Announcement

Collapse
No announcement yet.

பழமொழிகள் – சொற்றொடர்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பழமொழிகள் – சொற்றொடர்கள்

    Continues[2]
    ஜநநீ ஜந்மபூ⁴மிஸ்²ச ஸ்வர்கா³த³பி க³ரீயஸீ [ जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी ]
    Mother and motherland are more respectable than even heaven பிறந்த தேசம் என்பது சுவர்க்கத்தை விட சிறந்தது. இது ராமாயணத்தில் வரும் ஒரு அழகிய ஸ்லோகம்: அபி ஸ்வர்ணமயீ லங்கா ந மே லக்ஷ்மண ரோசதே | ஜநநீ ஜந்மபூ⁴மிஸ்²ச ஸ்வர்கா³த³பி க³ரீயஸீ || – ராவணன் அழிந்த பின் இலங்கையை விபீஷணன் சுற்றிக் காட்ட, அதில் மகிழ்ந்த ராமன் பிறகு சொன்னது, “என்னதான் தங்கமும் வைரமுமாக இந்த நாடு இருந்தாலும் நமது பிறந்த தேசத்துக்கு ஈடாகாது”.
    • ஜலபி³ந்து³நிபாதேந க்ரமஸ²: பூர்யதே க⁴ட: [ जलबिन्दुनिपातेन क्रमशः पूर्यते घटः ]
    Drops fill up a pitcher. சிறு துளி பெருவெள்ளம்.
    • ஜீவோ ஜீவஸ்ய ஜீவநம் [ जीवो जीवस्य जीवनम् ]
    Lives survive, one on another. Another version of this is जीवो जीवस्य भोजनम् means “one life is food of another.”உயிர்களில் ஒன்றின் ஊன் இன்னொன்றுக்கு உணவு.
    • த்ருடித: ஸம்ப³ந்த⁴: ப்ரஸா²ந்த: கலஹ: [ त्रुटितः सम्बन्धः प्रशान्तः कलहः ]
    Relationship severed, quarrel pacified. உறவை துண்டித்ததும் பிரச்னை முடிந்தது.
    • த்ரைலோக்யே தீ³பக: த⁴ர்ம: [ त्रैलोक्ये दीपकः धर्मः ]
    Dharma i.e. righteous conduct is the guiding light, beacon, in all three worlds (here, in nether world and in heaven)மூவுலகிலும் அறமே வழிகாட்டி.
    • து³ர்லப⁴ம்° பா⁴ரதே ஜந்ம மாநுஷ்யம்° தத்ர து³ர்லப⁴ம் [ दुर्लभं भारते जन्म मानुष्यं तत्र दुर्लभम् ]
    Difficult i.e. not in everyone’s luck to be borne in India. It is further difficult to born as a human being.பாரதத்தில் பிறப்பதே அரிது. அங்கேயும் மனிதனாக பிறப்பது மேலும் அரிது.
    • தூ³ரத: பர்வதா: ரம்யா: [ दूरतः पर्वताः रम्याः ]
    Mountains are beautiful from a distance. மலைகளை தூரத்தில் பார்க்க அழகு. (இக்கரைக்கு அக்கரை பச்சை)
    • த்³ரவ்யேண ஸர்வே வஸா²: [ द्रव्येण सर्वे वशाः ]
    All can be commanded by wealthசெல்வத்தால் எல்லாவற்றையும் ஆளலாம்.
    • த⁴ர்மோ மித்ரம்° ம்ருதஸ்ய [ धर्मो मित्रं मृतस्य ]
    Religion is a friend of the dead (?)இறந்தாலும் தர்மமே துணை.
    • தீ⁴ரா: ஹி தரந்த்யாபத³ம் தரந்த்யாபத³ம் [ धीराः हि तरन्त्यापदम् (तरन्त्यापदम् ]
    The bold conquer obstaclesதுணிந்தவனுக்கே வெற்றி.
