Announcement

Collapse
No announcement yet.

ரிஷியும்சர்ப்பமும்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ரிஷியும்சர்ப்பமும்

    இரண்டு கிராமங்களுக்கு இடையே ஒரு பெரிய காடு இருந்தது. கிராமவாசிகள் போக வர அந்த காட்டை தாண்டித்தான் போகவேண்டும்.அந்த ஒரு பெரிய ஆலமரம் பரந்து விரிந்து கிராமமக்களுக்கு நிழல் கொடுத்து உதவிகரமாக இருந்தது.அந்த காட்டில் ஒரு மஹா ரிஷி எப்போதும் தியானத்தில் ஆழ் ந்து இருப்பார். இதை அந்த காட்டில் வசித்தா ஒரு பெரிய நாக சர்ப்பம் கவனித்தது.அது நாமும் இவரைபோல் தவம் செய்து பெருமாளுக்கு ஆதிஷேஸனைப்போல் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று நினைத்து ஒருநாள் ரிஷி யின் முன் சே வித்து வேண்டிக்கொண்டது அதற்க்கு ரிஷி "ஏ நாகராஜனே நீயோ கொடிய விஷத்தன்மை உடையவன்.உனது மூச்சு காற்றே எதிராளியை உடனே கொன்றுவிடும் தன்மை உடையது. ஆகையால் நீ யாருக்கும் தீ ங்கு செய்யாதே.யாரையும் கடிக்காதே. ராமஜெபம் செய்துகொண்டே இரு அது போதும் உனக்கு நல்ல கதி கிடைக்கும் என்று உபதேசம் செய்தார். நாகமும் அந்த ஆலமரத்து அடியில் இரண்டு பெரிய வேர்களுக்கு இடையே சுருட்டி படுத்துக்கொண்டு ராமஜெபம் செய்து கொண்டு காலத்தை கடத்தியது.
    இப்போது இரண்டு கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் அவ்வழியே போகும்போது இந்த பாம்பை பார்த்த்விட்டார்கள்.உடனே அதில் ஓரிவர் கூரான கற்களைக்கொண்டு பாம்பின் மீது அடித்தார்கள் .ஆனால் பாம்பு ரிஷியின் உபதேசப்படி அடியை தாங்கிகொண்டது .சிறுவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் மேலும் மேலும் கற்களை வீசி விட்டு ஊர் திரும்பி தங்கள் வீர செயலை ஊருக்கு சொல்லி சந்தோஷப்பட்டார்கள். பெரியவர்கள்(இக்காலத்தவர்கள்) அடே பசங்களா பாம்பையும் பாப்பானையும் பார்த்தால் பாப்பானை முதலில் அடி.பாம்பை அப்புறம் அடிக்கலாம் அது வும் பாப்பானே.. வாருங்கள் போய் பார்க்கலாம் என்று பல பெரியவர்கள் கூர்மையான் கொம்புடன் அங்கு சென்று பாம்பை தூக்கி இரண்டு அடி போட்டார்கள் பாம்பின் உட லெல்லாம் ரணமாகி விட்டது.அத்துடன் அவர்கள் இந்த பாம்பு ஒன்றும் செய்யாது யாரையாவது கடித்தால் கொன்று விடலாம் என்று சொல்லிவிட்டு ஊர் திரும்பினார்கள். அடிபட்ட பாம்பு மறுநாள் மெதுவாக ரிஷியின் முன் சென்று தனக்கு நேர்ந்த கதியை சொல்லி "ஓ" என அழுதது. அதைகேட்ட ரிஷி பலமாக சிரித்தார். பாம்பிற்கு ஒன்றும் புரியவில்லை. சுவாமி ஏன் சிரிக்கிறீர்கள் எனது கதியை பாருங்கள் உங்கள் உபதேசப்படிதானே நடந்து கொண்டேன். எனக்கு ஏன் இந்த கதி என்று மேலும் அழுது புலம்பியது. ரிஷி பாம்பை பார்த்து உனக்கு நான் என்ன உபதேசம் செய்தேன் யாருக்கும் தீங்கு செய்யாதே,கடிக்காதே என்று தானே சொன்னேன் "சீறாதே "என்று சொன்னேனா இல்லையே. உன்னிடம் இருக்கும் பெரிய ஆயுதம் அந்த "சீட்ற்றம்" அதை ஏன் உபயோப் படுத்தவில்லை.அதனால் தான் உனக்கு இந்த கதி. போய் உனது சீற்றத்தை காட்டு அப்புறம் பார். என்று சொல்லி பச்சிலை ரசம் பூசி ரணம் ஆறிவிடும் என்று சொல்லி அனுப்பினார். மறுநாள் அந்த சிறுவர்கள் மேலும் அதிக கூரான கற்களை கொண்டு பாம்பை அடிக்க வந்தார்கள்.கிட்டே நெருங்கவும் பாம்பு படமெடுத்து ஒரு சீற்றம் சீறியது அவ்வளவுதான் பையன்கள் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடோடி தங்கள் வீட்டில் போய் விழுந்தவர்கள்தான்.இதை கேட்ட பெரியவர்கள் இது நல்ல சமயம் பாம்பை கொன்று விடலாம் வாருங்கள் என்று பல ஆயுதங்களுடன் பாம்பின் இடத்தை அடைந்தார்கள். பாம்பும் இதை எதிர் பார்த்து காத்திருந்தது. க்ரமாவாசிகள் கிட்டே நெருங்கவும் பாம்பு மிக கோபம் கொண்டு தனது பெரிய படத்துடன் ஒரு சீற்றம் சீறியது பாருங்கள். கிராமவாசிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடினார்கள் ஓடினார்கள் தங்கள் வீடுகளுக்கு .அப்புறம் என்ன அவர்கள் அந்த ஆலமரத்தின் வழியே போவதை விட்டு விட்டு விட்டார்கள். அவ்வளவு பெரிய ஆலமர நிழலும் பாம்பிர்க்கே சொன்ந்தமாகிவிட்டது.எவரும் கிட்டே வரவே பயந்து ஒதுங்கி விட்டார்கள். ...என்ன பிராமணர்களே இந்த கதையிலிருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள்.நமது சீற்றத்தை கூட காட்டக்கூடாதா. அவ்வளவு கோழைகளா நீங்கள்.முதுகெலும்பு இல்லாவர்களா நீங்கள்.ரௌத்திரம் பழகு என்று அந்த 'பாரதி' சொன்னானே. அதை மறந்து விட்டீர்களா.. இப்படியே இருந்தால் உங்கள் வீட்டு பெண்கள் கூட உங்களை ஏறெடுத்து பார்க்கமாட்டார்கள் . இல்லை என்றால் உங்கள் கதி அதோ கதிதான். என்ன புரிகிறதா...??????????
    Last edited by P.S.NARASIMHAN; 19-06-15, 17:59.

