Announcement

Collapse
No announcement yet.

ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்

    ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்

    Click image for larger version

Name:	oola Sadai.jpg
Views:	1
Size:	13.7 KB
ID:	35282


    இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெணகள், என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது, பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது. வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கி சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்

    பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி போதுமான சத்தான உணவு இல்லாததும், ஒரு காரணமாக இருக்கிறது. இது தவிர அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது.



    பப்பாளிக் காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.


    சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும் மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்து வரவேண்டும்.

    இதுதவிர வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு, இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிக்கும் மேலாக காலையில் அரைமணி நேர நடைப்பயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும். உடல் எடையும் குறையும். புத்துணர்வாகவும் இருக்கும்.

    source; Rajan Raj
Working...
X