Announcement

Collapse
No announcement yet.

மரபணு அறிவியல்.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மரபணு அறிவியல்.

    மரபணு அறிவியல்.
    மரக்கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மரபணு அறிவியல்! ' ஓசை ' கருதரங்கில் தகவல்.
    கடைகளில் வாங்கும் பொருட்களின் பார் கோட் மூலம், அவற்றின் அனைத்துத் தகவல்களையும் அறிந்துகொள்வதுபோல யாராவது மரத்தை வெட்டி எடுத்துச் சென்றால் மரத்துண்டு மூலம் மரத்தின் அத்தனைத் தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும்.
    நமது நாட்டை ஆண்ட ஆங்கிலேயர்கள் இந்தியாவின் வன வளங்களை நன்றாக அறிந்து வைத்திருந்தனர். அதன் பன்முகத்தனமை அவர்களுக்கு பெரும் வியப்பாக இருந்தது. அதனாலேயே இங்கிருந்து அதிகமான வனம் சார்ந்த பொருட்களை அவர்கள் ஏற்றுமதி செய்தனர். ஆனால், நாம் காடுகளை அணுகும் போதும், அதுகுறித்து அறியும் போதும் உணர்வுப்பூர்வமான தேடலையே தேர்வு செய்கிறோம். இது நிச்சயம் பிரச்சினைகளையே வெளிப்படுத்தும்..
    தொழினுட்பம் மூலம் சீனாவில் ஒவ்வொரு மரத்திற்கும் குறியீடு ( பார் கோட் ) வழங்கப்பட்டுள்ளது. நாம் கடைகளில் வாங்கும் பொருட்களின் பார் கோட் மூலம், அவற்றின் அந்த மரத்துண்டை பரிசோதித்து , அது எந்த வகை மரம், எங்கிருந்து , எப்போது வெட்டப்பட்டது என்பதையும் அறியலாம். மரபணு அறிவியல் இதற்கு கைக்கொடுக்கிறது.
    -- ஆர்.கிருபாகரன்.
    -- - ' தி இந்து ' நாளிதழ். புதன், அக்டோபர் 2, 2013.
    Posted by க. சந்தானம்
Working...
X