Announcement

Collapse
No announcement yet.

Brahma muhoortam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Brahma muhoortam

    Brahma muhoortam


    Courtesy: https://atmaanubhavangal.blogspot.in...l?view=classic
    ப்ரஹ்ம முஹூர்த்தம் என்பது அந்த அந்த இடத்தின் சூரியோதய காலத்திற்கு நான்கு நாழிகைகளுக்கு முன்பு இருக்கக்கூடிய காலமாகும். ஒரு நாழிகையில் 24 நிமிடங்கள் உள்ளன. ஆகவே நான்கு நாழிகைகளில் 96நிமிடங்கள் அடங்கியுள்ளன. பொதுவாக சூர்யோதய காலம் காலை 6மணி என்று வைத்துக்கொண்டால் சுமார் 4.30மணிக்கு சிறிது நேரம் முன்பு இந்த ப்ரஹ்ம முஹூர்த்தமானது தொடங்கும். இந்த ப்ரஹ்ம முஹூர்த்தத்தில் உறங்குவது கண்டிப்பாக சாஸ்த்ரங்களில் மறுக்கப்பட்டுள்ளது. ஸ்ம்ருதி ரத்னாவளி என்ற நூலில் கூறுவதாவது -
    ப்ராஹ்மே முஹூர்த்தே யா நித்ரா ஸா புண்யக்ஷயகாரிணி |
    தாம் கரோதி த்விஜோ மோஹாத் பாதக்ருச்ரேண சுத்யதி ||


    அதாவது ப்ரஹ்ம முஹூர்த்தத்தில் உறக்கம் புண்யத்தை அழிக்கிறது. ஒரு வேளை மோஹத்திற்கு உட்பட்டு அந்நேரத்தில் தூங்கிவிட்டால் அதற்காக "பாதக்ருச்ர" என்ற விசேஷத்தைக் கூறியுள்ளார்கள்.
    பழங்கால பாரதிய விஞ்ஞான பார்வையில் பார்க்கும் பொழுது இந்த முஹூர்த்த காலமானது மிகச் சிறந்த சக்தியைக் கொண்டதாகும். இந்நேரத்தின் சூர்ய கிரணங்களின் அபிமானி தேவதை (ஸ்வாமி) இந்திரன் ஆவான். இந்திரன் என்கிற சப்தத்தின் சிறந்த பொருள்தான் இந்நேரத்தின் முக்கியத்துவத்தைக் கூறுகிறது. இந்த சப்தத்திற்கு ஐஸ்வர்யத்தை அளிக்கக்கூடிய கடவுள் முதல் இடத்தில் இருப்பவர். மிகச் சிறந்தவர் என்ற பொருள் உள்ளன. இந்த அனைத்து குண விசேஷங்களும் அந்நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய மனிதனுள் குடிகொண்டிருக்கின்றன.


    பூமி தினமும் ஒரு குறிப்பட்ட வட்டத்தில் சுற்றுவதால் அந்நேரத்தில் சுற்றுச் சூழல் மிக அமைதியாக சுத்தமாக இருக்கும். மட்டுமல்லாமல் காலை நேரத்தின் காற்று கூட மிக சக்தி வாய்ந்ததாக இருந்து நம்மை ஒளிமயமாக்குகிறது. ப்ரஹ்ம முஹூர்த்தம் மற்றும் காலை நேரத்தின் சுற்று வட்டத்திலுள்ள ஓஸோன் என்கிற காற்றுப் படலமானது வேகமாகச் செயல்படுவதால் சுற்றுச்சூழல் மனிதனுக்கு மிக அனுகூலமானதாக இருக்கும்.


    இந்த ஓஸோன் படலத்தின் சிறப்பு யாதெனில் இது சூரியனின் தாபத்தை தேவையான அளவிற்கு மட்டுமே பூமிக்கு அனுமதிக்கிறது. கூடவே பாதிப்பை உண்டாக்கக்கூடிய சூரிய கிரணங்களைத் (Anty-Conductor) தடுக்கிறது. அதாவது அப்படிப்பட்ட கிரணங்களை பூமண்டலத்தினுள் அனுமதிக்காமல் அதைத் தடுத்து நிறுத்துகிறது.


    புராணங்களில் கூறப்பட்டவாறு சூரியனின் ஏழு குதிரைகள் அல்லது விஞ்ஞானப் பார்வையில் சூரிய ஒளிகள் மின்காந்த அலைகளின் சமூகமாகும். இவற்றில் காமா (Gamma), க்ஷ (X-ray), பராபைகனி (ultra violet), வெளிச்சம் (visual light) அவரக்த (infra red) மற்ற சூக்ஷ்ம கிரணங்கள் (other microrays) மற்றும் ஆகாசவாணியின் அலைகள் (Radio Waves) ஆகிய அனைத்தும் ஒரு கூட்டமைப்பு ஆகும்.


    இவற்றில் அவரக்த (infra red) கிரணங்கள் அனைத்து ஜீவராசிகளுக்கும் பயனளிப்பவை. இந்த கிரணங்கள் காலையில் அல்லது ப்ரஹ்ம முஹூர்த்தத்தில் சுத்தமான சுற்றுச்சூழல் இருக்கும்பொழுது (அதாவது கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் இதர மாசுபடிந்த காற்று இல்லாத, அல்லது குறைந்த அளவில் இருக்கக்கூடிய நேரம்) பூமியை அடைந்து மண் அல்லது நீரால் வடிகட்டப்படும். கிர்ச்சோஃப் விதி (Kirchoff's law) ப்படி வடிக்கப்பட்ட கிரணங்கள் மீண்டும் சுற்றுச்சூழலில் கலந்து விடுகின்றன. இந்த விஞ்ஞானப் பார்வையை அக்காலத்திலே நம் பழைமை வாய்ந்த ரிஷி, முனிகள் தம் திவ்ய ஞான திருஷ்டியால் அறிந்து கொண்டு ப்ரஹ்ம முஹூர்த்தத்தின் மற்றும் காலை நேரத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார்கள்.

  • #2
    Re: Brahma muhoortam

    thanks for the detailed info!

    Comment

    Working...
    X