Announcement

Collapse
No announcement yet.

தலை பிரச்சனைக்கு - அஸனவில்வாதி தைலம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தலை பிரச்சனைக்கு - அஸனவில்வாதி தைலம்




    தேவையான மருந்துகளும் செய்முறையும்:

    1. வேங்கை – அசன 200 கிராம்
    2. வில்வவேர் – பில்வமூல 200 “
    3. சித்தாமுட்டி வேர் – பலாமூல 200 “
    4. சீந்தில்கொடி – குடூசி 200 “
    5. தண்ணீர் – ஜல 12.800 லிட்டர்

    இவைகளைக் கொதிக்க வைத்து 3.200 லிட்டர் ஆகக் குறுக்கி வடிக்கட்டி அத்துடன்

    1. நல்லெண்ணெய் – திலதைல 800 கிராம்
    2. பசுவின் பால் – கோக்ஷீர 800 “

    சேர்த்து அதில்

    1. அதிமதுரம் – யஷ்டீ 26.500 கிராம்
    2. சுக்கு – சுந்தீ 26.500 “
    3. கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக் 26.500 “
    4. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக் 26.500 “
    5. நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக் 26.500 “

    இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக்காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிகட்டவும்.


    பயன்படுத்தும் முறை:

    மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும் குளிப்பதற்கு முன்

    தீரும் நோய்கள்:

    பொதுவான கண்ணோய்கள் (நயன ரோக), காது நோய்கள் (கர்ண ரோக), தலை நோய்கள் (சிரோரோக). வாத உபத்திரவத்தைக் குறைக்க வல்லது.

    தெரிந்து கொள்ள வேண்டியவை

    இந்த தைலத்தில் -அதிமதுரம் ,சுக்கு போன்றவைகள் உள்ளதாலும் -பொதுவாக தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்கவும் ,மண்டை பீனசம் வராமலும் தடுக்கவும் இந்த மருந்து உதவும்
    கண்ணுக்கு ,காதுக்கு -நல்ல ஆற்றலை தரும் ..
    தலை சார்ந்த நோய்களை -பீனசம் ,தலை வலி போன்றவற்றுக்கும் பயன்படுத்தலாம் ..
    அசன வில்வாதி புத்தியையும் -அறிவு கூர்மையையும் வளர்க்கும் ..
    பிரமீ தைலம் ,சுக்குதைலம் ,பீனச தைலம் போன்ற பல தைலங்களில் சிறந்த தலையில் தேய்க்கும் மருந்துகளில் சிறந்த மருந்து
Working...
X