வாய் கொப்பளித்தல்: எங்கே, எப்படி?
சாப்பிட்ட பின் கை அலம்புவதையும், வாய் கொப்பளிப்பதையும், சாப்பாட்டுப் பாத்திரங்கள் போடும் சமையல் அறையிலுள்ள (கிச்சன்) பேஸினிலேயே தான் நிறைய பேர் செய்கிறார்கள். கை அலம்புவதற்கென்று தனியாக ஒரு வாஷ் பேஸின் இருந்தாலும், நிறைய பேர் அங்கே கழுவாமல், பாத்திரங்களைப் போடும் கிச்சன் பேஸினிலேயே தான் கழுவுகிறார்கள்.
சாப்பிடும்போது கைக்கும், வாய்க்கும் இடையே ஏற்படும் தொடர்பில், வாயிலுள்ள எச்சில் மற்றும் எச்சிலோடு சேர்ந்த உணவுக்கூழ், நம் கையிலும் சாப்பாட்டுத் தட்டிலும் படத்தான் செய்கிறது. மேலும் கண்ணுக்குத் தெரியாத கையிலுள்ள கிருமிகள், பற்களின் இடையில் சிக்கியுள்ள சாப்பாட்டுத் துணுக்குகள் ஆகியவை நாம் வாய் கொப்பளிக்கும்போது, துப்பும் எச்சில் வழியாக கிச்சனிலுள்ள பேஸினுக்குத்தான் போய்ச் சேருகிறது. கிச்சன் பேஸின் குழாயில் வரும் தண்ணீர் கழுவுவதற்கு உபயோகப்படுத்தும் தண்ணீர்தானே தவிர, குடிப்பதற்கு உபயோகப்படுத்தும் தண்ணீர் அல்ல. கிருமிகள் அதிகமாக வளர்வதற்கும், பெருகுவதற்கும், ஏற்ற இடம் தண்ணீர் தான். எனவே எந்த வகை கிருமிகள் கிச்சன் பேஸினின் ஓரத்திலும், குழாய்த் தண்ணீரிலும் இருக்கும் என்று நம்மால் யூகிக்க முடியாது.
மேலும் நமக்கு ஏதாவது நோய் இருந்தால், அந்த நோய்க்கிருமிகளும் ஒரு பாத்திரத்தோடு நிற்காமல், கிச்சன் பேஸினிலுள்ள மொத்த பாத்திரங்களிலும் போய் ஒட்டிக் கொள்ளும். இதனால் சாப்பிடும் பாத்திரங்கள், சமையல் பாத்திரங்கள் என எல்லாவற்றிலும் நோய்க் கிருமிகள் போய்ச் சேர்ந்து விடும். இது சரியல்ல.
ஒருவருடைய எச்சில் உணவை இன்னொருவர் சாப்பிடுவதே, மருத்துவ ரீதியாக நல்லதல்ல என்று நாம் நினைக்கும் போது, கிச்சன் பேஸினிலேயே வாயைக் கொப்பளிப்பது நல்லதா என்று யோசித்துப் பாருங்கள். இதனால் ஒருவருக்குள்ள நோய், இன்னொருவருக்கும் வர அதிக வாய்ப்புள்ளதல்லவா! இதனால்தான் வீட்டிலுள்ள பெரியவர்கள், எச்சில் உணவு சாப்பிடும் பழக்கத்தை உற்சாகப்படுத்த மாட்டார்கள். அப்படியிருக்கும்போது எச்சில் தட்டுகள் உள்ள இடத்தில், கையை அலம்பவும் வாயைக் கொப்பளிக்கவும் கண்டிப்பாக விட மாட்டார்கள்.
சிலர் சாப்பிட்டு முடித்த பின், சாப்பிட்ட தட்டிலேயே கையை கழுவுகிறார்கள். இதுவும் நல்ல பழக்கமல்ல. வயதானவர்களும், நடக்க முடியாதவர்களும் செய்து விட்டுப் போகட்டும் என விட்டு விடலாம். சிலர் சாப்பிட்டு முடித்த பின் கை கழுவும் போது, கையை மட்டும் கழுவிவிட்டு வாயைக் கழுவுவதோ அல்லது தண்ணீர் விட்டு கொப்பளிப்பதோ கிடையாது. கையை மட்டும் கழுவிவிட்டு, வாயைத் திறக்காமல், வாயின் வெளியிலே மட்டும் கையால் துடைத்துக்கொண்டு வந்து விடுகிறார்கள். இதுவும் சரியல்ல. கை கழுவும் போதே, தண்ணீரை வாயில் எடுத்து, நன்றாக வாயை பலமுறை கொப்பளித்து, வெளியில் துப்ப வேண்டும். அப்பொழுது தான் வாய் சுத்தமாக கழுவப்படும். வாயில் சாப்பாட்டுத் துணுக்குகள் எதுவும் தங்காது.
