Announcement

Collapse
No announcement yet.

Brahmins agraharams--contd.2

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Brahmins agraharams--contd.2

    'சிந்திய பாலை எண்ணி மனம் நொந்து அழுவதைவிட' எந்த விதத்திலாவது ஆகவேண்டியதை இனி பார்ப்போம் என்ற அந்த பிராமண மனப்பான்மை அக்ரஹாரங்களின் அழிவை நிதர்சனமாக்கிவிட்டது.

    தங்களின் வைதீக, ஆச்சார மற்றும் பிராமண கலாச்சாரப் பதிவுகளை உருவாக்கி, பாதுகாத்து வளர்த்துக்கொண்டிருந்த அக்ரஹாரங்களை விட்டு, அந்த வாழ்க்கை முறைக்கு சற்றும் தொடர்பு இல்லாத புதிய இடங்களுக்கு போய் வசிக்க தொடங்கியது, தொடக்கத்தில் பிராமணர்களுக்கு மிகப்பெரிய சோதனையாக விளங்கியது. குறிப்பாக, அந்த வழக்கத்திற்கு முற்றிலும் மாறான, உறவு மற்றும் பேச்சு முறைகளைப் பழக்கப்படுத்திக்கொண்டு அதற்கேற்றவாறு நடந்துக்கொள்ள பல பல இன்னல்களை சந்திக்க வேண்டியிருந்தது. இதை உணர்ந்து கொள்ளாத, சுற்றியுள்ளவர்களின் கேலி பேச்சும் மனதை புண்படுத்தும் செயல்களும் 'பட்ட காயத்தில் இட்ட உப்பாக', மேலும் துன்புறுத்தின. இவை எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களது எதிர்காலம் மற்றும் தங்களது பிள்ளை, பெண்களின் வளமான எதிர்காலம் ஆகிய ஒன்றை மட்டுமே ‘அர்ச்சுன இலக்கு’-காக கொண்டு, சுகமான அக்ரஹார வாழ்க்கையின்மேல் ஒரு பிடிப்பின்மையையும் எதிர்மறை உணர்வுகளையும் பிராமணர்கள் ஏற்படுத்திக்கொண்டது வியப்புக்குரியது அல்ல.

    விட்டுவிட்டு வந்த அந்த பழைய வாழ்க்கையின் சுவடுகள், எட்டிக்கூட பார்க்காத இயந்திரத் தனமான நகர வாழ்க்கையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, அவர்கள் எட்டிய முன்னேற்றங்கள், தொடர்புகள் மற்றும் பொருளாதார மேம்பாடுகள் முதலியவை எல்லாம் அக்ரஹாரங்கள் அழிந்து போனதை பற்றி அவர்கள் அறியகூட முடியாமல் ஆக்கியது. கிடைத்த விலைக்கு விற்று விட்டு வந்த, திண்ணை, முற்றத்துடன் கூடிய வீடு, உடைத்து ஒரு புதிய கட்டிடமாக கட்டப்பட்டதும் காலம் காலமாக தமது முன்னோர்கள் காலையும் மாலையும் பூஜை செய்து வந்த உள் அறையும், உட்கார்ந்து ஜபம் செய்த ரேழியும், சற்றி தள்ளி இருந்த பசு கொட்டடியும் தட்டி தரைமட்டமாக ஆக்கப்பட்டு, அங்கு நாள் தவறாமல் கோழியும் ஆடும் மீனும் சமைத்து உண்ணும் எவர் எவரோ வந்து, எதை எதையோ செய்வதைப் பற்றி எல்லாம் நகரத்தின் நான்கு சுவருக்குள் முடங்கி கிடக்கும் பிராமணர்களுக்கு எந்த அக்கறையும் இல்லாமல் போய்விட்டதே நிதர்சனம்.

    'விட்டக்குறை தொட்டக்குறையாக' அக்ரஹாரங்களில் உள்ள தங்கள் குலதெய்வ கோயில்களுக்கு, எப்போதாவது எட்டிப்பார்க்கும் பிராமணர்கள் கூட, இந்த மாற்றங்களை பற்றியெல்லாம் மனதில் அலட்டிக்கொள்வதில்லை. அக்ரஹாரங்களுக்கு அடுத்து உள்ள ஒரு பெரிய நகர விடுதியில் அறை எடுத்து தங்கி, உடை மாற்றிக்கொண்டு, பூஜைக்கு உரிய நேரத்தில் மட்டும் சென்று, தலையை காட்டிவிட்டு வரும் மனநிலையில், தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த இடம் குட்டிச் சுவராகிவிட்டது பற்றி, அவர்களுக்கு எந்தவித குற்ற உணர்வும் இல்லை.

