ஜவ்வு மிட்டாய்
மூங்கில் களியின் உச்சியில் ஒரு பொம்மையைக்கட்டிக்கொண்டு அடியில் தொங்கும் கயிற்றை பிடித்து இழுத்தால் பொம்மையின் இருகரங்களிலும் இணைத்து இருக்கும் சலங்கை ஜல் ஜல் என்று ஒலி எழுப்பினாலே போதும்.வாண்டுகள் சிட்டாய் பறந்து வீதிக்கு வந்து வந்து விடுவார்கள் சில்லரைகாசுகளுடன்.பொம்மைக்கு அடியில் சுற்றப்பட்ட ஜவ்வு மிட்டாயை சுற்றிலும் பிளாஸ்டிக் கவர் போட்டு ஈ மொய்க்காத வண்ணம் மூடி இருக்கும் ஜவ்வு மிட்டாயை எடுத்து வளையல்,வாட்ச்,பிரேஸ்லெட்,மோதிரம்,கொசுராக நெற்றியில் ஒரு பொட்டு,கன்னத்தில் ஒருதிருஷ்டி பொட்டு ஒட்டி விடும் மிட்டாய்க்காரரின் கை லாவகத்தையே கண் சிமிட்டாமல் பார்க்கும் சிறார்கள் ஆபரணம் அணிந்து முடிந்ததும் ஜவ்வுமிட்டாயின் இனிப்புடன் சேர்த்து கை வியர்வையின் உப்புகரிப்பையும் சாப்பிடும் சுவை மறக்கவே முடியாது.