Announcement

Collapse
No announcement yet.

Home loan

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Home loan

    Home loan
    வீடு கட்ட வாங்கும் லோன் ஒரு பங்கு என்றால், வட்டி இரண்டு பங்குக்கும் மேல் என்பதை, வங்கியில் கடன் வாங்கும் அனைவரும் உணர்வார்களா? வரிசலுகைக்காக என்று சிலர் இதுபோல கடன் வாங்கி விட்டு, வரியைக் காட்டிலும், அதிக வட்டி செலுத்துகிறார்கள் என்பதை எத்தனை பேர்கள் உணர்வார்கள்? அதிக வட்டியைத் தவிர்க்க என்ன செய்யலாம்.
    கீழ்க்கண்ட பயனுள்ள தகவல்களை புதுச்சேரியைச் சேர்ந்த நிதி ஆலோசகர் திரு.சா. ராஜசேகரன், நாணயம் விகடன் பத்திரிகையில், தெரிவித்து இருந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தேவைப்படாமல் இருக்கலாம். என்றாலும், உங்கள் நண்பர் யாருக்காவது இது பயன்படலாம். அதனால், முடிந்தால், அவர்களுக்கு இதனைத்
    தெரிவியுங்கள். - நன்றி. குரு.
    லட்சகணக்கான தொகையை மொத்தமாக புரட்டி வீடு வாங்க முடியாது என்பதாலும், திரும்ப கட்டும் மாதத் தவணைக்கு, வட்டி மற்றும் அசலில் வரிச் சலுகை கிடைக்கிறது என்பதாலும் பலர் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்கவே பலரும் விரும்புகிறார்கள்.
    இந்தியாவில் 15 ஆண்டுகள் 20 ஆண்டுகளுக்கு என வீட்டுக் கடன் வாங்கி இருந்தாலும், அதனை சராசரியாக எட்டு ஆண்டுகளில் கட்டி முடித்து விடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
    வீட்டுக்கடனை தேர்ந்தெடுத்த காலம் வரை கட்டினால்,கட்டும் வட்டி அதிகமாக இருக்கும்.இதனை ஓர் உதாரணம் மூலம் பார்க்கலாம். (பட்டியலையும் பார்க்கவும்)
    கடன் தகை ரூ.25 லட்சம்.
    திரும்பக் கட்டும் காலம் 30 ஆண்டுகள் (360 மாதங்கள்)
    வட்டி 10%
    மாதத் தவணை ரூ.21,939
    இங்கே வாங்கும் கடனோ ரூ.25 இலட்சம்தான்.ஆனால், அதற்கு கட்டும் வட்டியோ ஏறக்குறைய ரூ.54 இலட்சம். இப்படி கடைசி வரைக்கும் கடனைக் கட்டுவதற்கு பதில் சில உத்திகளைப் பின்பற்றி வட்டியை கணிசமாக மிச்சப்படுத்தலாம். அவை பற்றி இதோ சில விவரங்கள்...
