Announcement

Collapse
No announcement yet.

Meaning of Saptapadi mantram

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Meaning of Saptapadi mantram

    Courtesy: Sri.Balasubramanian Vaidyanathan


    ஏகம் இஷே விஷ்ணுஸ்த்வா அன்வேது - முதலாம் அடியில் வளத்திற்காக விஷ்ணு உன்னை பின்தொடரட்டும்
    த்வே ஊர்ஜே-இரண்டாம் அடியில் வலிமைக்காக(ஊர்ஜே),
    த்ரீணி வ்ரதாய - மூன்றாம் அடியில் விரதங்களை (வ்ரதாய) மேற்கொள்ள,
    சத்வாரி மாயோபவாய - நான்காம் அடியில் இன்பத்தை (மாயோபவ) அளிக்க,
    பஞ்ச பஷுப்ய - ஐந்தாம் அடியில் பசுக்களுக்காக(பஷுப்ய - பசுக்கள் செல்வத்தைக் குறிக்கும்),
    ஷட்ருதுப்ய - ஆறாம் அடியில் பருவங்களுக்காக (ருதுப்ய),
    ஸப்த ஸப்தப்யோ ஹோத்ராப்யோ - ஏழாம் அடியில் (நல்விஷயத்தை) எழுந்தருளச் செய்யவும் (ஹோத்ராப்யோ - invocation)
    விஷ்ணுஸ்த்வா அன்வேது - விஷ்ணு உன்னை பின்தொடரட்டும்.
    ஸகா ஸப்தபதா பவ - ஏழு அடிகள் நடந்தவள் என் தோழி ஆகட்டும்
    ஸகாயௌ ஸப்தபதா பபூவ - இணைந்து ஏழடிகள் நடந்த நாமிருவரும் நண்பர்களாக இருப்போம்.
    ஸக்யம் தே கமேயம் - நட்புடன் உன்னுடன் செல்லவேண்டும்
    ஸக்யாத் தே மாயோஷம் - பெண்ணின் (உன்) நட்பினின்று நான் விலகாமல் இருப்பேனாக
    ஸக்யான்மே மா யோஷ்டா - என் நட்பினின்று நீ விலகாமல் இருப்பாய்
    ஸமயாவ ஸங்கல்பாவஹை ஸம்ப்ரியௌ ரோசிஷ்ணூ ஸுமனஸ்யமானௌ - நல்லமனதுடன் ப்ரியத்துடன் மகிழ்ந்திருக்கும் நம்மிருவராலும் சங்கல்பம் (தீர்மானமான முடிவு) செய்யப்படட்டும்.
    இஷமூர்ஜமபிஸம்வஸானௌ ஸம் னௌ மனாம்ஸி ஸம் வ்ரதா ஸமுசித்தானயாகரம் - வளமுடன் வலிமையுடன் நல்ல மனத்துடன் நல்ல வ்ரதங்களை இணைந்து மேற்கொண்டு வாழ்வோம்
    த்வம் த்யௌரஹம் ப்ருதிவீ - நீ வானுலகம், நான் பூமி
    ரேதோஹம் ரேதோப்ருத்த்வம் - ரேதஸ் (வீர்யம் -Semen) நான், ரேதஸை ஏற்பவள் நீ
    மனோஹமஸ்மி வாக்த்வம் - மனம் நான், சொல் நீ
    ஸாம அஹம் அஸ்மி, ருக் த்வம் - ஸாம கீதம் நான், அதற்கடிப்படையாக உள்ள ருக் நீ
    ஸா மாம் அனுவ்ரதா பவ - அவள் என்னைப் பின்தொடர்பவளாக இருக்கட்டும்
    பும்ஸே புத்ராய வேத்தவை ஶ்ரியை ப்ரஜாய வேத்தவ ஏஹி ஸுந்ருதே - ஆண்மை உடைய, ஶ்ரேயசான குழந்தைகளை அடைவோம், மகிழ்வுடன் அருகே வா...
    ஸப்தபதி மந்த்ரம் - தைத்ரிய ப்ராஹ்மணம் - ஏகாக்னி காண்டம்


Working...
X