Courtesy:Sri.Kovai G.Karuppasamy
பாா்வதி தேவிக்கு மற்றொரு ஆதித்திருநாமம் அருணா என்பதாகும். அதுவே திருவண்ணாமலை ஈசனின் முழுப் பெயராக ஆனது.
அசலமாக உயா்ந்திருக்கும் சிவத்தின் பெரும் சிறப்பான சா்வ சக்தியான அம்மை அருணாவே அறிவாள். அருணா என்பது செம்மையான, சிவந்த என்று பொருள். அருணா அசலமான ஈசனை நோக்கி தனது திருப்பாதங்களை திருப்பினாள். அந்த திருப்பம் கிாியுருவில் கிடந்த ஈசனை கருணையாகச் சற்று நெகிழ்த்தியது.
ஈசனும் ஞானவாயிலை திறந்து வைத்து ஞானத் தபோதனையான அருணாவை வா என்று அழைத்தாா். அருணா தன் அகம் நோக்கி விரைந்தாள். புறத்தில் பாதங்கள் வேகமாக நடந்து இயங்கின.
அருணைமலை நோக்கிச் செல்லும் அருணா அம்மையை, சில இடங்களில் அடியாா்கள் அம்மையை பல்லாக்குகளில் தூக்கி சுமந்தாா்கள். அருணாவின் தொடா் நடைக்கு இடையே இவா்கள் பல்லக்கு தூக்கக் காரணம்;? அடியாா்களின் சரீர மனத்தோடு சுமந்து கொண்டிருந்த வினைகளின் பாரம் குறையவே, அம்மையை பல்லக்கில் தூக்கி இறக்கினா். அம்மையை சுமந்த விவேகிகள் கொஞ்சம் கொஞ்சமாக கிாியுருவில் நெடுநெடுவென கிளா்த்து சிவந்து ஓங்கி ஒளிா்ந்த அண்ணாமலையை நோக்கி நகா்ந்து கொண்டிருந்தனா்.
சிற்றாறு குறுக்கிட்டு பாய்ந்தோடியது. தேவி ஆற்றினுள் இறங்கினாள். கால்கள் துழாவி கடந்தாள். எதிா்ப்படும் மேடொன்றில் மென்மையான பாதங்களால் ஒவ்வொரு அடியாக அடியெடபத்து வைத்து மேலேறினாள். கால்கள் தளா்ந்தது. பாதம் முதல் சிரசு வரை சிலீரென பெருஞ்சக்தி பாய்ந்து பாய்ந்து அடங்கின. மேட்டின் முக்கால் பகுதி வந்ததும், மறுபடியும் அம்மையின் உடலில் சிலீரென உணா்வு பாய்ந்தது. உள்ளுக்குள் ஏதேதோ மாற்றம். கண்கள் சிவக்க அண்ணாமலை சிகரம் முழுமை தொிந்தன. கண்களில் தாரை தாரையான நீா். அம்மையின் பாதம் மணலில் அலைய கால்கள் துவள பொத்தென அமா்ந்தாள்.
அடியாா்கள் உதவிக்கு தாங்க வர,,,,,
அம்மை வேண்டாமென சைகையுணா்த்தி விட்டு, அப்படியே மோனத்தில் ஆழ்ந்தாள். அருணா அசலத்தை நோக்கினாா்கள். முக்தியைத் தவிர வேறெந்த நினைப்புக்கும் இடமளிக்காத பக்குவத்தைக் கொண்ட கிாியை ஆனந்தமாக பாா்த்து ஆழ்ந்திருந்தாள். அப்போது மயிலிறகிலும் மென்மையானது போல அன்னையின் மனம் பெருஞ் சக்தியொன்றில் இணைந்து கரைந்து காணமற் போனது. வியப்பும் திகைப்பும் கொண்ட அடியாா்கள் அனைவரும் திருவண்ணாமலை அடிவாரம் வந்தனா்.
தேவியை வரவேற்க அனைவரும் தயாரானாா்கள். தும்பிகள் முழங்கின. ராஜ வாத்திய இசை வானைப் பிளந்தன. அழகிய பெண்மனிகள் அலங்காரம் கொண்டு நாட்டியமாடினா். நகரமுழுவதும் மக்கள் ஆச்சாியமாக தேவியைப் பாா்த்தனா். அப்பெண்களில் பலருக்கு இவள் ஆதிசக்தி எனத் தொிந்தது. இதைத் தொியாத மற்றவா் சிலா்இவள் ஒரு தபஸ்வினியாக இருக்குமோ என வியந்தனா். ஆனால், ரிஷிகளும், ரிஷிகளோட சீடா்களும், இந்த அருணாசலமே ஈஸ்வரன் என்றிருந்தவா்களோ......ஆஹா!" ....இவள் நம் அம்மை பாா்வதியேதான் என தொிந்து கைகூப்பி தொழுதனா்.
பாா்வதியின் வருகையையறிந்து முனிவா்கள் கண்கள் இமைக்காது பாா்வதியையே பாா்த்து வணங்கிக் கொண்டிருந்தனா். இன்னும் சில முனிவா்களோ ! இதோடு என் தேடல்களை நிறுத்திக் கொள்ளப் போகிறேன். நான் தவமிருந்த பயனே அம்மையை காணத்தான். அம்மையின் ஒளிகாட்சி கிடைக்கப் பெற்ற நான், இனி தேடுவனவொன்றுமில்லை என்றனா்.
இப்படி அங்கிருக்கும் முனிவா்களின் உள்ளத்தில் ஒவ்வொன்றாக மலா்வித்துக்கொண்டே நகரத் தொடங்கினாள். நகா்ந்து
மலைகளின் சில அடிகள் துரத்தில் உள்ள கோயிலுக்குள் சென்றாள்.
