Announcement

Collapse
No announcement yet.

Ambalapuzha

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Ambalapuzha

    Ambalapuzha


    Krishna Janmastami Special - அம்பலப்புழை கிருஷ்ணருக்கு பால் பாயச நைவேத்தியம்

    கேரளாவில் ஆலப்புழை அருகே உள்ள அம்பலப் புழை ஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். ஸ்ரீகிருஷ்ணர். இவருக்கு பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட, நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. ஒரு லிட்டர் பாலில் இரண்டரை கிலோ சர்க்கரையைக் கலந்து, பால் சுண்டக் காய்ச்சப்பட்டு, கண்ணனுக்கு பால் பாயசம் தயாராவது விசேஷம்!


    Krishna Janmastami Special - கண்ணன் கூத்து!


    ஸ்ரீகண்ண பரமாத்மா ஆடிய கூத்துக்கள் மூன்று. மதம் பிடித்த யானையின் தந்தத்தை ஒடித்தபோது ஆடியது அல்லியக் கூத்து எனப்படுகிறது.


    பேரன் அநிருத்தனை அசுரன் ஒருவன் சிறைப்பிடித்து வைத்தபோது, பஞ்சலோகத்தால் ஆன குடத்தைத் தலையில் வைத்தபடி ஆடியது குடக்கூத்து.


    வாணன் எனும் அசுரனைப் போரிட்டு அழித்தபோது ஆடியது மல்லாடல் கூத்து என்பார்கள்!




    Krishna Janmastami Special - கீதை தந்த தலம்


    ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு கீதோபதேசம் அருளிய இடம், குருக்ஷேத்திரத்தில் உள்ள ஜியோதிசரஸ் ஆகும். கண்ணன் தனது அவதாரத்தைப் பூர்த்தி செய்து, வைகுண்டம் புறப்பட்ட திருவிடம் சோமநாதம் எனும் க்ஷேத்திரம். சௌராஷ்டிரத்தில் 'ஜினொகட்' எனும் பகுதியில் அமைந்திருக்கும் இந்த இடத்துக்கு, தேகேரத் ஸர்க்கம் என்று பெயர்.


    சாந்நித்தியம் மிகுந்த ரமணரேதி ஆலயம் கோகுலத்தில் உள்ளது. ரேதி என்றால் 'மண்' பொருள். இங்குள்ள மணல் பரப்பில் கோபிகைகளுடன் கண்ணன் ராசலீலை புரிந்தான். அப்போது, ஸ்ரீபரமசிவனும் கோபிகையாக உருவெடுத்து வந்து, கண்ணனுடன் நடனம் ஆடியதாகச் சொல்வர்!



    Krishna Janmastami Special - சொர்க்க துவாரம் மோட்ச துவாரம்!


    வைணவத் திருத்தலங்களில், பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் கோலத்தைத் தரிசிப்போம். அதேபோல் ஸ்ரீகிருஷ்ணர் சயன கோலத்தில் அருளும் தலம், துவாரகை.


    இந்தத் தலத்தில் கோயில்கொண்டிருக்கும் கண்ணனுக்கு துவாரகீசன் என்று திருநாமம். ஜகத் மந்திர் எனப்படும் இங்குள்ள கோயிலின் பிரதான வாயிலை, சொர்க்க துவாரம் என்பார்கள். எப்போதும் திறந்தே இருக்கும் இந்த வாயிலைக் கடந்தால், மோட்ச துவாரம். இதையும் தாண்டிச் சென்றால், ஸ்ரீகண்ணனின் திவ்ய தரிசனம் கிடைக்கும்.
Working...
X