Announcement

Collapse
No announcement yet.

நாளைய உலகம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாளைய உலகம்

    அமேசான் ஸ்டிக்
    இனி வரும் காலங்களில் படங்களையும் நிகழ்ச்சிகளையும் பார்க்க கேபிள் டி.வி., டிஷ் ஆன்டனா என்று அலைய வேண்டியதில்லை. கையளவு சாதனத்தில் கடலளவு வீடியோக்களை பார்க்கலாம். இதற்காக, அமேசான் நிறுவனம் அமேசான் ஸ்டிக் என்னும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. கிட்டதட்ட ஒரு பென்ட்ரைவ் அளவு உள்ள அந்த சாதனத்தை டி.வி.யின் யுஎஸ்பி போர்ட்டில் இணைத்துவிடலாம். பிறகு அதன்மூலம் ஆயிரக்கணக்கான படங்களையும் டி.வி.சேனல்களையும் பார்த்து மகிழலாம். இந்த அமேசான் ஸ்டிக் விரைவில் அமெரிக்க சந்தையை தொடயுள்ளது.
    வைப்ரேஷனாகும் வார்த்தை
    காது கேளாதவர்களுக்கு உதவுவதற்காக வந்திருக்கிறது வெஸ்ட் ( versatile extra - sensory transducer ) எனப்படும் புதிய சாதனம். இதன்மூலம் ஒருவர் பேசுவதை அதிர்வாக ( வைப்ரேஷன் ) மாற்ற முடியும். வாய்பேச முடியாதவர்கள், காதுகேளாதவர்கள் தங்களின் மேலாடையில் ஒரு பேட்ஜை போல இதைக் குத்திக்கொள்ளலாம். அதில் உள்ள ஸ்பீச் ரெகக்னைசிங் கருவி வெளியிலிருந்து வரும் சப்தங்களை உள்வாங்கிக்கொள்ளும். பிறகு அந்த சப்தத்துக்கு ஏற்ப அதிர்வலைகளை ஏற்படுத்தும். தற்போது ஆங்கிலத்தில் எட்டிப்பார்த்திருக்கும் இந்த கருவி, விரைவில் பல மொழிகளிலும் வரவுள்ளதாம்.
    -- மா.மணிகண்டன். ( ரிலாக்ஸ் ).
    -- 'தி இந்து' நாளிதழ். செவ்வாய், டிசம்பர் 2, 2014.
Working...
X