    (1) மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை அதிகரித்துக் கட்டுதல் :
    மாதத்தவணை ரூ.21,939 என்பதற்குப் பதில், கூடுதலாக, ரூ.3,061/- அதிகரித்து, ரூ.25,000/- ஆக கட்டி வந்தால், வீட்டுக்கடன் 360 மாதங்களுக்குப் பதிலாக 216 ஆவது மாதத்திலேயே முடிந்துவிடும். வட்டிக்காக செலுத்தும் தொகை ரூ.29/- இலட்சம்தான். அதாவது மாதம் ரூ.3,061 அதிகம் கட்டுவதன் மூலம் வட்டியில் ரூ.25 லட்சம் மிச்சமாகும். (பார்க்க அட்டவணை - 2)
    (2) ஆண்டுதோறும் தவணை அதிகரித்து கட்டுதல் :
    மாதத்தவணை ரூ.21,939 என்பதற்குப் பதில், கூடுதலாக, ரூ.3,061/- அதிகரித்து, ரூ.25,000/- ஆக கட்டி வந்தால், வீட்டுக்கடன் 360 மாதங்களுக்குப் பதிலாக 216 ஆவது மாதத்திலேயே முடிந்துவிடும். வட்டிக்காக செலுத்தும் தொகை ரூ.29/- இலட்சம்தான். அதாவது மாதம் ரூ.3,061 அதிகம் கட்டுவதன் மூலம் வட்டியில் ரூ.25 லட்சம் மிச்சமாகும். (பார்க்க அட்டவணை : 2) 103 மாதங்களிலேயே முடிந்துவிடும். இங்கே வட்டிக்கு செலுத்தும் தொகை சுமார் 15 இலட்சம்தான். வட்டியில் சுமார் ரூ.38.5 இலட்சம் மிச்சமாகும். (பார்க்க அட்டவணை - 3)
    (3) ஆண்டுதோறும் கூடுதல் தொகை கட்டுதல் :
    வீட்டுக் கடன் தொகையை அப்படியே கட்டி வரும் நிலையில் இரண்டாம் ஆண்டு முதல் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை அதிகரித்து, வருவதன் மூலமும், வீட்டுக் கடனுக்கான வட்டியில், கணிசமான ஒரு தொகையை மிச்சப்படுத்த முடியும். உதாரணமாக, ஒருவர் ஆண்டுக்கு ரூ,.1 இலட்சம் கூடுதலாக அசலைக் கட்டி வருகிறார் என்றால், அவரது கடன் 159 ஆவது மாதத்தில் முடிந்து விடும். இங்கே வட்டிக்கு செலுத்தும் தொகை ரூ.19.21 இலட்சம்தான். வட்டியில் சுமார் ரூ.34.77 இலட்சம் மிச்சமாகும். (பார்க்க அட்டவணை - 4)
    உங்களுக்கு ஏற்ற வழிமுறைகளைப் பின்பற்றி, வீட்டுக் கடனை விரைந்து அடைக்க முயலுங்கள். .

