Announcement

Collapse
No announcement yet.

Sambrani during pooja

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sambrani during pooja

    பு+ஜையின்போது சாம்பிராணி காட்டுவது ஏன்?
    வாசம் மிகுந்தது சாம்பிராணி. இந்த சாம்பிராணியை, பூஜை செய்யும் போது நெருப்பில் போட்டு புகையை விட்டு இறைவனுக்கு காட்டுவார்கள்.
    பாறை போல் இறுகி கிடக்கும் சாம்பிராணி கட்டிகள், தீயில் பட்டவுடன் புகையாகிப் போகிறது. அதுபோல், மனிதனின் புதாகாரமாக, மிகக் கடினமாக கிடக்கும் துன்பங்கள் எல்லாம், அக்னி உருவாக உள்ள இறைவனின் அருள் கடாட்சம் கிடைத்தவுடனே, புகையைப் போன்று லேசாகி விலகிவிடும்.
    இன்றைய கால கட்டத்தில் கட்டி சாம்பிராணியை அதிகம் பயன்படுத்துபவர்கள் இல்லை. கம்ப்யுட்டர் சாம்பிராணியை விரும்பி வாங்கி பயன்படுத்துகின்றனர். இதில் தவறு ஏதும் இல்லை. இதற்கு ஏற்பவே ஒரு கதை உண்டு.
    கூரத்தாழ்வானின் திருமகனார் பராசர பட்டர். இவர் ஸ்ரீராமானுஜருக்குப் பிறகு வைணவ உலகின் தலைமை பொறுப்பில் திகழ்ந்தவர். இவர், இறைவனுக்கு எந்த புகையும், பூவும் சமர்ப்பிக்கலாம், கண்டகாலிப் பூவும் சுட்டலாம் என்று உரை அளித்தார்.
    இதை கேட்டுக் கொண்டிருந்த சீடர் ஒருவருக்கு வருத்தம் ஏற்பட்டது. 'இறைவனுக்கு வாசனை மிகுந்த பூக்களும் புகையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறும்போது, நீங்கள் இப்படி உரை செய்யலாமா?" என்று கேட்டுவிட்டார்.
    அதற்கு பட்டர், இறைவன் எனக்கு இதைத்தான் நீ சூட்ட வேண்டும், காட்ட வேண்டும் என்று விதிக்கவில்லை. கண்டகாலிப்பு சாத்துவதற்காகப் பறிக்கப் போனால், அதில் உள்ள முட்கள் பக்தனின் கையை பதம் பார்த்துவிடும்.
    எனவே அடியார்கள் மீது கருணை கொண்டே அவற்றை வேண்டாம் என்று மறுத்தாரே ஒழிய இறைவனுக்கு விருப்பமானது விருப்பமில்லாதது என்று எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்தார்.
    பெரும்பாலும் சாம்பிராணியை வாங்கி நெருப்பில் போட்டு புகைப்பது நன்மையை தரும். வாசனை மட்டுமல்லாமல் பூச்சிகள் கூட சாம்பிராணி வாசனைக்கு வராது இறைவனுக்கு எதை படைத்தாலும் மன நிறைவுடன் செய்தால் அதுவே போதும் ...
Working...
X