கண்ணனின் லீலைகளை தேவர்களும் செய்ய முடியாது. அவன் தேவர்களுக்கும் தேவன் அல்லவா? மேலோட்டமாக பார்த்தால் அது ஒரு குறும்புக்கார, பயமறியாத ஒரு குழந்தையின் விளையாட்டு. ஆனால் சற்று உன்னிப்பாக பார்த்தால் தான் அதில் ஒளிந்துள்ள சூட்சுமமும் நீதிகளும் புரியும். கோணார் உரைக்கே உரை தேடும் சாமான்யர்களான நமக்கு பரம்பொருளின் லீலைக்கு பின்னே ஒளிந்துள்ள அற்புதங்கள் லேசில் புரியுமா?
‘கண்ணனின் மாயமென்ன மாயமே…’
Information
பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் & எழுத்தாளர் திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் ஆன்மீக தொண்டு நிறுவனமான கிஞ்சிட்காரம் டிரஸ்ட் சார்பாக ஒவ்வொரு வருடமும் ஒரு அற்புதமான நாட்காட்டி (CALENDAR) வெளியிடப்படுவது வாசகர்களுக்கு தெரிந்திருக்கலாம். சென்ற ஆண்டு ‘ஸ்ரீராமனின் பாதையில்…’ என்கிற தலைப்பிலும் அதற்கு முந்தைய ஆண்டு அன்னை மகாலக்ஷ்மியின் பல்வேறு வடிவங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட, ‘லக்ஷ்மீ கடாக்ஷம்’ என்கிற பெயர் கொண்ட காலண்டரும் வெளியிடப்பட்டது. திரு.வேளுக்குடி கிருஷ்ணன் முன்னின்று வடிவமைத்து சிட்டி யூனியன் வங்கியுடன் இணைந்து அதை வெளியிட்டு வருகிறார்.
சுமார் ஒரு லட்சம் காலண்டர்கள் வரை அது முன்பதிவு செய்யப்பட்டு சாதனை படைத்தது. நம் தளத்திலும் அது பற்றி சென்ற ஆண்டு இதே நேரம் நாம் பதிவளித்திருந்தோம். காலண்டரை வாங்க விரும்பும் மெய்யன்பர்கள் அதை முன்பதிவு செய்யவேண்டுமென கேட்டுக்கொண்டோம். பல வாசகர்கள் அதை முன்பதிவு செய்து பெற்றார்கள்.
இந்த ஆண்டு, 2015 ஆம் ஆண்டுக்கான காலண்டர் ‘கண்ணனின் மாயமென்ன மாயமே…’ என்கிற தலைப்பில் கண்ணனின் லீலைகளை மையமாக வைத்து அதற்கு பொருத்தமான வண்ண ஓவியங்கள் மற்றும் ஸ்லோகங்களுடன், முக்கிய நாள், கிழமை விஷேடங்கள் இவற்றை பற்றிய குறிப்புக்களோடு காலண்டர் தயாராகி வருகிறது. 12 பக்கங்கள் கொண்ட அழகிய வண்ண காலண்டர் இது.
தமிழ், மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் இந்த காலண்டர் தயாராகி வருகிறது என்பது தான் இதன் சிறப்பு. இது தினசரி காலண்டர் அல்ல. மாத காலண்டர்.
இந்த காலண்டரை வாங்க விரும்பும் நம் வாசகர்கள் அதை முன்பதிவு செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
முன்பதிவு முடிய இன்னும் சில நாட்களே உள்ளன. டிசம்பர் 2, 2014 அன்று முன்பதிவு முடிவடைகிறது. முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே காலண்டர் கிடைக்கும். கடைகளில் இது கிடைக்காது.
முன்பதிவை http://kinchit.org என்ற முகவரியிலும் செய்யலாம் அல்லது சிட்டி யூனியன் வங்கியின் கிளைகளிலும் நேரில் சென்று செய்யலாம்.
முன்பதிவு செய்பவர்கள் அவர்களுக்குரிய காலண்டரை சிட்டி யூனியன் வங்கியின் கிளைகளில் (புக் செய்த கிளையில்) 2015 ஜனவரி 1 முதல் ஜனவரி 10 வரை பெற்றுக்கொள்ளலாம். கூரியர் மூலம் வேண்டுபவர்கள் கூரியரிலும் பெற்றுக்கொள்ளலாம்.
முன்பதிவை http://kinchit.org என்ற முகவரியிலும் செய்யலாம் அல்லது சிட்டி யூனியன் வங்கியின் கிளைகளிலும் நேரில் சென்று செய்யலாம்.
முன்பதிவு செய்பவர்கள் அவர்களுக்குரிய காலண்டரை சிட்டி யூனியன் வங்கியின் கிளைகளில் (புக் செய்த கிளையில்) 2015 ஜனவரி 1 முதல் ஜனவரி 10 வரை பெற்றுக்கொள்ளலாம். கூரியர் மூலம் வேண்டுபவர்கள் கூரியரிலும் பெற்றுக்கொள்ளலாம்.
Notice
இதில் வரும் வருமானம் முழுக்க திருக்கோவில் புனருத்தாரனங்கள், வேத பாடசாலை பரமாரிப்பு, திவ்ய பிரபந்தங்களின் வகுப்புகள் உள்ளிட்ட இறைபணிகளுக்கே செலவிடுப்படுகிறது. எனவே இந்த காலண்டரை வாங்குவதன் மூலம் பகவத் சேவையிலும் உங்களை ஈடுபடுத்திக்கொண்டவர்களாவீர்கள்!
மேலும் விபரங்களுக்கு http://kinchit.org/index.php/services என்ற முகவரியை பார்க்கவும்.
மேற்படி இணையத்தில் சென்று நீங்கள் ஆன்லைன் மூலம் காலண்டரை புக் செய்ய, அந்த தளத்தில் USERNAME create செய்துகொள்வது அவசியம். ஏனெனில், ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகத்தின் விதிமுறைப்படி BILLDESK & PAYMENT GATEWAY மூலம் பணம் செலுத்துபவர்கள் LOG IN ID மூலம் LOG IN செய்தே பணத்தை செலுத்தவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு:
http://kinchit.org
==============================================================
குறிப்பு: கண்ணனின் லீலைகளை இல்லம் தோறும் கொண்டு சென்று, அதன் மகத்துவத்தை அனைவரும் உணர்ந்துகொள்ள வகை செய்யும் ஒரு மகத்தான பணியிலும், மேலும் பல்வேறு அறப்பணிகளில், சமயப்பணிகளில் ஈடுபட்டு வரும் கிஞ்சிட்காரம் அமைப்பின் அரும்பெரும் தொண்டில் நம் தளத்தையும் ஒரு அணில் போல ஈடுபடுத்திக்கொள்ளவுமே இந்த பதிவை நாம் அளிக்கிறோம். மற்றபடி நம் தளத்திற்கும் இந்த காலண்டரை தயாரித்து விநியோகிக்கவிருக்கும் கிஞ்சிட்காரம் அமைப்புக்கும் எந்த வர்த்தக தொடர்பும் இல்லை என்பதை இத்துடன் தெரிவித்துகொள்கிறேன்.
- சுந்தர்,
www.rightmantra.com
=============================
- See more at: http://rightmantra.com/?p=14840#sthash.WXb4gQrc.dpuf