Announcement

Collapse
No announcement yet.

பாத வெடிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பாத வெடிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்.

    பாத வெடிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்.
    *****************************************

    Click image for larger version

Name:	Pada Vedippu.jpg
Views:	1
Size:	13.4 KB
ID:	35072

    வீடுகளில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் தண்ணீரை பயன்படுத்துவார்கள். வீட்டில் பாத்திரம் கழுவுவது சோப்பு போடுவது வீட்டை கழுகி சுத்தம் செய்வது தண்ணீர் எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் அவர்கள் கால்கள் அதிகளவு ஈரமாக இருக்கும். உப்பு தண்ணீர் அதிகளவில் கால்களில் படுவதால் பாதத்தில் வெடிப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும் வெடிப்பு புண்ணாக மாறி வலியை உண்டாக்கும்.

    இதனால் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகின்றனர் பெண்கள். இது போன்று பாத வெடிப்புகளால் அவதிப்படும் பெண்கள் அதற்கான சிகிச்சை பெற்றாலும் குணமாகாது. இதற்கான தீர்வு இயற்கை தாவரம் பழத்தை பயன்படுத்தி அடிக்கடி பாதத்தில் தடவினால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

    பாதம் வெடிப்பு நீங்க சில டிப்ஸ்

    பப்பாளி பழத்தை
    நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்த வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்ர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

    கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும்
    . அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து பின் பாதத்தை சொரசொரப்பான பிரஸ்சை கொண்டு தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் வெடிப்பு ஏற்படுவது நிற்பதோடு பாதம் மென்மையாகவும் இருக்கும்.

    வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் வெடிப்பு நீங்கும். தரம் குறைவான காலணிகளை பயன்படுத்தினாலும் சிலருக்கு வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகள் வாங்கும் போது தரமானதாக பார்த்து வாங்க வேண்டும்.

    விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் சமஅளவில் எடுத்து கொண்டு அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல குழைத்து பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி
    சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகி விடும். வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல குழைத்து வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம்.

    இரவு நேரத்தில் முங்க செல்லும் முன் காரல நன்றாக கழுவி சிறிது தேங்காய் எண்ணெய் தடவினால் நல்லது.
    தினமும் குளித்து முடித்ததும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின் பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.



    Source: Aatika Ashreen
Working...
X