Announcement

Collapse
No announcement yet.

Rahukalam & Yamakandam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Rahukalam & Yamakandam

    *எளியமுறையில் ராகு காலம், எமகண்டத்தை நினைவில் வைத்துக்கொள்வது எப்படி?*


    *தி*ருவிழா *ச*ந்தையில் *வெ*ளியே *பு*றப்பட்டு *வி*ளையாடச் *செ*ல்வது *ஞா*யமா?


    *வி*ளையாட்டாய் *பு*ண்ணியம் *செ*ய்தாலும் *தி*ருவருளை *ஞா*னமும் *ச*த்தியமும் *வெ*ளிப்படுத்தும்!


    எப்போதும் எந்தச் செயலைச் செய்யும் போதும் ராகுகாலம், எமகண்டம் பார்க்க காலண்டரைப் புரட்டுபவரா நீங்கள்? அப்படியானால் மேலே இருக்கும் இரண்டு வாக்கியங்களையும் மனப்பாடம் செய்துகொள்ளுங்கள். அப்புறம் உங்களுக்கு ராகுகாலம், எமகண்டம் பார்க்க காலண்டர் தேவைப்படாது.


    எப்படி?


    திங்கட்கிழமை 7.30-9 ராகுகாலம், அடுத்து சனிக்கிழமை 9-10.30, வெள்ளிக்கிழமை 10.30-12, புதன் கிழமை 12-1.30, வியாழக்கிழமை 1.30-3, செவ்வாய்க்கிழமை 3-4.30, ஞாயிற்றுக்கிழமை, 4.30-6. இதில் முதல் நாளுக்கு உரிய நேரமான 7.30-9 மட்டும் நினைவில் இருந்தால் போதும், வாக்கியத்தில் ஒவ்வொரு வார்த்தையிலும் முதலில் உள்ள எழுத்துகளை கிழமையின் முதலெழுத்தாகக் கொண்டால் அடுத்தடுத்த ஒன்றரை மணி நேரம் ராகுகாலம் என எளிதாகத் தெரிந்துகொண்டுவிடலாம்.
    இரண்டாவது வாக்கியம் யம கண்டத்திற்கு வியாழக்கிழமை 6-7.30 எமகண்டம். அடுத்தடுத்து வாக்கியத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையின் முதலெழுத்தை கிழமையின் முதலெழுத்தாகக் கொண்டால், அடுத்தடுத்து புதன், செவ்வாய், திங்கள், ஞாயிறு, சனி, வெள்ளிக் கிழமைகள் அடுத்தடுத்த ஒன்றரை மணிநேரம் எமகண்டம் என்பதைக் கணக்கிட்டுவிடுவது சுலபம்தான்!
Working...
X