    • நாஸ்தி ஸத்யஸமோ த⁴ர்ம: [ नास्ति सत्यसमो धर्मः ]
    There is no religion equal to the Truthஉண்மையை விட பெரிய அறம் வேறெதுவும் இல்லை.
    • ந கூபக²நநம்° யுக்தம்° ப்ரதீ³ப்தே வந்ஹிநா க்³ரு«ஹே [ न कूपखननं युक्तं प्रदीप्ते वन्हिना गृहे ]
    It is no use digging a well when the house is on fireவீடு பற்றி எரியும் பொது கிணறு வெட்டி என்ன பிரயோஜனம்?
    • ந பூ⁴தோ ந ப⁴விஷ்யதி [ न भूतो न भविष्यति ]
    Hasn’t been, shall not be. The phrase is used to describe an unparalleled event or person. For example, a Mahatma like Gandhi has not been, shall not be.இதற்கும் முன்னும் இருந்ததில்லை. இனியும் வரப் போவதில்லை.
    • ந ஹி ஜ்ஞாநேந ஸத்³ருஸ²ம்° பவித்ரமிஹ வித்³யதே [ न हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते ]
    There is nothing as sacrosanct as (true) knowledge. This is first line in a shloka in श्रीमद्भगवद्गीता where the second line is तत्स्वयं योगसंसिद्धः कालेनात्मनि विन्दति ||४-३८||ஞானத்துக்கு ஈடு வேறு எதுவும் இல்லை.
    • ந ஸா²ந்தே: பரமம் ஸுக²ம் [ न शान्तेः परमं सुखम् ]
    There is no happiness more sublime than peaceஅமைதியை விட பெரிய சுகம் வேறு இல்லை.
    • நிகூ³டே⁴’பி குக்குடே உதே³த்யேவ அருண: [ निगूढेऽपि कुक्कुटे उदेत्येव अरुणः ]
    Hiding the hen cannot stop the sun from risingசேவலை ஒளித்து வைப்பதால் சூரியன் உதயமாகாமல் இருக்காது.
    • நிர்வாணதீ³பே கிமு தைலதா³நம் [ निर्वाणदीपे किमु तैलदानम् ]
    What use is putting oil in a lamp, where the flame is put out ? Locking the stable after the horse is stolen.அணைந்த விளக்குக்கு எண்ணை ஊற்றி என்ன பயன்?
    • நிரஸ்தபாத³பே தே³ஸே² ஏரண்டோ³’பி த்³ருமாயதே [ निरस्तपादपे देशे एरण्डोऽपि द्रुमायते ]
    In a plant-less desert, even a shrub of castor looks like a (banyan) tree.பாலை வனத்தில் சிறு புதர் கூட ஆலமரம் போல தெரியுமாம்.
    • நி:ஸ்ப்ருஹஸ்ய த்ருணம் ஜக³த் [ निःस्पृहस्य तृणं जगत् ]
    To a person, who has transcended all desires, the whole world is but a blade of grass.ஆசையை துறந்தவனுக்கு உலகமே துரும்பு.
    • ந நிஸ்²சிதார்தா²த் விரமந்தி தீ⁴ரா: [ न निश्चितार्थात् विरमन्ति धीराः ]
    The determined never halt until they achieve their goals. தீர்மானமாக இறங்குபவருக்கு குறிக்கோளை அடையும் வரை ஓய்வில்லை. இது பர்த்ருஹரியின் சுபாஷிதத்தில் வரும் கடைசி வரி. முழுவதும்: ரத்நைர்மஹார்ஹைஸ்துதுஷுர்ந தே³வா | ந பே⁴ஜிரே பீ⁴மவிஷேண பீ⁴திம் | ஸுதா⁴ம்° விநா ந ப்ரயயுர்விராமம் | ந நிஸ்²சிதார்தா²த்³விரமந்தி தீ⁴ரா: – அதாவது, பாற்கடலைக் கடைந்த போது, எத்தனையோ ரத்தினங்களும், அரிய பொருட்களும் கிடைத்த போதும், தேவர்கள் நிற்கவில்லை. விஷம் வந்த போதும் ஓயவில்லை. அமுதம் கிடைக்கும் வரை முயற்சி செய்து கொண்டே இருந்தனர். குறிக்கோளை அடையும் வரை ஓயவில்லை.
