Announcement

Collapse
No announcement yet.

மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள்

    மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள்



    Click image for larger version

Name:	Manathakali.jpg
Views:	1
Size:	24.8 KB
ID:	35288


    பலராலும் விரும்பிச் சாப்பிடப்படும் கீரை வகைகளில் இம்மூலிகையும் ஒன்று. இது சொலானம் நைக்ரம் என்ற தாவரவியல் பெயரில் சொலனேசி குடும்பத்தில் காணப்படுகிறது.

    மிளகு போன்று தோற்றமளிப்பதாலேயே மிளகுத் தக்காளி எனப்படுகிறது.
    வெப்ப மண்டல நாடுகளில் மிகுதியாகக் காணப்படுகிறது.

    தமிழகத்தில் மணற்பாங்கான மற்றும் கரிசல் மண் பூமிகளில் உள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்க நாடுகளிலும் பயிரிடப்படுகிறது. எத்தியோப்பியாவில் வறட்சிக் காலங்களில் அங்கு முக்கிய உணவாக உண்ணப்படுகிறது.

    பூக்கள் வெண்மையாய் இருக்கும். காய்கள் கருமையாகவும், கரும்பச்சையாகவும் காணப்படும். பழுக்கும்போது சிவப்பு, மஞ்சள், கருப்பு ஆகிய நிறங்களோடு இருக்கும்.

    இதனுடைய இலை, தண்டு, கனி எல்லாவற்றையும் உணவு மற்றும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.



    தினமும் உணவுடன் சேர்க்க வேண்டிய கீரை வகைகளில் மணத்தக்காளியும் ஒன்று. ஏனெனில் அதிகளவு சத்துக்கள் இந்த கீரையில் அடங்கியுள்ளது.


    மணத்தக்காளியில் நிறைய உயிர்ச் சத்துக்களும், புரதச் சத்துக்களும், இரும்புச் சத்தும் உண்டு. இந்தக் கீரையில் தக்காளி வடிவில் சிறிய அளவில் மணிமணியாகக் காய்கள் இருப்பதால் மணித் தக்காளி என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்தக் காயுடன் கீரையையும் பச்சைப் பருப்பையும் கலந்து உண்டு வந்தால், உடல் சூடு குறையும். மூலச் சூட்டைத் தணிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.


    சித்த மருத்துவத்தில் குடல் புண்களைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளிக்கு முக்கிய இடம் உண்டு. மஞ்சள் காமாலை நோயாளிகளுக்கு இந்தக் கீரையை நன்றாக இடித்துச் சாறு எடுத்து, பசும்பால் கலந்து தினசரி காலையில் வெறும் வயிற்றில் கொடுக்கும் போது ஒரு வாரத்திலேயே காமாலை நோய் சரியாகிவிடும்.



    மணத்தக்காளிக் கீரையில் உடல் நலத்துக்கான சத்துக்கள் நிறைய இருக்கின்றன. அதனால் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து வாரம் ஒரு முறையாவது இந்தக் கீரையைச் சாப்பிடப் பழக்கப்படுத்துவது நல்லது




    ஈரோடு மற்றும் சேலம் போன்ற மஞ்சள் பயிரிடப்படும் பகுதிகளில் மஞ்சளில் முக்கிய களையாக மணத்தக்காளி விளங்குகிறது.


    Source:Anathanarayanan Ramaswamy
Working...
X