Announcement

Collapse
No announcement yet.

ஆயகலைகள் அறுபத்து நான்கு எது தெரியுமா?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஆயகலைகள் அறுபத்து நான்கு எது தெரியுமா?

    ஆயகலைகள் அறுபத்து நான்கு எது தெரியுமா?
    இன்று விஞ்ஞானம் எத்தனையோ புதிய புதிய விஷயங்களை தந்து கொண்டிருக்கிறது.
    அத்தனையும் ஆச்சரியப்படுத்தும் விஷயங்களாக இருக்கின்றன.
    ஆனால் அந்தக் காலத்தில் ஆயகலைகள் அறுபத்து நான்கும் தெரிந்திருந்தால்
    அத்தனையும் அறிந்த அறிவாளி என்று அர்த்தம் என்று இந்து மத புராணங்கள்
    சொல்கின்றன.
    அந்த ஆயகலைகள் அறுபத்து நான்கு எது என்று உங்களுக்குத் தெரியுமா?
    1. அக்ஷரவிலக்கணம்
    2. லிகிதம்
    3. கணிதம்
    4. வேதம்
    5. புராணம்
    6. வியாகரணம்
    7. நீதி சாஸ்திரம்
    8. ஜோதிடம்
    9. தர்ம சாஸ்திரம்
    10. யோக சாஸ்திரம்
    11. மந்திர சாஸ்திரம்
    12. சகுன சாஸ்திரம்
    13. சிற்ப சாஸ்திரம்
    14. வைத்திய சாஸ்திரம்
    15. உருவ சாஸ்திரம்
    16. இதிஹாசம்
    17. காவியம்
    18. அலங்காரம்
    19. மதுர பாடனம்
    20. நாடகம்
    21. நிருத்தம்
    22. சத்தப்பிரும்மம்
    23. வீணை
    24. வேணு (புல்லாங்குழல்)
    25. மிருதங்கம் (மத்தளம்)
    26. தாளம்
    27. அஸ்திரப் பரிட்சை
    28. கனகப் பரிட்சை (பொன் மாற்று பார்த்தல்)
    29. இரதப் பரிட்சை (தேர் ஏற்றம்)
    30. கஜப் பரிட்சை (யானை எற்றம்)
    31. அசுவப் பரிட்சை (குதிரை ஏற்றம்)
    32. இரத்தினப் பரிட்சை
    33. பூமிப் பரிட்சை
    34. சங்கிராம விலக்கணம்
    35. மல்யுத்தம்
    36. ஆகருடனம்
    37. உச்சாடனம்
    38. வித்து வேடனம் (ஏவல்)
    39. மதன சாஸ்திரம்
    40. மோகனம்
    41. வசீகரணம்
    42. இரசவாதம்
    43. காந்தருவ வாதம் (சங்கீத வித்தை)
    44. பைபீலவாதம் (மிருக பாஷை)
    45. கவுத்துவ வாதம்
    46. தாதுவாதம் ( நாடி சாஸ்திரம்)
    47. காருடம்
    48. நட்டம் (காணாமற்போன பொருளைக் கண்டுபிடித்தல் அல்லது நாட்டியம்
    பழகுவித்தல்)
    49. மூட்டி (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்)
    50. ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்)
    51. பரகாய பிரவேஷம் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்)
    52. ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது)
    53. அதிரிசியம்
    54. இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை)
    55. மகேந்திர ஜாலம்
    56. அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச் சுடாமல் கட்டல்)
    57. ஜலஸ்தம்பம் (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல்,
    நீரில் படுத்திருத்தல்)
    58. வாயுஸ்தம்பம்
    59. திட்டி ஸ்தம்பம்
    60. வாக்கு ஸ்தம்பம்
    61. சுக்கில ஸ்தம்பம் (விந்தையடக்கல்)
    62. கன்னத்தம்பம்
    63. கட்கத்தம்பம்
    64. அவத்தைப் பிரயோகம்
    *அறுபத்து நான்கு ஆயகலைகள்*
    அறுபத்து நான்கு கலைகள் மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் தொகுத்தளித்த செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (A Comprehensive Etymological Dictionary of Tamil Language) Vol.1-Part-1, 545-548ஆம் பக்கங்களில் உள்ளபடி பட்டியல் இடப்பட்டுள்ளது.

