சமையலறை பாதுகாப்பு டிப்ஸ்!எவ்வளவு முன்ஜாக்கிரதையாக இருக்கும்போதும், தப்பித்தவறி தீக்காயம் ஏற்படலாம். எனவே, தீப்புண்ணுக்கான மருந்து சமையலறையில் எப்போதும் தயாராக இருக்கட்டும். காய்கள், பழங்கள் நறுக்கும்போதும்... புதிய பாட்டில்களைத் திறக்கும்போதும் வெட்டுக்காயம் ஏற்படலாம். எனவே, கத்தி முதலிய உபகரணங்கள் புதியனவாகவோ, அப்போதுதான் சாணை பிடிக்கப்பட்டதாகவோ இருந்தால்... நிதானமாக, கவனமாகக் கையாள வேண்டும். சமையலறையில் பாண்டேஜ் துணி எனப்படும் வலைத் துணியை ஏழெட்டு அங்குலம் நீளமுள்ள துண்டுகளாக கத்தரித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை வெட்டுக்காயம் ஏற்பட்டால், இந்தத் துணியை நீரில் நனைத்து, காயம்பட்ட இடத்தில் அழுத்தி சுற்றலாம். ரத்தம் வருவது நின்றவுடன், துணியை எடுத்துவிட்டு தேவையான மருந்தைத் தடவலாம். தேவையானால், மருத்துவரிடம் செல்லலாம்.
#அவள்விகடன்
#அவள்விகடன்
Comment