Benefits of vibhooti3
Courtesy:Sri.GS.Dattatreyan
Continues
அணியும் முறை
வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது
நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல்,
வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல்,
மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால்
திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று,
பூசிக்கொள்ளல் வேண்டும். எடுக்கும் போது
திருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது
சிவாயநம அல்லது சிவசிவ என்று உதடு
பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக்
கொள்ளுதல் வேண்டும். ஒன்று நெற்றி
முழுவதும் அல்லது 3 படுக்கை வசக்
கோடுகளாகத் தரிக்க வேண்டும். காலை,
மாலை, பூசைக்கு முன்னும் பின்னும்,
ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு
உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க
வேண்டும்.நெற்றியில் முழுவதும் பரவிப்
பூசுவதை "உத்தூளனம்" எனப்படும். மூன்று
படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை
"திரிபுண்டரம்" எனப்படும்.
திருநீறு அணியும் இடங்கள்
உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப்
பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன.
அவை
தலை நடுவில் (உச்சி)
நெற்றி
மார்பு
தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
இடது தோள்
வலது தோள்
இடது கையின் நடுவில்
வலது கையின் நடுவில்
இடது மணிக்கட்டு
வலது மணிக்கட்டு
இடது இடுப்பு
வலது இடுப்பு
இடது கால் நடுவில்
வலது கால் நடுவில்
முதுகுக்குக் கீழ்
கழுத்து முழுவதும்
வலது காதில் ஒரு பொட்டு
இடது காதில் ஒரு பொட்டு
பலன்கள்
திருநீறுஅணிவதால் தடையற்ற இறைச்
சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற
செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற
எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.
உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும்.
பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை
ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள்
அனைத்தையும் அழித்தும் அனைத்துப்
பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி
அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல
வழிகாட்டும். இதைத்தான் திருமூலர்
பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!
அகத்திய மாமுனிவர் சொன்ன வசிய திருநீறு...
---------------------------------------------
-------------------------
கோவிலில் இறைவனை தரிசித்த பிறகும்,
பெரியவர்கள், ஆன்றோர்களை சந்தித்து விடை
பெறும்போதும் அவர்கள் விபூதி வழங்கி
ஆசிர்வதிப்பது காலம் காலமாய்
நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம். கால
ஓட்டத்தில் பெரியவர்களிடம் விபூதி
வாங்கிடும் பழக்கம் அருகி விட்டாலும்,
கோவிலில் இந்த மரபு இன்றும் வழக்கில்
இருக்கிறது. இந்த விபூதியானது அதனை
அணிந்து கொள்கிறவர்களை தீவினைகளில்
இருந்து காப்பாற்றும் கவசமாய் இருப்பதுடன்,
செல்வத்தையும் தருகிறது. இது பொது
விதியாக இருந்தாலும், சிலர் தங்கள்
தேவைகளை, லட்சியங்களை
நிறைவேற்றிடும் பொருட்டு வசிய
விபூதியை உருவாக்கி பயன் படுத்தி
இருக்கின்றனர்.
இத்தகைய வசிய திருநீற்றைத் தயாரிக்கும்
பல்வேறு முறைகளை சித்தர்களின்
நூல்களிலும், மலையாள மாந்திரிக
நூல்களிலும் காணமுடிகிறது. அப்படியான
ஒரு வசிய திருநீற்றினை தயாரிக்கும்
முறையினை இன்றைய பதிவில் பகிர்ந்து
கொள்கிறேன்.
அகத்தியரின் "அகத்தியர்
பரிபூரணம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப்
பட்ட தகவல் இது. இதன் உண்மைத் தன்மை
ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உரியது.
எனவே இதனை ஒரு தகவல் பகிர்வாக மட்டும்
அணுகிட வேண்டுகிறேன்..
கிருபையுள்ள புலத்தியனேவ சிய மொன்று
கெணிதமுடன் சொல்லுகிறே னன்றாய்
கேளு
துருவமுள்ள வுருத்திரபூமி யிலே சென்று
சுகமாக வெந்தஅஸ்திநீயெ டுத்து
மைந்தா
அருவமுள்ள அஸ்தியுடன் விஷ்ணு மூலி
ஆதிசத்தி தன்னுடைய வேருங் கூட்டிக்
கருவையினிச் சொல்லுகிறேன்க லசப் பாலாற்
கருணையுடன் றானரைத்தே யுண்டை
செய்யே.