வெறுமனே வாயை வெளியில் மட்டும் துடைத்துக் கொண்டு வந்தால், பற்களுக்கிடையில் சிக்கியுள்ள உணவு அப்படியே இருக்கும். தொடர்ந்து இரண்டு மணி நேரத்துக்கு மேல் இந்த எச்சில் உணவு பற்களுக்கிடையில் இருந்தால், அது கெட்டுப் போய் நாற்றமடிக்கும். மேலும் பற்களுக்கும் ஈறுகளுக்கும் அதிக தீங்கு விளைவிக்கும். சிலருக்கு வாய் நாற்றம் ஏற்படுவதற்கு இது ஒரு காரணம். எனவே சாப்பிட்டபின், வெளியே மட்டும் வாயை துடைப்பதை விட்டுவிட்டு, தண்ணீரை வாய்க்குள் எடுத்து நன்றாக கொப்பளித்து வெளியில் துப்புங்கள். இரவில் பால் குடிக்கும் பழக்கமுள்ளவர்கள், குடித்து முடித்த பின் வாயை நன்றாக கொப்பளித்து விட்டு படுக்க வேண்டும். குடித்து விட்டு, அப்படியே தூங்கினால் பற்கள் சீக்கிரம் பாழாகி விடும்.
சமையலறையிலுள்ள பேஸினில் சாப்பாட்டுப் பாத்திரங்களைப் போடுங்கள். கையை அதே பேஸினில் கழுவாதீர்கள். வாயையும் அதே பேஸினில் கொப்பளிக்காதீர்கள். சாப்பிட்ட பாத்திரங்களை பேஸினில் போட்டு விட்டு, கையை வேறு வாஷ் பேஸினில் போய் கழுவுங்கள். வீட்டில் தனித்தனியாக இரண்டு வாஷ் பேஸின் இல்லாதவர்கள், அதற்காக கவலைப்பட வேண்டாம். பாத்திரங்கள் இல்லாத வேறு இடத்தில் போய் கையைக் கழுவுங்கள். வாஷ்பேஸினே இல்லையென்றால், பிரச்சினையே இல்லை. சாப்பிட்டபின் கையை வீட்டிலுள்ள பாத்ரூம் அல்லது வீட்டின் பின்பகுதி அல்லது தோட்டத்துப் பக்கம் போய் கழுவுங்கள்.
நம் முன்னோர்கள், சில சிறந்த, நல்ல பழக்கங்களை கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். தென்னிந்தியாவில் வாழை இலையில் உணவு உண்ணும் பழக்கம், வெகு காலமாகவே இருந்து வருகிறது. சூடான உணவை வாழை இலையில் போட்டு சாப்பிடும் போது, அந்த சூட்டினால் வாழையிலையிலுள்ள சாறு நாம் சாப்பிடும் உணவோடு சேர்ந்து உணவின் ருசியையும் அதிகமாக்கி, நன்றாக பசியையும் உண்டு பண்ணி விடுகிறது என்பது வரலாறு.
முடிந்தவரை பாத்திரங்களுக்குப் பதிலாக, வாழை இலை, தையல் இலை, பாக்குமட்டை தட்டு போன்ற உபயோகித்தபின் தூக்கியெறியக் கூடியவைகளை சாப்பிட பயன்படுத்துங்கள். அசைவ உணவும், அதிக எண்ணெய் உள்ள உணவும் சாப்பிடும் போது, வாழை இலையில் சாப்பிடுவது நல்லது. இலைகளில் சாப்பிட்டால், சாப்பிட்டோமா, தூக்கிப் போட்டோமா என்றிருக்கும். பாத்திரம் கழுவ வேண்டிய வேலையும் இல்லை. தண்ணீரும் மிச்சம். தினமும் இலையில் சாப்பிட முடியவில்லையென்றால், அதிக எண்ணெய் உள்ள உணவு, அசைவ உணவு சாப்பிடுகிற அன்றாவது கண்டிப்பாக இலையில் சாப்பிட்டுப் பழகுங்கள். கிச்சன் பேஸினும் சுத்தமாக இருக்கும். ஆகவே சாப்பாட்டுப் பாத்திரங்கள் போடும் சமையலறையிலுள்ள வாஷ் பேஸினில் கை அலம்புவதையும், வாய் கொப்பளிப்பதையும் இன்றோடு நிறுத்திக் கொள்ளுங்கள். நிறுத்திக் கொள்வதே சுகாதாரம்
Source:Aatika Ashreen