    குறையாகவும் குற்றமாகவும் இதையெல்லாம் நாம் கூறி, புரையோடி போன மனப்புண்களை கிளறுவதாக தயவுசெய்து கருதவேண்டாம். போனதை நினைத்து புலம்புவதால் ஆனது எதுவும் இல்லை என்பதை நாம் அறிவோம். நாம் இக்கட்டுரையின் மூலம் எடுத்துக்காட்ட விரும்புவது இதற்கு நேர்மாறான ஒரு சிந்தனையாகும். பட்டுப்போன மரக்கிளையில் மீண்டும் ஒரு பச்சை இலை தோன்றுவது போல, வெட்டி எரிந்த உறவின் முடிவில் ஒரு புதிய கீற்று தெரிவது போல, கடந்துப்போன சரித்திரத்தின் கால் சுவடுகள் மீண்டும் சிறிது தெரிய தொடங்கியுள்ளன.

    'அக்ரஹாரங்கள்' நமது சமூகத்தின் அடையாளங்கள். அவற்றை போற்றுவதும், மீட்டெடுப்பதும் எவருக்கும் எதிரான நிலைப்பாடு அல்ல. கொஞ்ச நஞ்சம் எஞ்சியிருக்கும் அக்ரஹாரங்களில் அவ்வப்போது சென்று தஞ்சம் அடைவதில் எந்த தவறும் இல்லை.

    தவிர்க்க முடியாத சூழ்நிலைகளின் வற்புறுத்தலாலும் தங்களது எதிர்கால சந்ததிகளின் முன்னேற்றம் கருதியும், அக்ரஹாரங்களிலிருந்து பெயர்த்து எடுத்துக்*கொண்டு வந்த சில பழைய கலாச்சார அடையாளங்களை அங்கு சென்று மீண்டும் நிலைநிறுத்த முடியுமா என்று ஆராய தொடங்கியிருக்கிறது நமது பிராமண இளைஞர் சமுதாயம். நகரங்களில் வாய்ப்புகள் வேண்டி தஞ்சம் புகுந்த பெரும்பான்மையான பிராமணர்களுக்குப் பிறகும் அக்ரஹாரங்களின் எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச பிராமணர்களை ஆதரிப்பது, நம் அனைவரின் கடமையே ஆகும் என்ற உணர்வு மெல்ல மெல்ல இளைஞர்களுக்குத் தோன்றத் தொடங்கியுள்ளது.

  • #2
    Re: Brahmins agraharams--contd.2

    உண்மைதான். இந்த மனோபாவம் உள்ள சில அக்ரகாரங்கள் இன்னமும்
    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது .
    நமது கலாச்சாரத்தை கட்டி காப்பாற்றுவதை - பிராமண வர்க்க பேதம்
    இல்லாத - சில அக்ரகாரங்கள் இன்னமும் அழியாமல் உள்ளது .
    உணவு, பழக்கவழக்கங்கள் , ஆசார -அனுஷ்டானங்களில்
    நம்பிக்கை, சமுதாய நலனில் அக்கறை, சுய முன்னேற்றம்,
    இவை இன்று அனுசரிக்கப்பட்டு வருவதை நான் கண்கூடாக
    கண்டேன் . திருநெல்வேலி மாவட்டம் - சுந்தரபாண்டியபுரம்
    அக்ரகாரம். அந்த அக்ரகாரத்தில் பிராமணர்கள் வயலில் வேலை
    செய்கிறார்கள் . வீட்டில் பெண்களும் கல்யாண பட்சணங்கள்
    தயாராக்கி விற்பனை செய்கிறார்கள், சொந்தமாக ஸ்கூல்,
    சமஸ்கிரத பாடசாலை, பாங்கிங் தொழில், சமையல் தொழில்,
    திருநெல்வேலியில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய உணவகம்,
    கேட்டரிங் தொழில், tuition centre, டுடோரியல் காலேஜ், என்று
    அனைவரும் பங்குதார்களாக கொண்டு சிறப்பாக நடத்தி
    வருகிறார்கள். அங்குள்ள அனைவரும் ஒரு தலைமையின் கீழ் இருப்பதால்
    இது சாத்தியமாகிறது.


    ggmoorthyiyer

    Comment

    Working...
    X