செய்யடா உருண்டைதனையு லர வைத்துச்
செம்மையுட னெருவடுக்கிப்
புடத்தைப்போடு
மெய்யடா சொல்லுகிறே நீறிப் போகும்
வேகாந்த மானதொரு நீற்றை வாங்கி
வையடா சவ்வாதுடனேபு னுகு சேர்த்து
மார்க்கமுடன் அங்கெனவே லட்ச மோதி
மையமென்ற நெற்றியிலேவி பூதி பூசி
மார்க்கமுடன் அரசரிடஞ் சென்று பாரே.
சென்றுமிக நின்றுடனேயி ராச மோகம்
சிவசிவா செகமோகம்ஸ்ரீவ சிய மாகும்
அண்டர் பிரானருள் பெருகிவ சிய முண்டாம்
அப்பனே ஓம்கிலியு றீயு மென்று
பண்டுபோலி லட்சமுரு வேற்றிப் பின்னர்
பாலகனே லலாடமிசைப் பூசிச் சென்றால்
தொண்டரென்றே சத்துருக்கள்வ ணங்கு
வார்கள்
துஷ்டனென்ற மிருகமெல்லாம்வ சிய
மாமே.
ஆதி குருவான சிவன் விரும்பி வசிக்கும்
பூமியான இடுகாட்டிற்குச் சென்று எரியும்
சுடலையில் இருந்து நன்கு வெந்த
அஸ்தியை சேகரித்து எடுத்து வந்து, அதன்
எடைக்கு சம அளவில் விஷ்ணு கிரந்தியின்
வேரினைச் சேர்த்து கல்வத்தில் இட்டு
அதனோடு தாய்ப்பால் சேர்த்து நன்கு
அரைத்து உருண்டையாக செய்து கொள்ள
வேண்டுமாம். இந்த உருண்டைகளை சூரிய
ஒளியில் நன்கு உலரவிட்டு எடுத்து நான்கு
வரட்டிகளைக் கொண்டு புடமிட
வேண்டுமாம். இதனால் அந்த உருண்டைகள்
வெந்து நீறாகி இருக்கும் என்கிறார். இந்த
திருநீற்றுடன் சவ்வாதும், புனுகும் சேர்த்து
ஒரு சிமிழில் சேகரித்துக் கொள்ள
வேண்டுமாம்.
இந்த திருநீற்றில் இருந்து சிறிதளவு எடுத்து
கைகளில் வைத்துக் கொண்டு "அங்" என்று
லட்சம் உரு செபித்து பின்னர் அதனை
நெற்றியில் பூசிக்கொண்டு அரசரிடம்
சென்றால் அரசர்கள் வசியமாவார்களாம். இது
இராஜவசியம் என்றும் அத்துடன் செக
மோகமும் பெண்வசியமும் உண்டாகும்
என்கிறார்.
மேலும் இந்த திருநீற்றில் இருந்து சிறிதளவு
எடுத்து கைகளில் வைத்துக் கொண்டு
"ஓம்கிலிறீ " என்று லட்சம் உரு ஓதி
நெற்றியில் விபூதியைப் பூசிக் கொள்ள
வேண்டுமாம் அப்போது எதிரிகளும்
வணங்கும் நிலை உண்டாவதுடன் தீங்கு
செய்யும் விலங்குகளும் வசியமாகும்
என்கிறார்.
மந்திரமாவது நீறு
மாமருந்தாவது நீறு
சுந்தரமாவது நீறு
மாயத்தந்திரம்
நீங்க செய்வது நீறு.!
ஓர் அதிசய திருநீறு
சுத்தமான விபூதி
2 கிலோ
கல் நாற்பற்பம், படிகாரப்பற்பம்
சிலாசத்து பற்பம்,ஆமையோடு பற்பம்,சிருங்கி
பற்பம்,நண்டுக்கல் பற்பம் தலா 10 கிராம்
விபூதியோடு சேர்த்து கலந்து
வைத்துக்கொண்டு தினமும் நெற்றியிலும்
மார்பிலும் அணிந்து வந்தால் நாள்ப்பட்ட சளி,
தலைநீர், சுவாசக்கோளாறுகள் நீங்கும்.!