  • #2
    Re: ரிஷியும்சர்ப்பமும்

    ரிஷியும்சர்ப்பமும்

    மேலே கண்ட கதையை படித்தபிறகும் நமது பிராமண சமூகத்திற்கு சூடு சொரணை வரவில்லை என்றால் அவர்கள் பிராமணர்களே இல்லை.ஒரு பயல் கூட அதைப்பற்றி மூச்சு விடவில்லை என்றால் ஐயகோ நமது குலத்தை அந்த பகவானால் கூட காப்பாற்ற முடியாது.நாராயணா,நாராயணா நாராயணா.!!!!!!!!

    Comment


    • #3
      Re: ரிஷியும்சர்ப்பமும்

      அந்த நாராயணர் நிச்சயம் காப்பாற்றுவார். நம்பிக்கை ! ..... அதுதான் பிரதானம் !
      இப்படி சொல்வதை தவிர வேறு வழி இல்லை . எடுக்கும் எந்த ஒரு முயற்சியும்
      நமக்கு மற்றும் நம் சமூகத்திருக்கு தீங்கு வரா வண்ணம் இருக்க வேண்டும்.
      நாமும் அவர்களை போல் எதிர் தாக்குதல் நடத்த வேண்டும் என்று எண்ணம்
      வரக்கூடாது. இது எனது அபிப்பிராயம். என்றும் உங்கள் நண்பன் ஜி ஜி மூர்த்தி ஐயர்

      Comment

      Working...
      X