.
    ஒரு நாள் இவனின் பரிதாபமான நிலையை பார்த்து குரு அவனை அழைத்தார், அவனிடம் நீ இந்த பாட முறைக்கு தகுதி இல்லாதவன் ஆகையால் இந்த குருகுலத்தை விட்டு தாம் அவனை அனுப்ப போவதாக கூறினார். அதற்கு அவன் தான் குருவின் விருப்பப்படியே செய்வதாகவும் போகும் பொழுது தனக்கு ஒரு மந்திரத்தை சொல்லிக் கொடுக்கும் படியும் கேட்டான், குருவோ இவனுக்கு என்ன மந்திரத்தை சொல்லிக்கொடுப்பது என்று குழப்பம். ஏனெனில் இவனால் எதையும் புரிந்துகொள்ள முடியாது என்பதினால் தான் இவனை குருகுலத்தை விட்டு விலகச்சொன்னார். குருவிற்கு ஒரே சங்கடம் இருந்தாலும் இந்த சீடனோ ஆசையோடும் பக்தியோடும் அவரை கேட்கின்றான் அவரோ சரி என்று அவனை அழைத்து அவனது காதில் " வா நந்தி போ நந்தி " என்று உபதேசித்து இதை ஒரு மண்டலம் கடும் தாவதோடு ஜபம் செய்து வந்தால் நினைத்த காரியம் கைகூடும் என்றார்.
    ரிஷபனோ தனக்கு ஒரு மந்திரம் கிடைத்துவிட்டது என்று எண்ணி சந்தோஷமாய் குரு சொல்லிக்கொடுத்த மந்திரத்தை சொல்லி தவம் செய்ய தொடங்கினான். நாட்கள் நகர்ந்தன, ஒரு மண்டலமும் முடிந்தது. ரிஷபன் குருவை பார்க்க ஓடோடி வந்தான். குரு ஆழ்ந்த தியானத்தில் இருந்ததால் அவர் கண் விழிக்கும்வரை அங்கேயே அமர்ந்திருந்தான். குருவும் தியானத்தை முடித்து கண்விழித்து பார்த்தார், உடனே ரிஷபன் குருவிடம் குருவே தாங்கள் மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் என்றும் தான் நந்தி தேவரின் காட்சி காண பெற்றதாகவும் கூறினான், இதை கேட்டவுடன் குருவுக்கு ஒன்றுமே புரியவில்லை, பெரும் குழப்பம் அவரால் நம்ப முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை, ஏனென்றால் ரிஷபன் வெகுளி ஆனால் பொய் சொல்லமாட்டான் என்பது அவர் நன்கு அறிவார்.
    ஆனால் அவருக்கு குழப்பம் என்னவென்றால் எவ்வளவோ கடும் தவம் புரிந்து மந்திர தந்திரங்களை கற்ற தமக்கே இன்னும் கடவுள் காட்சி தரவில்லை , ஆனால் "வா நந்தி போ நந்தி" என்று தாம் கூறிய சிறு வார்த்தை அதுவும் சீடனை வெளியேற்றுவதற்காக கூறிய ஒரு சாதாரண சொல் அதனால் எப்படி இவன் நந்தி தேவரின் அருளை பெறமுடியும். இப்படி பல குழப்பங்கள் அவரின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது இருந்தாலும் அவரின் குழப்பத்தை சீடனிடம் காட்டிக்கொள்ளாமல், அவனிடம் நீ ஏதோ கனவு கண்டிருக்கிறாய் உனக்கு இவ்வளவு குறுகிய காலத்தில் கடவுளில் காட்சி சாத்தியமே இல்லை என்று கூறினார். ஆனால் சீடனோ தாம் கடும் தவம் இருந்ததாகவும் தவத்தின் போது நந்திதேவன் காட்சி அளித்ததாகவும் வேண்டியவரத்தை கொடுத்ததாகவும் கூறினான். குருவுக்கு பைத்தியமே பிடிக்கும் போல் ஆகிவிட்டது, அவரால் நம்பவும் முடியவில்லை நம்பாமலிருக்கவும் முடியவில்லை , என்னடா இது இவ்வளவு ஆச்சாரம் , பூஜைமுறைகள் , கடுந்தவம் என்று இருந்த தமக்கே இதுவரை தெய்வம் காட்சி தரவில்லை. ஆனால் இந்த சீடனுக்கு அதுவும் தாம் இவன் எதற்கும் உதவமாட்டான் என்று நினைத்து ஒரு வார்த்தை சொல்லிக்கொடுத்தால் இவன் நம்மிடம் கடவுளை பார்த்தேன்! வரம் பெற்றேன்! என்று கூறுகிறான் என்ன நடந்திருக்கும், எப்படி இது சாத்தியம் என்றெல்லாம் யோசித்தார்.
