Announcement

Collapse
No announcement yet.

சுப விசேஷங்கள்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சுப விசேஷங்கள்!

    சுப விசேஷங்கள்!
    சுப விஷயங்களை வளர்பிறையில் தொடங்குகிறார்களே! இது ஆன்மிகமா? அறிவியலா?
    அமாவாசைக்கு மறுநாள் முதல் வளர்பிறை தொடங்கும். ஒவ்வொரு நாளும் சந்திர ஒளி சிறிது சிறிதாக அதிகரித்து இரவுப் பொழுது நிலவெளியில் வெண்மையாக இருக்கும் நாட்களே வளர்பிறை நாட்கள்.
    இதனை சுக்ல பட்சம் நாட்களில் சுபகாரியங்கள் தொடங்கினால் நல்லபடியாக முடியும் என்பது ஆன்மிகம். வளர்பிறை நாட்களில் நிகழும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியானது மன இறுக்கம் போன்ற நோய்களைக் குறைத்து தெளிவான சிந்தனைகளைத் தூண்டவல்லது என்பது அறிவியல் .
    இன்னொரு விஷயம் பௌர்ணமியின் மறுநாள் முதல் தேய்பிறை துவங்குகிறது. இந்த நாட்களில் சுபகாரியங்களே செய்யக் கூடாது எனத் தவறாகக் கூறுகிறார்கள். " சப்தமி அந்தம் சுபம் " என்பது ஆகம சாஸ்திரம் வாக்கியம். தேய்பிறை ஏழாம் நாள் வரை அதாவது கிருஷ்ண பட்ச சப்தமி வரை முன்னிரவில் நிலவெளி இருக்கும் காலமாதலால் வளர்பிறை போன்றே சுபகாரியங்கள் செய்யலாம் என்பது இதன் பொருள்.
    -- அறிவோம்! தெளிவோம்! . ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
    -- தினமலர். பக்திமலர். ஏப்ரல் 21, . 2011
    Posted by க. சந்தானம்
Working...
X