தினமும் காலையில் வெறும் வயிற்றில்
இரண்டு சிட்டிகை விபூதியை எடுத்து
வாயில்போட்டு தின்று ஒருவாய் வென்னீர்
குடித்து பின் ஒருமணி நேரம் வரை நீர் உணவு
எதுவும் அருந்தாமல்
இருந்துவிட்டு பிறகு உணவோ நீரோ அருந்த
சிறுநீரகக்கல் கறையும், பித்தப்பை கற்கள்
கரையும். அதோடு ஆஸ்துமா, இரத்த
அழுத்தம், எலும்பு தேய்வு, சக்கரை
வியாதி,வயிற்றுப்புண், கர்பபை கோளாறு,
போன்ற அனைத்து வியாதிகளும்
கட்டுப்படும்.
தோல் நோய் இருப்பவர்கள் இந்தப் பொடியை
சிறிது வேப்பெண்ணையில் குழப்பிப் போட்டு
வர தோல்நோய்கள் எதுவும் குணமாகும்.!
செய்வினை, பில்லிசூன்யம், ஏவல் போன்ற
எதிர்மறை ஆற்றலால் அவதிப்படுபவர்கள்
இந்த விபூதி குழைத்து உடலில் தேய்த்து
குளித்து வந்தால் எத்தகைய தீய ஆற்றலும்
செயலிழந்து விடும்.!
ஆதாரம்: பாம்பாட்டி சித்தன் வைத்தியத்
திரட்டு.! இதே முறையில் நாமே விபூதி
செய்து சிறுநீரில் கல் இருந்த ஒரு மனிதருக்கு
இரண்டு மாதங்கள் காலை மாலை சாப்பிட்டு
வரக் கூறினோம். அதோடு சலபாசனம்,
வக்ராசனம் போன்ற யோகாசனங்களையும்
செய்துவந்தார்!
அதோடு தினமும் ஒருவேளை இயற்கை
உணவையும் உண்டு வந்தார். இதன்மூலம் 12
mm, 9 mm அளவில் இருந்த இரண்டு கற்கள்
முற்றிலும் கரைந்துவிட்டன!
Courtesy:Sri.GS.Dattatreyan
Continues
அணியும் முறை
வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது
நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல்,
வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல்,
மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால்
திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று,
பூசிக்கொள்ளல் வேண்டும். எடுக்கும் போது
திருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது
சிவாயநம அல்லது சிவசிவ என்று உதடு
பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக்
கொள்ளுதல் வேண்டும். ஒன்று நெற்றி
முழுவதும் அல்லது 3 படுக்கை வசக்
கோடுகளாகத் தரிக்க வேண்டும். காலை,
மாலை, பூசைக்கு முன்னும் பின்னும்,
ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு
உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க
வேண்டும்.நெற்றியில் முழுவதும் பரவிப்
பூசுவதை "உத்தூளனம்" எனப்படும். மூன்று
படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை
"திரிபுண்டரம்" எனப்படும்.
திருநீறு அணியும் இடங்கள்
உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப்
பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன.
அவை
தலை நடுவில் (உச்சி)
நெற்றி
மார்பு
தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
இடது தோள்
வலது தோள்
இடது கையின் நடுவில்
வலது கையின் நடுவில்
இடது மணிக்கட்டு
வலது மணிக்கட்டு
இடது இடுப்பு
வலது இடுப்பு
இடது கால் நடுவில்
வலது கால் நடுவில்
முதுகுக்குக் கீழ்
கழுத்து முழுவதும்
வலது காதில் ஒரு பொட்டு
இடது காதில் ஒரு பொட்டு
பலன்கள்
திருநீறுஅணிவதால் தடையற்ற இறைச்
சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற
செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற
எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.
உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும்.
பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை
ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள்
அனைத்தையும் அழித்தும் அனைத்துப்
பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி
அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல
வழிகாட்டும். இதைத்தான் திருமூலர்
பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!
அகத்திய மாமுனிவர் சொன்ன வசிய திருநீறு...
