Announcement

Collapse
No announcement yet.

படித்ததில் பிடித்தது

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • படித்ததில் பிடித்தது

    நம் முன்னோர் பெருமையை உலகறிய செய்வோம்..!
    ############################
    வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் மூடநம்பிக்கை இல்லையென்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது.
    எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா (Cidronic amilga) என்னும் அமிலமானது மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid) என்னும் காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி, மிதீரியட் (methiriyed) என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயுவை வாகனத்தின் பானட்டில் இருந்து ஸ்டியரிங் வரை செல்லும் எத்ஹோயிட் (Ethgoid) என்னும் கலப்பு மூலகத்திலான உலோகக்கம்பி வாகனத்தின் உட்பகுதிவரை கடத்துகிறது.
    அந்த வாயுவானது ஓட்டுனரை நித்திரை கொள்ளாமலும், உற்சாகத்துடனும் இருக்கச் செய்வதுடன், பிரேக் ஆயிலையும் வற்றாமல் பாத்துக்கொள்கிறது. இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த வாயுவானது மேற்சொன்ன இரசாயனப் பகுப்பால் ஒரு வாரம் மட்டுமே கிடைக்கிறது. அதனால்தான் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் ஏற்கனவே கட்டப்பட்டவை அகற்றப்பட்டு புதிதாகக் கட்டப்படுகின்றது..!
    வெள்ளிக்கிழமைகளில் இதனைச் செய்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பூமியானது சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் வடமத்திய ரேகையில் கடக்கக் கோட்டுக்கு தெற்கே 5 டிகிரி மேல்நோக்கி ஏறி, 3 டிகிரி கீழ்நோக்கி இறங்குவதால் இந்த இரசாயன பகுப்பு அதிகம் நடக்கிறது ..!!!
    நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல..!
    விஞ்ஞான அடிப்படையில் தான் செயல்பட்டிருக்கிறார்கள்..!
    நம் முன்னோர் பெருமையை உரக்க சொல்வோம்..!
    இந்த செய்தியை பகிர்ந்து உலகறியச் செய்வோம்..!
    மூடத்தனங்களின் பின்னால் எல்லாம் அறிவியில் உண்மை இருப்பதாகச் சொல்லிக்கொண்டு மனட்சாட்சியே இல்லாமல் மோசடி வேலையில் இறங்கிவிடும் ஃபேஷன் ஒன்றை ஆங்காங்கே காணமுடிகிறது.
    இப்படி ஒன்றுதான் இது
    இவன் செய்யும் லுல்லுல்லாயிக்கெல்லாம் "சாமி கண்ணைக் குத்தும்" தரத்திலான விஞ்ஞானக் காரணம் கண்டு பிடித்து சொல்லிக் கொண்டிருக்கிறான்.
    இந்த மோசடி வேலைகளில் இறங்கும் நேரத்தில் ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பைச் செய்து கொடுதாலாவது தேசம் உருப்படும்.
    இப்பல்லாம் பொய்யை சொல்லுபவர்கள் கொஞ்சம் அறிவியலில் உள்ள பெயர்களை சேர்த்து சொல்லி உண்மைப்போல் பரப்புறார்கள் .உஷார் உஷார் .

    Source:FB

  • #2
    Re: படித்ததில் பிடித்தது

    நல்ல பகிர்வு மாமா ..நன்றி !
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #3
      Re: படித்ததில் பிடித்தது

      அன்பர் ஸ்ரீ நரசிம்ஹன் அவர்களுக்கு,
      .
      "மூடத்தனங்களின் பின்னால் எல்லாம் அறிவியில் உண்மை இருப்பதாகச் சொல்லிக்கொண்டு மனட்சாட்சியே இல்லாமல் மோசடி வேலையில் இறங்கிவிடும் ஃபேஷன் ஒன்றை ஆங்காங்கே காணமுடிகிறது." இவ்வுண்மையான வார்த்தைகளை பகிர்ந்து கொணடதிற்கு மிக்க மகிழ்ச்சி.

      ப்ரஹ்மண்யன்,
      பெங்களூரு

      Comment


      • #4
        Re: படித்ததில் பிடித்தது

        ஸ்ரீமான் ப்ரஹ்மன்யம் அவர்களுக்கு முதற்க்கண் அடியேனுடைய நமஸ்காரத்தை தெரிவித்துக்கொள்வதுடன் நன்றியையும் தெறிவித்துக்கொள்கிரேன்.இந்த பதிவை (போஸ்ட்)படித்தபோது இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்றே ஆச்சர்யப்பட்டேன்.."மூடத்தனங்களின் பின்னால் எல்லாம் அறிவியில் உண்மை இருப்பதாகச் சொல்லிக்கொண்டு மனட்சாட்சியே இல்லாமல் மோசடி வேலையில் இறங்கிவிடும் ஃபேஷன் ஒன்றை ஆங்காங்கே காணமுடிகிறது".
        இப்படி ஒன்றுதான் இது.இப்படிஎல்லாம் பதிப்பவர்கள் யார்? மனிதர்களை மடையவர்கலாக்குபவர்கள் யார்? நாம் செய்வது எல்லாம் இந்த மோசடி பேர்வழிகளை வெலிஉலகத்துக்கு காண்பித்துக்கொடுப்பது ஒன்றுதான்.

        Comment

        Working...
        X