உடல் எடைப் பிரச்னைக்கு உணவு ஆலோசகர் சங்கீதா அளிக்கும் டயட் டிப்ஸ்...
பரம்பரைக் காரணங்களால், ஒல்லியாக இருக்கும் குழந்தைகள் சாப்பிடுவதில் பெரிய பிரச்னை இருக்காது. சில பெற்றோர் தங்களது குழந்தை ஒல்லியாக இருக்கிறது, நன்றாக வளர வேண்டும் என்ற ஆர்வத்தில் எப்போதும் எதையாவது வற்புறுத்தி சாப்பிட வைக்கின்றனர். வலிந்து சாப்பிட வைப்பதால் பசி குறைந்து, சாப்பிடும் அளவும் குறைகிறது.
எதைக் கேட்டாலும் வாங்கிக் கொடுக்கும் பெற்றோரிடம் சாக்லெட், பிஸ்கெட், பால்... என குழந்தை தனக்குப் பிடித்ததை மட்டும் கேட்டு வாங்கி சாப்பிடும். இதனால் அதன் பசித்தன்மை குறையும். காய்கள், பழங்கள், கீரை, பருப்பு, சாதம் போன்றவற்றை தவிர்ப்பதால் போதுமான ஊட்டச்சத்து இல்லாமலேயே குழந்தை வளரும்.
சரிவிகித சத்துணவை அறிமுகம் செய்ய வேண்டும். மூன்று வேளைக்கு பதிலாக உணவை ஐந்து வேளைகளாகப் பிரித்துக் கொடுக்கவும்.
சர்க்கரைப் பயன்பாட்டைத் தவிர்க்கவும். பூஸ்ட், ஹார்லிக்ஸ் சாப்பிடும் போது சர்க்கரை தேவையில்லை. பால் மற்றும் பால் பொருட்களைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். எண்ணெயில் பொரித்த உணவுக்கு தடா போடவும்.
பழங்கள் மற்றும் காய்கறிகளை அப்படியே கட் செய்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தவும். காய்கறி, பழங்கள் கலந்த சாலட்டை சிற்றுண்டியாகக் கொடுக்கலாம். பிரெட்டை வெண்ணெயில் டோஸ்ட் செய்வதற்கு பதிலாக புதினா சட்னி போன்றவற்றைப் பயன்படுத்தவும். சாக்லெட், ஸ்வீட், மைதா, உருளைக் கிழங்கு போன்றவற்றைத் தவிர்க்கவும். சுறுசுறுப்பாக இருக்க உணவுகளுக்கு இடையில் விளையாடவும் அனுமதிக்கவும்.
மட்டனுக்கு பதிலாக சிக்கன் எடுத்துக் கொள்ளலாம். ஓட்ஸ் உப்புமா மற்றும் சாலட் தரலாம். இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
ஒல்லியான குழந்தைகளுக்கு சர்க்கரை, முழு தானியங்கள், புரதம் அதிகம் உள்ள உணவுகள், மாவுச் சத்து உள்ள அரிசி, கோதுமை போன்ற உணவுகளைத் தரலாம்.
சுண்டல் வகைகள், ராகி, பாலாடைக் கட்டி, வெண்ணெய், பாதாம், பிஸ்தா, உலர்ந்த திராட்சை தரலாம். ஊட்டச்சத்து அதிகமுள்ள ரோஸ் மில்க், மில்க் ஷேக், பாதாம் மில்க் போன்றவற்றை உணவுக்கு இடையில் தரலாம். சரியான இடைவெளியில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான சத்தான உணவு அளிப்பது அவசியம்.
Source: Dinakaran