    அவருக்கு ஒரு யோசனை , இவன் ஒருவேளை நந்திதேவரை பார்த்திருந்தால், அதனை பரீட்சை செய்து பார்க்கவேண்டும் என்றும் எண்ணினார். அதன்படி தனது சீடனை அழைத்து ரிஷபா நீ சொல்வதெல்லாம் என்னால் நம்ப முடியவில்லை நீ சொல்வது உண்மையானால் அதை என்னிடம் நிரூபித்துக்காட்டு என்று சொன்னார். அதற்கு ரிஷபன் அப்படியே ஆகட்டும் குருவே என்று சொல்லி குரு சொல்லிக்கொடுத்த வா நந்தி மந்திரத்தை சொன்னான். என்ன ஆச்சரியம் உடனே அந்த இடத்தில் நந்தி தேவன் வந்து காட்சியளித்தார். அது மட்டுமின்றி தன்னை அழைத்ததின் நோக்கம் என்ன என்று கேட்டார் உடனே இந்த சீடன் என்குருவுக்கு நீங்கள் காட்சி அளிக்கவேண்டும் என்பதற்காகவே தாம் அழைத்ததாக கூறினான். குருவுக்கு ஒன்றும் புரியவில்லை இரு கை கூப்பி நந்தியை வணங்கினார் பின்பு நந்தியிடம் தாம் எவ்வளோவோ தவங்கள் செய்துள்ளதாகவும் தமக்கு ஏன் இறைவன் காட்சி கொடுக்கவில்லை என்றும் கேட்டார்.
    அதற்கு நந்தி ……நீங்கள் இந்த சீடனிடம் சொல்லிக்கொடுத்த மந்திரம் ஒன்றுமில்லை அது வெறும் ஒரு சொல் வா நந்தி போ நந்திஅவ்வளவுதான் ஆனால் அந்த வார்த்தையை மந்திரமாக நினைத்து முழு மனதுடன் இந்த சீடன் தவமிருந்தார். முதலில் நானும் இதை விரும்பவில்லை ஏற்கவுமில்லை. ஆனால் இவன் தொடர்ந்து இதே வார்த்தையை சொல்லி தவம் செய்ததினால் சிவபெருமான் என்னை அழைத்து இவனுக்கு காட்சி அளித்து வேண்டியதை அருளுமாறு என்னிடம் கூறினார். அதற்கு நானோ இவன் வெறும் வார்த்தையை உச்சரிக்கிறான் அதனால் நான் ஏன் காட்சியளிக்கவேண்டும் வரத்தை கொடுக்க வேண்டும் என்றுகேட்டேன், அதற்கு சிவபெருமான் கூறியதாவது
    "இவன் சொல்லும் வார்த்தை எப்பொழுது குருவின் உபதேசத்தால் வந்ததோ அப்பொழுதே இது மந்திரமாகிவிட்டது"
    மேலும் இவனின் குருபக்தி, குருமேல் வைத்திருக்கும் நம்பிக்கை இந்த சொல்லுக்கு பரிபூரண மந்திரசக்தியை கொடுத்துவிட்டது , எதை குரு சொல்லிக்கொடுத்தாரோ அதையே அப்படியே அவன் ஜபம் செய்து தவம் செய்தான் ஆகையால் நீ அவனுக்கு காட்சியளிக்கும் கட்டாயத்தில் இருக்கின்றாய். ஒருவேளை நீ அவனுக்கு காட்சிதர மறுத்தால் அவன் சாகும் நிலைக்கு தள்ளப்படுவான் அந்த பாவம் உன்னையே சேரும் என்று அறிவுரை வழங்கினார். தானும் சிவபெருமானின் அருளுரைப்படியே இவனுக்கு காட்சியளித்ததாக கூறினார். மேலும் எந்த ஒரு காரியமும் கைகூட ஒரு குருவின் அருள் மிகவும் முக்கியம் என்பதையும் இதனால் அனைவரும் தெரிந்து கொள்ளவர்கள் என்று கூறி விடைபெற்று கொண்டார்.
Working...
X