Announcement

Collapse
No announcement yet.

ஒரு சொல் பல பொருள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஒரு சொல் பல பொருள்

    ஒரு சொல் பல பொருள்
    மனிதர்களில் ஒரே பெயரில் பலரைப் பார்த்திருப்போம். அதேபோல ஒரே பெயரில் இருவேறு பொருட்களோ, உயிரினங்களோகூட இருக்கின்றன. அதாவது ஒரே உச்சரிப்பில் வரும் வார்த்தைகள், இருவேறு பொருளைத் தரலாம். ஆங்கிலத்தில் இதை ஹோமோபோன் என்று சொல்வார்கள். தமிழிலும் பல பொருள் தரும் சொற்கள் இருக்கின்றன. இதை பல பொருள் ஒரு மொழி என்று சொல்வார்கள். உதாரனத்திற்குச் சிலவற்றைப் பார்ப்போம்.
    ஆங்கிலத்தில் கிவி ( kiwi ) என்னும் சொல் ஒரு பழத்தையும் பறவையையும் குறிக்கும். நியூசிலாந்தின் தேசியப் பறவை கிவி. இந்தப் பறவைக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இறக்கைகளே இல்லாத பறவை இது. வீடுகளில் வளர்க்கப்படுகிற கோழியின் அளவுதான் கிவியும் இருக்கும். ஆனால் மற்ற பறவைகளின் முட்டைகளோடு ஒப்பிடும்போது கிவியி உடல் அளவுக்கு அதன் முட்டை மிகப் பெரியது கிவி. ஆந்தையைப் போல பகலில் தூங்கி, இரவில் விழித்திருக்கும். இத்தாலி, நியூசிலாந்து, சிலி, கிரீஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளில் பயிரிடப்படும் பழ வகை கிவி. கோழிமுட்டை அளவில் இருக்கும் இது, பார்ப்பதற்கு சப்போட்டா பழம் போலவே இருக்கும். மேல்புறம் இளம்பச்சையும் பழுப்பும் கலந்த நிறமும் உள்ளே அடர்த்தியான பச்சை நிறமோ, பொன்னிறமோ இருக்கும். நடுவே கடுகு போல சின்னச் சின்ன விதைகள் இருக்கும். இனிப்புச் சுவையுடனும் தனித்த மணத்துடனும் இருக்கும்.
    தமிழில் வாரணம் என்னும் சொல் யானை, வாழை, சங்கு, கடல், தடை, கலசம், பன்றி, நிவாரணம் ஆகிய பொருட்களைத் தரும்.
    -- பிருந்தா. மாயாபஜார்.
    -- ' தி இந்து ' நாளிதழ்.புதன், டிசம்பர் 18, 2013.
    Posted by க. சந்தானம்
Working...
X