Announcement

Collapse
No announcement yet.

Patteeswaram

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Patteeswaram

    Patteeswaram


    [ஷாஜகானின் 17ஆவது மனைவிக்கு கட்டிய மண்டபத்தை விட சோழ மன்னவனின் ஒரே தாய்க்கு கட்டிய கோவில் ]
    -
    "பட்டீஸ்வரம்"
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிறிய கிராமம். இந்த ஊரின் பெற்ற துர்க்கை கோயிலின் வாயிலில் நின்று நேராக பார்த்தால் இரண்டு சாலைகள் இடது வலதாக பிரியும், இடது பக்கம் திரும்பினால் சோழர்களின் பழைய தலை நகரான "பழையாறை" செல்லும் சாலை, வலது புறம் நடந்தால் ஒரு மசூதி, அப்படியே இன்னும் நடந்தால் ஒரு சிமெண்ட் சாலை பிரிவு, அங்கே தான் பார்க்க நாதியில்லாமல் கிடக்கின்றது இந்த ஆயிரம் வருட அற்புதம்!.


    தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜ ராஜ சோழனின் மனைவி தான் இந்த "பஞ்சவன் மாதேவி" , தன்னை மிகுந்த பாசத்தோடு வளர்த்த சிற்றன்னையின் பிரிவை தாங்க முடியாமல் அவருக்காக ஒரு கோயிலை எழுப்பியுள்ளான் கங்கை முதல் கடாரம் வரை வென்ற "ராஜேந்திர சோழன்".

    உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில் அநேகமாக இதுவாகவே இருக்கக்கூடும், அதுவும் அதை ஒரு தமிழ் மன்னன் கட்டியிருக்கிறான் என்பது நாம் எவ்வளவு பெருமைப்பட வேண்டிய விசயம். தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அவளின் நினைவாக எழுப்பப்பட்ட தாஜ்மஹாலை இந்த உலகமே கொண்டாடுகிறது, தாஜ் மஹாலை நான் குறை கூற வில்லை அதுவும் பாசத்தின் வெளிப்பாடு தான், ஆனால் தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா? குறைந்த பட்சம் எத்தனை தமிழர்களுக்கு தெரியும்?

    பளிங்குக்கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமாக கணக்கிடப்படுமா?வேதனை! இந்த பட்டீஸ்வரத்தின்அருகில் தான் சோழர்களின் மாளிகை இருந்தது, ராஜ ராஜன் தன் மகனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு தன் கடைசி காலத்தை இங்கு தான் கழித்தார், தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்காமல் அடிக்கடி இந்த கோயிலுக்கு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இன்றைக்கும் அந்த ஊரின் பெயர் "சோழன் மாளிகை". கேட்பாரற்று இடிந்து கிடந்த இந்த கோயிலை சில வருடங்களுக்கு முன் தான் புதுப்பித்து இருக்கிறார்கள்.


    பஞ்சவன்மாதேவி எப்பேர்பட்ட சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்த பெண்மணியாக இருந்தால் தன் அன்னை அல்லாத ஒரு பெண்ணுக்கு பள்ளிப்படை அமைத்து இருப்பார் ராஜேந்திர சோழர். தனது சிற்றன்னையின் மேல் எத்தனை அன்பு இருந்தால் இந்த எண்ணம் அவருக்கு தோன்றி இருக்கும். இது இந்த மண்ணில் வாழ்ந்த மகத்தான பெண்ணின் நினைவிடம் மட்டும் அல்ல, உண்மையான தாய் பாசத்தால் தனயன் எழுப்பிய புனித தளம். உங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்த புண்ணியவதி தரிசித்துவிட்டுவாருங்கள்,அப்படியே தனயன் ராஜேந்திர சோழனையும் நினைவு கூறுங்கள்.
Working...
X