தேர்தல் அறிக்கையில், இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட, அரசியல் கட்சிகளுக்கு தடையில்லை; இருப்பினும், அதற்கான நிதி ஆதாரங்களை காட்ட வேண்டும்' என, தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில், பிரதான கட்சிகளில் ஒன்றான தி.மு.க., 2006 சட்டசபை தேர்தலில், 'ஆட்சிக்கு வந்தால் இலவச கலர், 'டிவி' வழங்கப்படும்' என, அறிவித்தது. அந்த தேர்தலில், தி.மு.க.,வின் இலவச அறிவிப்பு மட்டுமே பிரதான விவாதப் பொருளாக இருந்தது.
இதை தொடர்ந்து, 2011 சட்டசபை தேர்தலின் போது, 'ஆட்சிக்கு வந்தால், இலவசமாக மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, மாணவர்களுக்கு, 'லேப் டாப்' போன்றவை வழங்கப்படும்' என, அ.தி.மு.க., அறிவித்தது. அந்த தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றதற்கு, இலவச அறிவிப்புகளும் முக்கிய காரணமாக அமைந்தது.
தமிழக கட்சிகளை பின்பற்றி, பல மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவிக்கத் துவங்கின. 'இது போன்று அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது ஊழலுக்கு வழிவகுக்கும்; இது, மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளுக்கு எதிரானது' என, புகார் எழுந்தது.இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு, தேர்தல் கமிஷனுக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. தேர்தல் பிரிவு
அதிகாரிகள், இதுபற்றி கூறும்போது, 'இலவசஅறிவிப்புகளை வெளியிட தடை இல்லை என்றாலும், இலவச அறிவிப்புகள் எப்படி நிறைவேற்றப்படும்; அதற்கான நிதி ஆதாரம் என்ன என்பதை, தேர்தல் அறிக்கையில் தெரிவிக்க வேண்டும்' என்றனர்.
'விதிமுறைகளைபின்பற்ற வேண்டும்':
இலவசங்கள் அறிவிப்பு விவகாரம் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
*அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், இலவச அறிவிப்புகளை வெளியிட, தடை இல்லை
*அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கை தொடர்பாக, தேர்தல் கமிஷன் சில விதிமுறைகளை வகுத்துள்ளது; அவற்றை அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் குழு -
Source: Dinamalar