‘பெட் வெட்டிங்’ பிரச்னைக்கு உணவு ஆலோசகர் சங்கீதா அளிக்கும் டயட் டிப்ஸ்:
ஆரோக்கியமான உணவுப் பழக்கம்தான் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அடிப்படை. அதில் குறைபாடு ஏற்படும் போது ‘பெட் வெட்டிங்’ போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
குழந்தைக்குக் கொடுக்கும் உணவில் சரிவிகித சத்துகள் அவசியம். மூளை வளர்ச்சியடைய, 5 வயது வரை கொழுப்புச் சத்துள்ள உணவுகளை அடிக்கடிச் சேர்க்க வேண்டும். உணவின் மூலமே பெட் வெட்டிங் பிரச்னையை சரி செய்ய முடியும்.
காலை உணவை மிஸ் பண்ணுகிற குழந்தையால் மாலை வரை எந்த விஷயத்தையும் சரியாகச் செய்ய முடியாது. அதிக காரமான உணவுகள், அமிலத்தன்மை உள்ள உணவுகள், கஃபைன் கலந்த சாக்லெட், காபி போன்றவற்றால் சிறுநீர் பையில் எரிச்சல் உண்டாகும். இதனால் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படும்.
2 வயதுக்கு மேல் இரவில் பால் குடிப்பதைத் தவிர்த்து விடலாம். படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக உணவு கொடுத்து விட வேண்டும்.
உணவில் உப்பின் அளவு குறைதல், உடலில் கால்சியத்தின் அளவு அதிகரித்தல், எடை அதிகமாக இருத்தல் போன்ற காரணங்களாலும் குழந்தைக்கு படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்னை ஏற்படலாம். ‘ஒமேகா த்ரீ ஃபேட்டி ஆசிட்ஸ்’ உள்ள உணவுகளைச் சாப்பிடுவதால் இதைத் தடுக்கலாம். பழங்கள், காய்கள், முழு தானியங்கள் கொடுக்கலாம்.
தாய்ப்பாலை நிறுத்தும் போது, குழந்தைக்கு நன்றாகப் பசித்த பிறகு திட உணவு கொடுக்க வேண்டியது அவசியம்.
Source: Dinakaran