Announcement

Collapse
No announcement yet.

கனிமங்கள் -- 2.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கனிமங்கள் -- 2.

    வேகமாய் சாகிறது பூமி !


    'கன்னியாகுமரி கடல் பகுதியை லட்சத்தீவு கடல் என்கிறார்கள். உண்மையில் அதை குமரிக் கடல் என்றுதான் அழைக்கவேண்டும், ஏனெனில், கன்னியாகுமரி கடலில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு அழிந்துபோன சங்கத் தமிழ் நகரங்களின் எச்சங்களும் மலைத் தொடர்களும் மூழ்கிக்கிடக்கின்றன. இந்த இடிபாட்டுப் பகுதியில் சுறாக்கள் இனப் பெருக்கம் செய்ய உகந்தவை. கடலில் உள்ள நீரோடங்களை நன்கு அறிந்தவை ஆமைகள். செயற்கைக் கோள் உதவியுடன் ஆமைகளை ஆராய்ந்ததில் ஓர் உண்மை தெரிந்தது. ஆமைகள் தமிழகக் கடலில் பாயும் நீரோட்டங்களின் வழியே நீந்தாமல் மிதந்து சென்றே பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து பல்வேறு நாடுகளைச் சென்றடைகின்றன. இது இன்று நேற்று நடப்பதல்ல. 63 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசருக்கு இணையான மூதாதையரான இந்த ஆமைகள். காலம் காலமாக இப்படித்தான் கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களை முட்டையிட தேடிச் செல்கின்றன. ஆமைகள் அப்படிச் செல்லும்போது அதனைப் பின் தொடர்ந்து சென்று கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களைக் கண்டுபிடித்து தொழிலையும் நாகரிகத்தையும் உலகில் முதன்முதலில் வளர்த்தது தமிழர்கலே. இன்றும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 1,300 தமிழ்ப் பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன. ஆனால், இன்று அந்த ஆமைகளைப் பெருமளவு அழித்துவிட்டோம். கடலின் நீரோட்டங்களில் பல்வேறு வண்ணங்களில் அடித்துவரும் பிளாஸ்டிக் கழிவுகளை ஜெல்லி மீன்கள் என்று நினைத்துச் சாப்பிடும் ஆமைகள் இறந்துபோகின்றன.
    -- கடல் ஆராய்ச்சியாளரான ஒடிசா பாலு, கூறக் கேட்டது.
    -- டி.எல். சஞ்சீவிகுமார்.
    -- ஆனந்த விகடன். 13-2-2013.
Working...
X