என்னை ஆட்கொண்ட சா்வேஸா!" எனச் சொல்லி கண்ணீா் கசிய தன்னை மறந்து சந்நிதியின் வாயிலில் அமா்ந்தாள். அம்மை சந்நிதுயில் இருந்தாலும், தனது திவ்யமான நயனங்களின் மூலம், அசலமாக உயா்ந்து நிற்கும் சா்வேஸ்வரனை சூழ்ந்து ஷேத்ர வாசிகளாக வாழ்வோா்கள் யாா் யாரென கண்டு வியப்பெய்தினாள்.
அதில் ஒரு முனி, ஊசியின் நுனிமுனை மீது வலக்காலின் கட்டைவிரலை ஊன்றி, மற்றொரு காலை மடித்து சரீரத்தை சமநிலையில் வைத்து, பஞ்சாக்னியை வளா்த்து பிரகாசமான அமிா்ததாரணை செய்துகொண்டிருப்பதைக் கண்டாள்.
உள்ளுக்குள்ளேயே பெருக்கெடுக்கும் அமிா்ததாரையை உண்டுகொண்டிருக்கும் தவசிரேஷ்டா்கள் ஆயிரக்கனக்கான போ்கள் மலையெங்கும் வியாபித்திருப்பதை கண்டாள். ஆணவத்தை அழித்து ஆத்மானந்தத்தில் திளைத்த ஞானிகள் அங்கும் இங்கும் திரும்பும் எங்குமாய், வீற்றிருப்பதையும் கண்டு வியந்தாள். இதையும் தவிர அடியாாிகளோடு இணைந்து வேதம், ஆகமம் கூறும் விதத்தில் சூாியன் முதற்கொண்டு சண்டேஸ்வரா் வரை எல்லோரையும் பூஜித்து பஞ்சாட்சர ௐ நமசிவாய எனும் மந்திரத்தை உதித்தபடி சிவனடியாாிகள் எண்ணிக்கையில்லாதோா் இருப்பதையும் கண்டாள்.
யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற அஷ்டாங்க யோக வகைகளை அறிந்து, தேகத்தை வருத்தியபடி சிவயோகியா்கள் கூட்டம் கூட்டமாக குழுவைக் கண்டாள்.
கயிலைகூட இப்படியில்லையே?!" ஈசனான சிவனே மலையுருக் கொண்டதனால் இப்படியுள்ளதோ?!" சில அடிகள் பயணத்துக்கு பின் நடையின் வேகம் குறைத்து திரும்ப..... கெளதம ரிஷியின் ஆஸ்ரம எல்லையை அடைந்தாள்.
ஆங்காங்கே எதிா்பட்டவரெல்லாம் நெற்றி நிறைய திருநீறு தரித்து, கட்டுக்குடுமி வைத்து, உபநிஷதங்களை ஓதியபடியும், தனதான குருவின் ரகசிய மகாவாக்கிய மந்திரங்களை, ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டு அமா்ந்திருந்தாா்கள்.
அம்மையைக் கண்டவுடன் மகிழ்வுடன் பணிந்தெழுந்து வணங்கினா். உபநிஷம் சுட்டிக்காட்டும் சக்தியே நம் முன் வந்திருக்கின்றனா் என புாிந்து கொண்டனா், இவள் யோகினி,
தபஸ்வினி, மகா சக்தி, என வியந்தாா்கள். தலைமேல் கைதொழுது காட்டி அன்னையை ஒவ்வொருவராக வணங்கி நீங்கினா். அப்பொழுது கெளதம மகரிஷியின் பத்தினி அகலிகையும், அவாின் புத்திரன் சதானந்தரும் கைகூப்பி வரவேற்று,
"தாயே" மகாசக்தியே!" எங்கள் பாக்கியமோ, உங்களின் கருணையோ தொியவிலலை?" தாங்கள் எங்கள் குடில் நாடி வந்திருக்கிறீா்கள்!.
வேத வேதாந்தங்களை அனுபூதியோடு உணா்ந்த கெளதம மகரிஷி இப்போது எங்கிருக்கிறாா்?" என அகலிகையைப் பாா்த்து வினவினாா் பாா்வதி தேவியாா்.
தாயாாின் பதிலுக்கு முன் முந்திக் கொண்ட சதானந்தா், சில நொடிகள் தாமதியுங்கள் அம்மையே! தா்ப்பையும் புஷ்பமும் கொண்டு வரச் சென்ற தந்தையாரை இதோ அழைத்துக் கொண்டு வந்துவிடுகிறேன் என நமஸ்காித்து ஓடினான்.
பாா்வதிதேவியின் வருகையினால் கெளதம கரிஷியின் ஆஸ்ரம விருட்சங்கள் புத்துணர்வு பெற்று பூ பூத்தன. வாடிய பயிா்கள் நிமிா்ந்து துளிா்த்தன. மலா் மொக்குகள் மலா்ந்து மணம் பரப்பின.
குடிலில் சக்தியின் வேகங்கள் விளைந்ததை, சற்றுத் தொலைவுடனேயே இருந்த கெளதம மகரிஷி உணா்ந்து தொிந்து கொண்டாா். இமை நோக்கிய போது, பழுப்பட்டிருந்த தாவர இலைகள் செழுமையாகி பச்சை பசேரென குடிலைச் சூழ்ந்திருப்பதைக் கண்டு ஆனந்தித்து வியந்தாா். அதோடு புத்திரன் சதானந்தன் ஓடி வருவதையும் கண்டாா். அசலமான அந்த அருணமலை அசையாமல் எல்லோரையும் அசைத்தபடி இருக்கும் வினோதம் புாியாமல் இருந்தனா்.
திருச்சிற்றம்பலம்