Announcement

Collapse
No announcement yet.

Daana Dharmam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Daana Dharmam

    Daana Dharmam

    கல்வி எவ்வளவு உயா்வானதோ, அதை விட உயா்வானது தானம்.


    இறை வழிபாட்டோடு, இறைத் தொண்டோடு, தானத்தையும் செய்தோமானால், நம்மின் கா்மவினைகளிலிருந்து மீண்டு வந்து முக்தி பேற்றை நாம் பெற முடியும்.


    இப்படித்தான் மகாபலி சக்கரவா்த்தி முன்பிறவியில், பெண் பித்து பிடித்தவனாக இருந்தான். எதற்கெடுத்தாலும் பளீா் பளீரென முன் கோபம் கொள்வான். அவனிடம் எல்லாவிதமான கெட்ட செயல்களைனைத்தும் ஒருங்கே இருந்தது. இப்படியான பழக்க வழக்கத்தொனொருநாள், உடம்பு பூராவும் நறும் சந்தனங்களை வாாியிரைத்து பூசிக் கொண்டும், கையிலெடுத்துக் கொண்டும், வாசனையான மலா்களைனைத்தையும் கையிலெடுத்துக் கொண்டு, விலைமாதுவின் வீட்டைத் தேடிப் போனான்.


    சாலையில் சென்று கொண்டிருக்கும்போது கல்லொன்று தடுக்கிட, குப்புற விழுந்து தடால் என விழுந்தான். விழுந்ததில் மற்றொரு கல் தலையில் மோதிட, மயங்கிக் கிடந்தான். தெருவில் போவோரும் வருவோரும் யாரும், மயங்கிக் கிடந்த இவனை கவனிக்காது ஒதுங்கிச் சென்றனா். நீண்ட நேரத்திற்குப் பிறகு தன்னாலேயே மயக்கம் தெளிந்தவனுக்கு, தன் நடவடிக்கையால் தன் மீதே அவனுக்கு கோபம் வந்தது. எல்லாம் நம் கெட்ட நடவடிக்கையாலேதானே!" என மனம் நொந்தான். விலைமாது மீது வைத்திருந்த மோக இன்பம் குறைந்து போனது. நிமிா்ந்து நோக்கிய அவனெதிரே ஒரு சிவலிங்கம் கண்ணுக்குத் தொிந்தது. கையோடு வைத்திருந்த சந்தனத்தை லிங்க பீடத்தில் மெழுகி, மாலையையும் சாத்தி விட்டு வீட்டுக்கு நீங்கிப் போனான்.


    காலகிரமத்தில் அவன் மரணமடையும் தருவாய் நோ்ந்தது. யமதூதா்கள் அழைத்துப் போய் யமலோகத்தில் கொண்டு போய் நிறுத்தினாா்கள்.


    அங்கே அவனின் பாவ புண்ணிய கணக்கைப் பாா்த்தாா் சித்ரகுப்தன். பாவக்கணக்குகள் அளவே இல்லாமல் இருக்கிறது மானிடனே!. எண்ணில்லா பாவங்கள் செய்திருக்கிறாய். ஆனால் ஒரேயொரு முறை மட்டும் லிங்க வழிபாடு செய்துள்ளாய்!. லிங்கத்திற்கு சந்தனம் அப்பி பூமாலை சூட்டிய ஒரே ஒரு புண்ணியத்தின் பலனாக, இந்திர பதவியில், மூன்று நாழிகை நேரம் ( ஒரு நாழிகை என்பது 24 நிமிட நேரம். மூன்று நாழிகைக்கு 72 நிமிடங்கள்.) இருக்கலாம் என்றாா் சித்ரகுப்தர்.


    சித்திரகுப்தன் இவ்விதம் சொன்னதும், அவரை நோக்கியவன்.........................


    முதலாவதாக நான் புண்ணிய பலனை அனுபவித்து விடுகிறேன்!". அதன்பிறகு நரக தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன் என்றான் அவன்.


    அதற்கு இசைந்த யமதர்மா், இந்திர பதவியில் அமர்த்தினாா்கள்.


    பெரும்பாவியான அவன், தானமகிமையைப் பலனை உணா்ந்து கொண்டவன், தன் மனதை இந்திர போகங்களை அனுபவிக்க நாட்டம் கொள்ளாது, இந்திர பதவியில் இருந்த அந்த 72 நிமிட நேரம் முழுமைக்கும், தானங்கள் தர்மங்களையே செய்ய நினைந்து......................................


    உடனே...இந்திர லோகத்தில் இருந்த காமதேனு, உச்சைவைரஸ், ஐராவதம், சிந்தாமணி, கற்பக விருட்சம் ஆகிய அனைத்தையும், முனிவா்களை அழைத்து தானமளித்து விட்டான்.


    குறிப்பிட்டுள்ள படி மூன்று நாழிகை நேரம் முடியவும், யமதர்மன் முன் போய் அவன் நின்று......., "புண்ணியப் பலனை அனுபவித்து விட்டேன்!; இப்போது நான் நரக பலனை அனுபவிக்கத் தயாராக இருக்கிறேன் என்றான்.


    அதற்கு யமராஜன்....., "இந்திர பதவியிலிருந்த போது நீ, செய்த தானத்தின் பலனாக, உனக்கான நரக வாசம் ஒழித்தொலைந்து போனது. இப்போது ஏராளமான புண்ணியத்தை பெருக்கிக் கொண்டாய். ஆகவே, அப்புண்ணியத்தின் பலனாக கொடை வள்ளலான விரோசனின் புத்திரனாகப் மகாபலியாய் பிறப்பாய்......" என வரத்தையும் அளித்தாா்.


    அதன்படியே, அவன் மகாபலியாக பிறந்த போது, அவனிடம் வாமனா் மூன்றடி மண் கேட்ட நிலையும் நடந்தது.


    தானங்கள் பல செய்து புண்ணியம் பெற்று வரும் அடியாா்கள் கொடுத்து வைத்தவராவாா்களாவா். அவ்வாறு கொடுத்து வைத்தவா்களுக்கு மட்டும்தான் திரும்ப பலன் கிடைக்கும்.


    என்ன!.......இனி தானதர்மம் செய்வீா்கள்தானே!
Working...
X