Polyglotism
Polyglotism என்றால் என்ன? ஆறுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசும் வல்லமைகொண்ட மனிதனை இப்படி அழைப்பார்கள். சரி...ஒரு மனிதனால் அதிகபட்சம் எத்தனை மொழிகள் பேச முடியும்? ஆறு அல்லது ஏழு? ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த திமோதி டோனர் என்ற 17 வயது இளைஞர் இந்தி, ஆங்கிலம், பாரசீகம், ஹீப்ரு, ரஷ்யன், ஸ்பானிஷ் உள்ளிட்ட 23 உலக மொழிகள் பேசி அசத்துகிறார். ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக்கொண்ட இவர், முதலில் ஹீப்ரு மொழியைக் கற்றிருக்கிறார். அந்த மொழி பேசுபவர்களுடன் அடிக்கடி தொடர்புகொண்டு பேசி, அதில் சரளமாகப் பேசத் துவங்கி இருக்கிறார். பிறகு, அதீத ஆர்வத்தில் ஒவ்வொரு மொழியாக 23 மொழிகளைப் பேச, வாசிக்கக் கற்றுக்கொண்டு விட்டார். ஒரு மொழியைப் பேச கற்றுக்கொள்ள இரண்டு வாரங்கள்தான் ஆகின்றனவாம் திமோதிக்கு. இது எப்படிச் சாத்தியம்? " ஒரு மொழியின் இலக்கணக் கட்டமைப்பைப் புரிந்துகொண்டாலே, அதைப் பேசுவதர்கு எளிதாக இருக்கும். குறைந்தது ஒரு நாளைக்கு 8 முதல் 10 மொழியைச் சேர்ந்த செய்தித்தாள்களைப் படிப்பதும் உதவுகிறது !" என்கிறார். - மொய் பைன் ( ஸ்பானிஷ் மொழியில் ' வெரி குட்' )!
-- இன்பாக்ஸ்.
-- ஆனந்த விகடன். 24-4-2013
Posted by க. சந்தானம்

Comment