Announcement

Collapse
No announcement yet.

Various devatas in Cow

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Various devatas in Cow

    பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர்என்று தெரியுமா..?
    தலை - சிவபெருமான்
    நெற்றி - சிவசக்தி
    வலது கொம்பு - கங்கை
    இடது கொம்பு - யமுனை
    கொம்புகளின் நுனி - காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகள்.
    கொம்பின் அடியில் - பிரம்மன், திருமால்
    மூக்கின் நுனி - முருகன்
    மூக்கின் உள்ளே - வித்யாதரர்கள்
    இரு காதுகளின் நடுவில் - அஸ்வினி தேவர்
    இரு கண்கள் - சூரியன், சந்திரன்
    வாய் - சர்ப்பாசுரர்கள்
    பற்கள் - வாயுதேவர்
    நாக்கு - வருணதேவர்
    நெஞ்சு - கலைமகள்
    கழுத்து - இந்திரன்
    மணித்தலம் - எமன்
    உதடு - உதய அஸ்த்தமன சந்தி தேவதைகள்
    கொண்டை - பன்னிரு ஆதித்யர்கள்
    மார்பு - சாத்திய தேவர்கள்
    வயிறு - பூமிதேவி
    கால்கள் - வாயு தேவன்
    முழந்தாள் - மருத்து தேவர்
    குளம்பு - தேவர்கள்
    குளம்பின் நுனி - நாகர்கள்
    குளம்பின் நடுவில் - கந்தர்வர்கள்
    குளம்பின் மேல்பகுதி - அரம்பெயர்கள்
    முதுகு - ருத்திரர்
    யோனி - சப்த மாதர் (ஏழு கன்னியர்)
    குதம் - லட்சுமி
    முன் கால் - பிரம்மா
    பின் கால் - ருத்திரன் தன் பரிவாரங்களுடன்
    பால் மடி - ஏழு கடல்கள்
    சந்திகள் - அஷ்ட வசுக்கள்
    அரைப் பரப்பில் - பித்ரு தேவதை
    வால் முடி - ஆத்திகன்
    உடல்முடி - மகா முனிவர்கள்
    எல்லா அவயங்கள் - கற்புடைய மங்கையர்
    சிறுநீர் - ஆகாய கங்கை
    சாணம் - யமுனை
    சடதாக்கினி - காருக பத்தியம்
    வாயில் - சர்ப்பரசர்கள்
    இதயம் - ஆகவணியம்
    முகம் - தட்சரைக் கினியம்
    எலும்பு, சுக்கிலம் - யாகத் தொழில்
    அனைத்தும் பிரம்மதேவன் பசுவைப் படைத்தவுடன் அதன் ஒவ்வொரு உறுப்புகளிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் இடம் அளித்தார்.
    ஆனால் லட்சுமி தேவி காலம் தாழ்த்தி வந்து தான் வாசம் செய்யவும் பசுவிடம் இடம் கேட்டாள்.
    அப்போது பசு லட்சுமிதேவியிடம், 'நீ சஞ்சல குணம் உள்ளவள்.
    எனது அவயங்களில் எல்லா இடங்களும் அனைவருக்கும் ஒதுக்கப்பட்டு விட்டது.
    கழிக்கும் இடம் மட்டுமே மீதம் உள்ளது' என்று சொன்னது.
    லட்சுமி தேவியும், 'அந்த இடத்தையாவது எனக்கு ஒதுக்கித் தர வேண்டும்' என்று கேட்டுக் கொண்டதோடு, பசுவின் குதத்தில் தனக்கான இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்தாள்.
    லட்சுமி தேவியைப் போலவே ஆகாயகங்கையும் தனக்கான இடமாக பசுவின் சிறுநீரைத் தேர்ந்தெடுத்தாள்.
    அதனால்தான் பசுவின் சாணம் லட்சுமியின் அம்சமாகவும், சிறுநீர் கங்கையின் அம்சமாகவும் கருதப்படுகிறது.
    ஓம் காமாதேனுவே போற்றி!

  • #2
    Re: Various devatas in Cow

    EXCELLANT INFORMATION. AS BRAHMINS WE ALL SHOULD KNOW THIS INFO.

    Comment

    Working...
    X