Announcement

Collapse
No announcement yet.

அஷ்டமங்கலப் பொருட்கள்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அஷ்டமங்கலப் பொருட்கள்!

    1. சாமரம், 2. நிறைகுடம், 3. கண்ணாடி, 4. அங்குசம், 5. முரசு, 6. விளக்கு, 7. கொடி, 8. இணை மீன்கள். இந்த எட்டுப்
    பொருள்களும் மங்கலப் பொருட்கள் என்கின்றன புராணங்கள்.
    இருந்தும் பயனற்றவை!
    புண்ணியத் தலங்களுக்குச் சென்று வராத கால்கள், ஆண்டவனைக் குனிந்து வணங்காத தலை, கெஞ்சிக்கேட்பவனுக்கு உதவாத கைகள், நல்லவர்களின் அறிவுரைகளைக் கேட்டு உள்வாங்காத காதுகள், எடுத்த காரியத்திற்கு உழைக்காத உடல் ஆகிய யாவையும் இருந்தும் பயனற்றவை.
    அஷ்ட தனம்.
    ஆணோ, பெண்ணோ ஒருவரிடம் இருக்க வேண்டிய எட்டு செல்வங்கள் அஷ்ட தனம் எனப்படும், அவை :
    1. ரூபம் அல்லது அழகு, 2. சம்பத்து ( சொத்து முதலானவை ), 3. வித்தை ( பெற்றுள்ள திறமைகள் ), 4. விவேகம்
    ( அறிவுத்திறனும் பண்பும் ), 5. குணம் ( நற்குணம் ), 6. தனம் ( பொன், பொருள் ), 7. குலம், 8. வயது ( ஆயுள் ).
    -- குமுதம் பக்தி ஸ்பெஷல். நவம்பர் 16-30, 2013.
Working...
X