Announcement

Collapse
No announcement yet.

யார் நீ என கேட்கும் கேப்ட்சா (CAPTCHA

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • யார் நீ என கேட்கும் கேப்ட்சா (CAPTCHA

    உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை பாப்பா. அதனால் உன்னை அழைத்து வரச்சொல்லி என்னை அனுப்பி இருக்கிறார். வா போகலாம்’ என சமீபத்தில் ஒரு பள்ளிக்கூட சிறுமியை அவளுக்கு அறிமுகம் இல்லாத நபர், கடத்திச் செல்லும் நோக்கத்தில் அழைத்தபோது, அந்தச் சிறுமி ‘ அப்படியா அங்கிள், பாஸ்வேர்டு சொல்லுங்க’ என்று கேட்க, குழம்பிய அந்த நபர் மிரண்டு ஓடிவிடுகிறான். இது கற்பனை அல்ல. உண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம்.

    இந்த சம்பவத்தில் அந்த சிறுமியை காப்பாற்றியது ஒரு பாஸ்வேர்டு. அறிமுகம் இல்லாத நபர்கள் வந்து அழைத்தால், குடும்பத்தினருக்கு மட்டுமே தெரிந்த பாஸ்வேர்டை கேட்டு செக் செய்துகொள்ள வேண்டும் என அந்த குழந்தையின் பெற்றோர் அவளுக்கு சொல்லிக்கொடுத்துள்ளார்கள்.

    உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற இன்றைய உலகில், இதுபோல ஒவ்வொரு குடும்பத்துக்கும் பாஸ்வேர்டு வைத்துக்கொண்டு பாதுகாப்பாக வாழ்க்கை நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

    மனிதர்களை இயந்திரங்களும் சந்தேகிக்கும் காலக்கட்டம்
    னிதர்களை மனிதர்களே நம்ப முடியாத இந்த நாட்களில், மனிதர்களை இயந்திரங்களும் சந்தேகிக்கின்றன.

    * கம்ப்யூட்டரில் நாம் இமெயில் முகவரிகளை உருவாக்கும்போதும்…

    * ஆன்லைனில் டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட்பேங்கிங் வழியாக கட்டணம் செலுத்தும்போதும்…

    * ஓரிரு முறை நம் பாஸ்வேர்டை சரியாக டைப் செய்யாமல் அடுத்த முறை சரியாக டைப் செய்யும்போதும்…

    * சமூக வலைத்தள வெப்சைட்டுகளில் புதிதாக அக்கவுன்ட்டுகளை உருவாக்கும்போதும், அவற்றில் கமென்ட்டுகளை பதிவு செய்யும்போதும்…

    இப்படி கம்ப்யூட்டருக்கு நாம் மனிதனா அல்லது வைரஸா அல்லது ரோபோவா என்ற சந்தேகம் ஏற்படும். அது நம்மை நம்பாமல் நமக்கு ஒரு இமேஜை அனுப்பி வைக்கும்.



    அந்த இமேஜில் வளைவு நெளிவாக குழப்பமாக டைப் செய்யப்பட்ட எண்களும், எழுத்துக்களும் இருக்கும். அதைப் பார்த்து நாம் சரியாக டைப் செய்தால் மட்டுமே கம்ப்யூட்டர் நம்மை மனிதன் என ஒத்துக்கொள்ளும். வைரஸ் புரோகிராம்களுக்கு இமேஜில் குழப்பமாக உள்ளவற்றை பார்த்து புரிந்துகொள்ளத் தெரியாது.

    தன்னை இயக்கும் நபர் மனிதன்தானா என்பதை உறுதிசெய்த கொண்டபின்தான் கம்ப்யூட்டர் நம்மை தொடர்ச்சியாக செயல்பட வைக்கும்.

    நாம் மனிதன் தான் என நிரூபிக்க உதவும் CAPTCHA!

    கம்ப்யூட்டர் நம்மை மனிதனா, வைரஸா என பரிசோதிப்பதற்காக நமக்கு அனுப்பி வைக்கின்ற விவரத்துக்கு Capcha என்று பெயர். CAPTCHA என்றால் Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart.

    கம்ப்யூட்டரை தாக்குகின்ற வைரஸ்களில் இருந்து மட்டும் இல்லாமல், நம்மை ஏமாற்றி நம் அக்கவுன்ட்டுக்குள் சென்று நம் தகவல்களையும், பணத்தையும் ‘அபேஸ்’ செய்கின்ற மனிதர்களிடம் இருந்தும் பாதுகாப்பாக இருப்பதற்கு கேப்ட்சா என்ற பாதுகாப்புக் கவசம் மிகவும் அவசியம்.

