Announcement

Collapse
No announcement yet.

Brahmins agraharams...cotnd.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Brahmins agraharams...cotnd.

    அக்ரஹாரங்கள் என்பதின் ஆதிப்பூர்வ அடையாளம் மட்டுமின்றி, அதன் அழகான மற்றும் அர்த்த பூர்வ பிரத்யேக அம்சங்களும், அழிந்து அமிழ்ந்தும் தொலைந்தும் போய் மறைந்துவிட தொடங்கிவிட்டன என்பது இளைஞர்களுக்குத் தெரிந்தே இருக்கிறது. முன்பு போல, அக்ரஹாரங்களில் முழுக்க முழுக்க பிராமண அன்பர்கள் வசிப்பது இனி சாத்தியமில்லை. பிராமணர் அல்லாத, மற்ற எந்த பிரிவினர் அங்குவந்து, வீடு வாங்கி குடியேறுவதை எதிர்ப்பதும், ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும், இனிமேல் முற்றிலும் தவறாகவே விளங்கும் என்பதையும் அவர்கள் அறிவார்கள். 'பிராமணர் அல்லாதார்' என்று ஆகிவிட்ட பிறகு, நமக்கு அடுத்து வசிப்பவர் தலித்தாக இருந்தாலும், வேறு எந்த சமூகமாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் நாம் சார்ந்திருக்கும் இந்து மதத்தின் ஒரு அங்கமே என்ற உண்மையான கரிசனத்துடன், அவர்கள் உடன் இணைந்து வாழ்வதில் தவறு ஏதும் இல்லை என்பதையும் நம் இளைஞர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

    எனவே, இதுவரை நாம் கண்ட விளக்கங்களின் அடிப்படையில், நம் இறுதி கருத்தை சுருக்கமாக முன் வைத்து நாம் இக்கட்டுரையை முடிக்க வைக்க விரும்புகிறோம்.

    1. பிராமணர்களின் பெருமை மிகு தனி அடையாளமாக விளங்கிய அக்ரஹாரங்கள் காலத்தின் கட்டாயத்தினால் கட்டு அவிழ்ந்து உடைந்து போயின.

    2 அங்கு, காலம் காலமாக இருந்த பிராமணர்கள் தங்கள் முன்னோர்கள் பின்பற்றி வந்த வாழ்க்கையை முறையை தொடர்ந்து கடைப்பிடிக்காத சூழ்நிலை ஏற்பட்ட பொழுது, தங்களின் எதிர்காலத்தினை மனதில்கொண்டு நகரங்களுக்கு சென்று ஒட்டுமொத்தமாக குடியேறினார்கள்.

    3 நகரங்களுக்குச் சென்ற பிறகும் அவர்களுடன் ஒட்டிக்கொண்டிருந்த அக்ரஹார அடையாளங்கள் மேல் தொடுக்கப்பட்ட அவதூறு, கேலி மற்றும் ஏளனம் ஆகிய காரணத்தினால் அவர்கள் அக்ரஹாரங்களை புறக்கணித்து அதுப்பற்றிய எதிர்மறை மனப்பான்மையை வளர்த்துக்கொண்டனர்.

    4. கலக்கத்தை ஏற்படுத்தும் இந்த காலச் சுழற்சியின் போக்கில், தற்பொழுது வரவேற்கத்தக்க சில மாறுதல்கள் உருவாக தொடங்கியுள்ளன. முழுக்க முழுக்க விட்டேத்தியாக இருந்த நம் இளைஞர்கள் சமுதாயத்தில் மெது மெதுவாக அக்ரஹாரங்*களைப் பற்றிய தவறான கண்ணோட்டங்கள் மாற தொடங்கியுள்ளன.

    5. பழைய காலம் போல் அக்ரஹாரங்கள் 100 சதவீத பார்ப்பணர்களுடையதாக இல்லாமல் போனாலும், அங்கு வந்து வசிக்கத் தொடங்கியுள்ள இதர இந்து மத பிரிவு மக்களுடன் ஒரு இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொண்டு இயன்றவரை, அக்ரஹாரங்களின் ஆதிப்பூர்வ கலாச்சாரங்களைக் காப்பாற்ற வேண்டும்.

    6. இவ்வித செயல்திட்டத்துடன் தங்களால் முடிந்தபொழுதும் முடிந்த அளவும் இவ்வித முயற்சிகளில் ஈடுபட, நம் பிராமண இளைஞர்கள் முன்வர தொடங்கியுள்ளனர்.










    Source..Brahmins today Jan:#2015













    7. வரவேற்கத்தக்க இந்த மாறுதலை ஆதரித்து நம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் நாம் செய்ய வேண்டும்.
    Last edited by P.S.NARASIMHAN; 21-07-15, 09:52.
Working...
X