Information
எஸ்பல்காம்ப்: ஜெர்மனியில் உள்ள எஸ்பல்காம்ப் என்ற நகரில் உள்ள சூதாட்ட விடுதியில் சிவபெருமான் பெயரால் சூதாட்டம் நடத்தப்பட்டது. இதை அறிந்து அப்பகுதியில் உள்ள இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Notice
இந்துக்களின் இந்த எதிர்ப்புக்கு கிறிஸ்தவர்களும் யூதர்களும் புத்த மதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, நவேதாவில் உள்ள ஐக்கிய கிறிஸ்தவ சர்ச்சின் பாஸ்டர் மறைதிரு. ரிச்சர்டு எல்.ஸ்மித் இது குறித்து கூறுகையில், சூதாட்ட இயந்திரங்களில் சிவபெருமான் படம் பொறிக்கப்பட்டது தங்கள் மத உணர்வை பாதிப்பதாக உள்ளதென இந்துக்கள் தெரிவித்துள்ள எதிர்ப்புக்கு நான் ஆதரவளிக்கிறேன். இவ்வாறு இந்து கடவுளின் பெயரையோ படத்தையோ சூதாட்டத்தில் பயன்படுத்துவது பொருத்தமற்ற செயல். எனவே, இந்த சூதாட்ட விடுதியினர் இந்த போக்கை கைவிட்டு வேறு வகையில் தங்கள் தொழிலை வளர்க்க முயற்சி செய்ய வேண்டும் என்றார்.
முறையற்ற செயல்:
பிரபல புத்த மதத் தலைவர் ஜிகார் பில் பிரியான் கருத்து தெரிவிக்கையில், சிவபெருமான் அல்லது இதர இந்து மத சின்னங்களை சூதாட்டங்களில் பயன்படுத்துவது முறையற்ற செயல்; இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார்.
கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் கடவுளர் படங்களை சூதாட்டத்தில் பயன்படுத்தும் வழக்கத்தை, சூதாட்ட நிறுவனம் உடனடியாக கைவிட வேண்டும் என்று கலிபோர்னியா மற்றும் நவேதாவில் உள்ள யூத மத குரு எலிசா டபிள்யூ.பேயர் வற்புறுத்தியுள்ளார். சிவபெருமான் போன்ற மத அடையாளங்களை மதிக்க வேண்டும்; பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும். அதை விட்டு விட்டு சூதாட்டங்களில் பயன்படுத்துவது கூடாது என்றார்.

பிரபஞ்ச இந்து அமைப்பின் தலைவர் ராஜன் ஜெட், பிற மதத்தலைவர்களின் இந்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.சிவபெருமான் படத்தை சூதாட்டத்தில் பயன்படுத்திய நிறுவனம் இந்த செயலுக்காக உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த சூதாட்டத்தையும் திரும்ப பெற வேண்டும். இவ்வாறு இந்து மத அடையாளங்களைக் கொச்சை படுத்துவது, இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாகும் என்றார்.
Comment