    Natraj Kalyanaraman/



  • #2
    Re: ஆயகலைகள் அறுபத்து நான்கு எது தெரியுமா?

    இத்தனை கலை இருந்தாலும் அதை தெரிந்து கொள்ள கம்ப்யூட்டர் கலை அவசியம்னு ஆகிப்போச்சே...

    Comment


    • #3
      Re: ஆயகலைகள் அறுபத்து நான்கு எது தெரியுமா?

      Originally posted by KRISHNAMURTHY45 View Post
      இத்தனை கலை இருந்தாலும் அதை தெரிந்து கொள்ள கம்ப்யூட்டர் கலை அவசியம்னு ஆகிப்போச்சே...
      "வட போச்சே ...!" மாதிரி இருக்கே?!
      கம்ப்யூட்டர் கலைமேல ஏன் இவ்வளவு .... இது?!
      சும்மா தமாஷ்தான், தப்பா எடுத்துக்காதீங்கோ, உங்க கமண்ட் சிரிக்கவும் வைத்தது, சிந்திக்கவும் வைத்தது.
      தொடர்ந்து எழுதவும், நன்றி!
      என்.வி.எஸ்


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment


      • #4
        Re: ஆயகலைகள் அறுபத்து நான்கு எது தெரியுமா?

        மிகவும் தமாஷான பதில். அது சரி. வடை எங்கே போச்சு.யாரால் யாரிடமிருந்து எதற்காக எப்படி போச்சு என்று தெரிந்தால் நாம் எல்லோரும் அந்த தமாஷை அனுபவிக்கலாமே.

        Comment


        • #5
          Re: ஆயகலைகள் அறுபத்து நான்கு எது தெரியுமா?

          Originally posted by P.S.NARASIMHAN View Post
          மிகவும் தமாஷான பதில். அது சரி. வடை எங்கே போச்சு.யாரால் யாரிடமிருந்து எதற்காக எப்படி போச்சு என்று தெரிந்தால் நாம் எல்லோரும் அந்த தமாஷை அனுபவிக்கலாமே.
          ஶ்ரீ:
          ஸ்வாமின்,
          "வட போச்சே!"
          "ஆணியே புடுங்க வேண்டாம்"
          இதெல்லாம் வடிவேலு காமெடிகள்,
          பசங்கள் சகஜமாக உபயோகப்படுத்துவது.
          சட்டென்று ஞாபகம் வந்ததை ஒரு ஹாஸ்யத்திற்காக எழுதிவிட்டேன்.
          (முன் வைத்த காலை பின் வைக்க மனமில்லை அதனால் கையோடு வருத்தம் தெரிவித்துவிட்டேன்).
          அப்புறம் தற்போது கமலஹாசன் காமெடி ஒன்று நினைவு வருகிறது
          அதையும் எழுதிவிடுகிறேன், டைமிங்காக இருக்கும்.

          "வசூல் ராஜா" என்கிற படத்தில் கமல் சொல்வது...
          "பழமொழி சொன்னா அநுபவிக்கணும் ஆராயக்கூடாது!".
          தாஸன்,
          என்.வி.எஸ்


          Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
          please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
          Encourage your friends to become member of this forum.
          Best Wishes and Best Regards,
          Dr.NVS

          Comment


          • #6
            Re: ஆயகலைகள் அறுபத்து நான்கு எது தெரியுமா?

            அக்ஷரலக்ஷம்பெரும்.எதையும் ஆராயக்கூடாது நம் பெரியோர்கள் நதி மூலம் ரிஷிமூலம் கூட ஆராயக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள்..நமது சபையில் யாருமே எந்த போஸ்ட்டையும் பார்பதோடு சரி.அதற்காகத்தான் ஏதோ கொஞ்சம் அரட்டையாவது அடிக்கலாம் என்று எதற்கும் உதவாத கேள்வியையும் சந்தேகத்தையும் எழுப்பிக்கொண்டு இருக்கிறேன்.மன்னிக்கவும்

            Comment

            Working...
            X