---------------------------------------------
-------------------------
கோவிலில் இறைவனை தரிசித்த பிறகும்,
பெரியவர்கள், ஆன்றோர்களை சந்தித்து விடை
பெறும்போதும் அவர்கள் விபூதி வழங்கி
ஆசிர்வதிப்பது காலம் காலமாய்
நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம். கால
ஓட்டத்தில் பெரியவர்களிடம் விபூதி
வாங்கிடும் பழக்கம் அருகி விட்டாலும்,
கோவிலில் இந்த மரபு இன்றும் வழக்கில்
இருக்கிறது. இந்த விபூதியானது அதனை
அணிந்து கொள்கிறவர்களை தீவினைகளில்
இருந்து காப்பாற்றும் கவசமாய் இருப்பதுடன்,
செல்வத்தையும் தருகிறது. இது பொது
விதியாக இருந்தாலும், சிலர் தங்கள்
தேவைகளை, லட்சியங்களை
நிறைவேற்றிடும் பொருட்டு வசிய
விபூதியை உருவாக்கி பயன் படுத்தி
இருக்கின்றனர்.
இத்தகைய வசிய திருநீற்றைத் தயாரிக்கும்
பல்வேறு முறைகளை சித்தர்களின்
நூல்களிலும், மலையாள மாந்திரிக
நூல்களிலும் காணமுடிகிறது. அப்படியான
ஒரு வசிய திருநீற்றினை தயாரிக்கும்
முறையினை இன்றைய பதிவில் பகிர்ந்து
கொள்கிறேன்.
அகத்தியரின் "அகத்தியர்
பரிபூரணம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப்
பட்ட தகவல் இது. இதன் உண்மைத் தன்மை
ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உரியது.
எனவே இதனை ஒரு தகவல் பகிர்வாக மட்டும்
அணுகிட வேண்டுகிறேன்..
கிருபையுள்ள புலத்தியனேவ சிய மொன்று
கெணிதமுடன் சொல்லுகிறே னன்றாய்
கேளு
துருவமுள்ள வுருத்திரபூமி யிலே சென்று
சுகமாக வெந்தஅஸ்திநீயெ டுத்து
மைந்தா
அருவமுள்ள அஸ்தியுடன் விஷ்ணு மூலி
ஆதிசத்தி தன்னுடைய வேருங் கூட்டிக்
கருவையினிச் சொல்லுகிறேன்க லசப் பாலாற்
கருணையுடன் றானரைத்தே யுண்டை
செய்யே.
செய்யடா உருண்டைதனையு லர வைத்துச்
செம்மையுட னெருவடுக்கிப்
புடத்தைப்போடு
மெய்யடா சொல்லுகிறே நீறிப் போகும்
வேகாந்த மானதொரு நீற்றை வாங்கி
வையடா சவ்வாதுடனேபு னுகு சேர்த்து
மார்க்கமுடன் அங்கெனவே லட்ச மோதி
மையமென்ற நெற்றியிலேவி பூதி பூசி
மார்க்கமுடன் அரசரிடஞ் சென்று பாரே.
சென்றுமிக நின்றுடனேயி ராச மோகம்
சிவசிவா செகமோகம்ஸ்ரீவ சிய மாகும்
அண்டர் பிரானருள் பெருகிவ சிய முண்டாம்
அப்பனே ஓம்கிலியு றீயு மென்று
பண்டுபோலி லட்சமுரு வேற்றிப் பின்னர்
பாலகனே லலாடமிசைப் பூசிச் சென்றால்
தொண்டரென்றே சத்துருக்கள்வ ணங்கு
வார்கள்
துஷ்டனென்ற மிருகமெல்லாம்வ சிய
மாமே.
ஆதி குருவான சிவன் விரும்பி வசிக்கும்
பூமியான இடுகாட்டிற்குச் சென்று எரியும்
சுடலையில் இருந்து நன்கு வெந்த
அஸ்தியை சேகரித்து எடுத்து வந்து, அதன்
எடைக்கு சம அளவில் விஷ்ணு கிரந்தியின்
வேரினைச் சேர்த்து கல்வத்தில் இட்டு
அதனோடு தாய்ப்பால் சேர்த்து நன்கு
அரைத்து உருண்டையாக செய்து கொள்ள
வேண்டுமாம். இந்த உருண்டைகளை சூரிய
ஒளியில் நன்கு உலரவிட்டு எடுத்து நான்கு
வரட்டிகளைக் கொண்டு புடமிட
வேண்டுமாம். இதனால் அந்த உருண்டைகள்
வெந்து நீறாகி இருக்கும் என்கிறார். இந்த
திருநீற்றுடன் சவ்வாதும், புனுகும் சேர்த்து
ஒரு சிமிழில் சேகரித்துக் கொள்ள
வேண்டுமாம்.