    • நிர்த⁴நஸ்ய குத: ஸுக²ம் [ निर्धनस्य कुतः सुखम् ]
    Can a poor be happy ?ஏழைக்கு சுகம் ஏது?
    • நீசைர்க³ச்ச²த்யுபரி ச த³ஸா² சக்ரநேமிக்ரமேண [ नीचैर्गच्छत्युपरि च दशा चक्रनेमिक्रमेण ]
    Our conditions go cyclically up and down like the spokes of a wheel. சக்கரத்தின் சுழற்சி போல நமது நிலை இன்பமும் துன்பமும் ஆக செல்கிறது.
    • பரது³:க²ம்° ஸீ²தலம் [ परदुःखं शीतलम् ]
    Other’s sorrow is cool (is no sorrow).எருது நோய் காக்கை அறியுமா?
    • பரோபகாரார்த²மித³ம்° ஸ²ரீரம் [ परोपकारार्थमिदं शरीरम् ]
    This body is for service unto othersபிறருக்கு உதவுவதே பிறவிப் பயன்
    • பரோபதே³ஸே² பாண்டி³த்யம் [ परोपदेशे पाण्डित्यम् ]
    Sporting wisdom in advising othersஊருக்கு உபதேசம்.
    • பரோபகாராய ஸதாம் விபூ⁴தய: [ परोपकाराय सतां विभूतयः ]
    Lives of the noble are for gracing othersபெரியோரின் வாழ்க்கை பலருக்கு உதவுவதாகவே இருக்கிறது.
    • புந: புநரபி ப்ரக்ஷால்ய கஜ்ஜலம் ந ஸ்²வேதாயதே [ पुनः पुनरपि प्रक्षाल्य कज्जलं न श्वेतायते ]
    You may wash coal again and again, but it will never become white.அடுப்புக்கரியை எத்தனை கழுவினாலும் வெளுப்பாக இருக்காது.
    • பிண்டே³ பிண்டே³ மதிர்பி⁴ந்நா [ पिण्डे पिण्डे मतिर्भिन्ना ]
    Many people, many minds. Literally, every brain has a different mind. உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு யோசனை உதிக்கும். இது ஒரு சுபாஷிதத்தின் கடைசி வரி. மற்ற வரிகள், குண்டே³ குண்டே³ நவம்° பய: | ஜாதௌ ஜாதௌ நவாசாரா நவா வாணீ முகே² முகே². இதன் பொருள் ஒவ்வொரு குளத்திலும் ஒவ்வொரு நீர். ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு பழக்க வழக்கம், ஒவ்வொரு வாயிலும் ஒரு குரல்.
    • ப்ரஜ்ஜ்வாலிதோ ஜ்ஞாநமய: ப்ரதீ³ப: [ प्रज्ज्वालितो ज्ञानमयः प्रदीपः ]
    Lamp of knowledge is litஞானம் சுடர்விட்டு ஒளிர்கிறது.
    • ப்ரத²மக்³ராஸே மக்ஷிகாபாத: [ प्रथमग्रासे मक्षिकापातः ]
    Find a fly in the first sip.முதலில் குடிக்கும்போதே பூச்சி/புழு இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். (குடித்தபின் அதில் பல்லி விழுந்திருப்பதை கண்டு என்ன பயன்?)