    மனிதர்களை கம்ப்யூட்டர் சந்தேகிக்க காரணங்கள்
    இலவச இமெயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப நாட்களில் நொடிக்கு ஆயிரம் இமெயில் முகவரிகளை வைரஸ்கள் உருவாக்கிக் குவித்து வந்தன. நம் இமெயில் முகவரிக்குள் மனிதர்கள் வேண்டும் என்றே பாஸ்வேர்டை மாற்றி மாற்றி டைப் செய்து உள்ளே செல்ல முயற்சிக்கின்ற அதே வேளையில், வைரஸ்களும் மனிதர்களைப் போல செயல்பட்டு, நம் இமெயில் முகவரியில் இருந்து நாம் அனுப்புவதைப்போல தாறுமாறான தகவல்களை, புகைப்படங்களை நம் தொடர்பில் உள்ளவர்களுக்கு அனுப்புதல் என நம்மை திசைதிருப்பி, ‘எப்போதடா அசருவோம்’ என ஏமாற்றக் காத்திருக்கின்றன.

    இண்டர்நெட்டில் நூதனத் திருடர்கள் வைரஸ்கள் மூலம் நம் வங்கி அக்கவுன்ட்டில் பாஸ்வேர்டை டைப் செய்து நம் கணக்கில் இருந்து ஒட்டுமொத்த பணத்தையும் ‘ஸ்வாகா’ செய்துவிடுகிறார்கள்.
    வெப்சைட், பிளாக், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் நமக்கே தெரியாமல் நாம் அனுப்புவதைப்போல, அசிங்கமான படங்களுடன் அறுவெறுப்பான பதிவுகளைப் பகிர்தல், கமென்ட்டுகளை போடுதல் என எங்கும் எதிலும் வைரஸ்களின் அட்டகாசம்.

    இதுபோன்ற காரணங்களினால் கம்ப்யூட்டர் நம்மை சந்தேகம் கொள்கின்றன. கம்ப்யூட்டரை கண்டுபிடித்ததும் மனிதன்தான். கம்ப்யூட்டரை வைரஸ் மூலம் தாறுமாறாக செயல்பட வைப்பதும், மனிதர்கள் எழுதுகின்ற வைரஸ் புரோகிராம்களால்தான். கம்ப்யூட்டர் நம்மை சந்தேகம் கொண்டு ‘யார் நீ?’ என்று கேள்வி கேட்பதும், நாம் எழுதுகின்ற சாஃட்வேர்களால்தான். ஆக்கலும், அழித்தலும் நம்மிடம்தான் உள்ளது.
    கேப்ட்சா (CAPTCHA) – எப்போது யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

    1997-ஆம் ஆண்டு மார்க் டி. லில்லிப்டிட்ஜ் (Mark D. Lillibridge), மார்ட்டின் அபாடி (Martin Abadi), கிருஷ்ணா பாரத் (Krishna Bharat), ஆண்ட்ரி பார்டர் (Andrei Z. Broder) போன்றோர்களால் கேப்ட்சாவின் (CAPTCHA) அடிப்படை தத்துவம் உருவாக்கப்பட்டது.

    2003-ஆம் ஆண்டு முழுமையாக பரிசோதிக்கப்பட்ட கேப்ட்சா லூயிஸ் வான் ஆஹன் (Luis von Ahn), மானுவல் ப்ளம் (Manuel Blum), நிகோலஸ் ஜே. ஹுப்பர் (Nicholas J. Hopper), ஜான் லாங்ஃப்ராட் (John Langford) போன்றோரால் வடிவமைப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.

    to be contd: 2


  • #2
    Re: யார் நீ என கேட்கும் கேப்ட்சா (CAPTCHA

    Nice sharing Mama...waiting for another post
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #3
      Re: யார் நீ என கேட்கும் கேப்ட்சா (CAPTCHA

      அன்புடைய நண்பர்களே நான் 2 மாதத்திற்குமுன் தான் FB ல் அதிக கவன செலுல்துகின்றேன்.என்னுடைய போஸ்டிங் களுக்கு ஆயிரக்கணக்கில் likes ,shares ,comments கள் வர எந்த பாவிகளோ என்கணக்கில் பூந்து எதை எதையோ போடுகிறார்கள்.நீங்கள் இந்த விஷயத்தில் கவனமுடன் இருங்கள் .

      Comment


      • #4
        Re: யார் நீ என கேட்கும் கேப்ட்சா (CAPTCHA

        Please continue Sri.PSN. It is a useful post. Many will bet benefited.
        Hope parents teach their kids of this instance so that they are aware and take proper verification before blindly following an unknown person or persons.
        Varadarajan

        Comment


        • #5
          Re: யார் நீ என கேட்கும் கேப்ட்சா (CAPTCHA

          My dear RV, some persons who are envious to me somehow hack my FB a/c and post obscene matters in my comment box .What I am to do?

          Comment

          Working...
          X