    வீடு கட்ட வாங்கும் லோன் ஒரு பங்கு என்றால், வட்டி இரண்டு பங்குக்கும் மேல் என்பதை, வங்கியில் கடன் வாங்கும் அனைவரும் உணர்வார்களா? வரிசலுகைக்காக என்று சிலர் இதுபோல கடன் வாங்கி விட்டு, வரியைக் காட்டிலும், அதிக வட்டி செலுத்துகிறார்கள் என்பதை எத்தனை பேர்கள் உணர்வார்கள்? அதிக வட்டியைத் தவிர்க்க என்ன செய்யலாம்.
    கீழ்க்கண்ட பயனுள்ள தகவல்களை புதுச்சேரியைச் சேர்ந்த நிதி ஆலோசகர் திரு.சா. ராஜசேகரன், நாணயம் விகடன் பத்திரிகையில், தெரிவித்து இருந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தேவைப்படாமல் இருக்கலாம். என்றாலும், உங்கள் நண்பர் யாருக்காவது இது பயன்படலாம். அதனால், முடிந்தால், அவர்களுக்கு இதனைத்
    தெரிவியுங்கள். - நன்றி. குரு.
    லட்சகணக்கான தொகையை மொத்தமாக புரட்டி வீடு வாங்க முடியாது என்பதாலும், திரும்ப கட்டும் மாதத் தவணைக்கு, வட்டி மற்றும் அசலில் வரிச் சலுகை கிடைக்கிறது என்பதாலும் பலர் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்கவே பலரும் விரும்புகிறார்கள்.
    இந்தியாவில் 15 ஆண்டுகள் 20 ஆண்டுகளுக்கு என வீட்டுக் கடன் வாங்கி இருந்தாலும், அதனை சராசரியாக எட்டு ஆண்டுகளில் கட்டி முடித்து விடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
    வீட்டுக்கடனை தேர்ந்தெடுத்த காலம் வரை கட்டினால்,கட்டும் வட்டி அதிகமாக இருக்கும்.இதனை ஓர் உதாரணம் மூலம் பார்க்கலாம். (பட்டியலையும் பார்க்கவும்)
    கடன் தகை ரூ.25 லட்சம்.
    திரும்பக் கட்டும் காலம் 30 ஆண்டுகள் (360 மாதங்கள்)
    வட்டி 10%
    மாதத் தவணை ரூ.21,939
    இங்கே வாங்கும் கடனோ ரூ.25 இலட்சம்தான்.ஆனால், அதற்கு கட்டும் வட்டியோ ஏறக்குறைய ரூ.54 இலட்சம். (பார்க்க இப்படி கடைசி வரைக்கும் கடனைக் கட்டுவதற்கு பதில் சில உத்திகளைப் பின்பற்றி வட்டியை கணிசமாக மிச்சப்படுத்தலாம். அவை பற்றி இதோ சில விவரங்கள்...
    (1) மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை அதிகரித்துக் கட்டுதல் :
    மாதத்தவணை ரூ.21,939 என்பதற்குப் பதில், கூடுதலாக, ரூ.3,061/- அதிகரித்து, ரூ.25,000/- ஆக கட்டி வந்தால், வீட்டுக்கடன் 360 மாதங்களுக்குப் பதிலாக 216 ஆவது மாதத்திலேயே முடிந்துவிடும். வட்டிக்காக செலுத்தும் தொகை ரூ.29/- இலட்சம்தான். அதாவது மாதம் ரூ.3,061 அதிகம் கட்டுவதன் மூலம் வட்டியில் ரூ.25 லட்சம் மிச்சமாகும். (2) ஆண்டுதோறும் தவணை அதிகரித்து கட்டுதல் :
    மாதத்தவணை ரூ.21,939 என்பதற்குப் பதில், கூடுதலாக, ரூ.3,061/- அதிகரித்து, ரூ.25,000/- ஆக கட்டி வந்தால், வீட்டுக்கடன் 360 மாதங்களுக்குப் பதிலாக 216 ஆவது மாதத்திலேயே முடிந்துவிடும். வட்டிக்காக செலுத்தும் தொகை ரூ.29/- இலட்சம்தான். அதாவது மாதம் ரூ.3,061 அதிகம் கட்டுவதன் மூலம் வட்டியில் ரூ.25 லட்சம் மிச்சமாகும். (பார்க்க அட்டவணை : 2) 103 மாதங்களிலேயே முடிந்துவிடும். இங்கே வட்டிக்கு செலுத்தும் தொகை சுமார் 15 இலட்சம்தான். வட்டியில் சுமார் ரூ.38.5 இலட்சம் மிச்சமாகும்.(3) ஆண்டுதோறும் கூடுதல் தொகை கட்டுதல் :
    வீட்டுக் கடன் தொகையை அப்படியே கட்டி வரும் நிலையில் இரண்டாம் ஆண்டு முதல் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை அதிகரித்து, வருவதன் மூலமும், வீட்டுக் கடனுக்கான வட்டியில், கணிசமான ஒரு தொகையை மிச்சப்படுத்த முடியும். உதாரணமாக, ஒருவர் ஆண்டுக்கு ரூ,.1 இலட்சம் கூடுதலாக அசலைக் கட்டி வருகிறார் என்றால், அவரது கடன் 159 ஆவது மாதத்தில் முடிந்து விடும். இங்கே வட்டிக்கு செலுத்தும் தொகை ரூ.19.21 இலட்சம்தான். வட்டியில் சுமார் ரூ.34.77 இலட்சம் மிச்சமாகும்.
    உங்களுக்கு ஏற்ற வழிமுறைகளைப் பின்பற்றி, வீட்டுக் கடனை விரைந்து அடைக்க முயலுங்கள். .
Working...
X