இந்த திருநீற்றில் இருந்து சிறிதளவு எடுத்து
கைகளில் வைத்துக் கொண்டு "அங்" என்று
லட்சம் உரு செபித்து பின்னர் அதனை
நெற்றியில் பூசிக்கொண்டு அரசரிடம்
சென்றால் அரசர்கள் வசியமாவார்களாம். இது
இராஜவசியம் என்றும் அத்துடன் செக
மோகமும் பெண்வசியமும் உண்டாகும்
என்கிறார்.
மேலும் இந்த திருநீற்றில் இருந்து சிறிதளவு
எடுத்து கைகளில் வைத்துக் கொண்டு
"ஓம்கிலிறீ " என்று லட்சம் உரு ஓதி
நெற்றியில் விபூதியைப் பூசிக் கொள்ள
வேண்டுமாம் அப்போது எதிரிகளும்
வணங்கும் நிலை உண்டாவதுடன் தீங்கு
செய்யும் விலங்குகளும் வசியமாகும்
என்கிறார்.
மந்திரமாவது நீறு
மாமருந்தாவது நீறு
சுந்தரமாவது நீறு
மாயத்தந்திரம்
நீங்க செய்வது நீறு.!
ஓர் அதிசய திருநீறு
சுத்தமான விபூதி
2 கிலோ
கல் நாற்பற்பம், படிகாரப்பற்பம்
சிலாசத்து பற்பம்,ஆமையோடு பற்பம்,சிருங்கி
பற்பம்,நண்டுக்கல் பற்பம் தலா 10 கிராம்
விபூதியோடு சேர்த்து கலந்து
வைத்துக்கொண்டு தினமும் நெற்றியிலும்
மார்பிலும் அணிந்து வந்தால் நாள்ப்பட்ட சளி,
தலைநீர், சுவாசக்கோளாறுகள் நீங்கும்.!
தினமும் காலையில் வெறும் வயிற்றில்
இரண்டு சிட்டிகை விபூதியை எடுத்து
வாயில்போட்டு தின்று ஒருவாய் வென்னீர்
குடித்து பின் ஒருமணி நேரம் வரை நீர் உணவு
எதுவும் அருந்தாமல்
இருந்துவிட்டு பிறகு உணவோ நீரோ அருந்த
சிறுநீரகக்கல் கறையும், பித்தப்பை கற்கள்
கரையும். அதோடு ஆஸ்துமா, இரத்த
அழுத்தம், எலும்பு தேய்வு, சக்கரை
வியாதி,வயிற்றுப்புண், கர்பபை கோளாறு,
போன்ற அனைத்து வியாதிகளும்
கட்டுப்படும்.
தோல் நோய் இருப்பவர்கள் இந்தப் பொடியை
சிறிது வேப்பெண்ணையில் குழப்பிப் போட்டு
வர தோல்நோய்கள் எதுவும் குணமாகும்.!
செய்வினை, பில்லிசூன்யம், ஏவல் போன்ற
எதிர்மறை ஆற்றலால் அவதிப்படுபவர்கள்
இந்த விபூதி குழைத்து உடலில் தேய்த்து
குளித்து வந்தால் எத்தகைய தீய ஆற்றலும்
செயலிழந்து விடும்.!
ஆதாரம்: பாம்பாட்டி சித்தன் வைத்தியத்
திரட்டு.! இதே முறையில் நாமே விபூதி
செய்து சிறுநீரில் கல் இருந்த ஒரு மனிதருக்கு
இரண்டு மாதங்கள் காலை மாலை சாப்பிட்டு
வரக் கூறினோம். அதோடு சலபாசனம்,
வக்ராசனம் போன்ற யோகாசனங்களையும்
செய்துவந்தார்!
அதோடு தினமும் ஒருவேளை இயற்கை
உணவையும் உண்டு வந்தார். இதன்மூலம் 12
mm, 9 mm அளவில் இருந்த இரண்டு கற்கள்
முற்றிலும் கரைந்துவிட்டன!