    • ப்ருதி²வ்யாம் த்ரீணி ரத்நாநி ஜலமந்நம் ஸுபா⁴ஷிதம் [ पृथिव्यां त्रीणि रत्नानि जलमन्नं सुभाषितम् ]
    There are only three true jewels – water, food and good sayings. This line is actually the first line of a सुभाषितम्. The other line is मूढैः पाषाणखण्डेषु रत्नसंज्ञा विधीयते meaning, “fools call bits of stone as jewels.”பூமியில் மூன்று முக்கியப் பொருள்கள் உண்டு, நீர், உணவு மற்றும் நல்வார்த்தைகள்
    • ப³தி⁴ராத் மந்த³கர்ண: ஸ்²ரேயாந் [ बधिरात् मन्दकर्णः श्रेयान् ]
    A person slow of hearing is better than a deaf.முழுச்செவிடனை விட அரை செவிடு மேல்
    • ப³ஹுஜநஹிதாய ப³ஹுஜநஸுகா²ய [ बहुजनहिताय बहुजनसुखाय ]
    For the good of many, for happiness of many.பலரின் நன்மைக்காக, பலரது மகிழ்ச்சிக்காக
    • ப³ஹுரத்நா வஸுந்த⁴ரா [ बहुरत्ना वसुन्धरा ]
    Earth is a treasure of jewels.பூமி பல அரும்செல்வங்களை தன்னகத்தே கொண்டது.
    • பா³லாநாம் ரோத³நம்° ப³லம் [ बालानां रोदनं बलम् ]
    Crying is the strength (weapon) of children (to get, what they want).குழந்தைக்கு அழுகையே பலம்.
    • பு³த்³தி⁴: கர்மாநுஸாரிணீ [ बुद्धिः कर्मानुसारिणी ]
    Actions cultivate the intellect.செயலே சிந்தனையை வளர்க்கும்.
    • பு³த்³தி⁴ர்யஸ்ய ப³லம் தஸ்ய [ बुद्धिर्यस्य बलं तस्य ]
    He is strong, who has intelligence. “Pen is mightier than the sword” sounds synonymous.புத்திமான் பலவான் ஆவான்.
    • ப⁴த்³ரம் கர்ணேபி⁴: ஸ்²ருணுயாம தே³வா: [ भद्रं कर्णेभिः श्रुणुयाम देवाः ]
    Gods! May we get to listen only good things by our ears!! தேவர்களே நல்லதையே எங்கள் கண்கள் பார்க்கட்டும்.
    • ப⁴வந்தி ப⁴விதவ்யாநாம் த்³வாராணி ஸர்வத்ர [ भवन्ति भवितव्यानां द्वाराणि सर्वत्र ]
    Providence provides doors (openings, opportunities) all over. You should have the vision to see them and alertness to grab them.இறைவன் எல்லா கதவுகளையும் திறந்தே வைக்கிறான். நீங்கள் தான் அதை பயன்படுத்த வேண்டும்.
    • பி⁴ந்நருசிர்ஹி லோக: [ भिन्नरुचिर्हि लोकः ]
    People have different tastes. உலகம் பலவிதம்.
    • மது⁴ திஷ்ட²தி ஜிவ்ஹாக்³ரே ஹ்ரு«த³யே து ஹலாஹலம் [ मधु तिष्ठति जिव्हाग्रे हृदये तु हलाहलम् ]
    Has honey on the tip of the tongue, but poison in the heart.உதட்டில் தேன், உள்ளத்தில் நஞ்சு.
    • மந: பூதம் ஸமாசரேத் [ मनः पूतं समाचरेत् ]
    Act by your own discretion.எண்ணப்படி செய்.
    • மநோரதா²நாமக³திர்ந வித்³யதே [ मनोरथानामगतिर्न विद्यते ]
    Dreams know no holds.கனவில் என்ன தடை?
    • மரணம் ப்ரக்ருதி: ஸ²ரீரிணாம் [ मरणं प्रकृतिः शरीरिणाम् ]
    Death is natural to everyone born. பிறந்தது அனைத்தும் இறந்தே தீரவேண்டும்.


    To be continued
Working...
X