மாத்ரு தேவோ பவ என்கிறது வேதம்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நான்கில் மாதாவிற்குத் தான் முதலிடம்.
'அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை, அவர் அடிதொழ மறுப்பவர் மண்ணில் மனிதர் இல்லை என்கிறது ஓர் இசைப்பாடல். சாதாரண மானுடர்களுக்கே இப்படி என்றால் ஆத்ம ஞானிகள் எப்படிப் போற்றினர் என்பதை விளக்குவதே கட்டுரையின் நோக்கம் ஆகும்.

Notice
அம்மாவைப் போற்றிய ஆத்மஞானிகளில் அத்வைதத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று பேர்.
ஒருவர் கேரளத்தில் காலடியில் பிறந்து பாரத தேசத்தில் சனாதன தர்மத்தை நிலைநாட்டிய ஆதிசங்கரர்.
இரண்டாமவர், திருவெண்காட்டில் பிறந்து திருவொற்றியூரில் ஈசனோடு இரண்டறக் கலந்தவர் பட்டினத்து ஸ்வாமிகள்.
மூன்றாமவர், திருச்சுழியில் பிறந்து ஆத்ம விசாரணை செய்து அம்மாவிற்கு கோவில் கட்டிய ஸ்ரீரமண பகவான் ஆவார்.
இந்த மூவரும் அன்னையைப் போற்றிய ஆத்மஞானிகள் ஆவர்.
இப்படி அம்மாவிற்கு ஏற்றம் கொடுத்த இந்த மூன்று ஆத்ம ஞானிகளை அத்வைத அவதார புருஷர்களை நாமும் போற்றி மகிழ்வோம்.
அன்னையை (தாய், தந்தையை) வணங்குவோம்! அருள் பெறுவோம்! ஆத்மஞானம் அடைவோம்!
அன்னையை (தாய், தந்தையை) வணங்குவோம்! அருள் பெறுவோம்! ஆத்மஞானம் அடைவோம்!
Comment