Announcement

Collapse
No announcement yet.

கொத்தவரங்காய்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கொத்தவரங்காய்

    சீனி அவரைக்காய் (எ) கொத்தவரங்காய்

    என்ன சத்துக்கள்?

    நார்ச்சத்து, புரதச் சத்து, மற்றும் அமினோ அமிலங்கள் இதிலுள்ளது.




    பலன்கள்


    Click image for larger version

Name:	Kotha.jpg
Views:	1
Size:	33.2 KB
ID:	35063 சர்க்கரை நோயை குணப்படுத்தும். கொத்தவரங்காய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையும் அதனுடன் பூண்டு சேர்த்துக் கொண்டு சாப்பிட்டால் இன்னும் குறையும் என்கிறது ஒரு ஆராய்ச்சி.

    நார்ச்சத்துள்ள உணவுகள் கொலஸ்ட்ராலைக் குறைக்கின்றன. நார்ச் சத்து உணவுப் பாதையை, குறிப்பாக பெருங்குடலையும் அதற்குக் கீழுள்ள உணவுப் பாதையையும் தடைகளில்லாமல் வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த நார்ச் சத்து உணவுப் பாதையில் நகரும் போது கூடவே கொலஸ்ட்ராலையும் கூட்டிக் கொண்டு போய் விடுகிறது. இதனால் உணவிலும், செரிமான திரவங்களிலும் இருக்கும் கொலஸ்ட்ரால் நமது ரத்தத்திற்கு போகாது.



    Source: nagarathar

  • #2
    Re: கொத்தவரங்காய்

    கொத்தவரங்காய்:

    இக்காயில் பல மருத்துவ குணங்கள் இருப்பினும் வாயு பித்த தொந்திரவு இருப்பவர்கள் கொத்தவரங்காயை உட்கொள்ளுவது ஆகாது..வயிற்றில் வாயுவை உபரிசெய்து பித்தவாயு,மார்புவலி,கபம்,வாதக்கடுப்பு இவையை உண்டாக்கும்...பித்தத்தால் நளிரையும் முறிக்கும்...நாட்டு மருந்து சாப்பிடுகிறவர்கள் இந்தக்காயை உண்ணவே கூடாது .

    ப்ரஹ்மண்யன்
    பெங்களுரு

    Comment


    • #3
      Re: கொத்தவரங்காய்


      ஶ்ரீ:
      அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திரு.ப்ரஹ்மண்யன் ஐயா,


      நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் வருகைக்கும், இடுகைக்கும் மிக்க நன்றி.
      தொடர்ந்து தங்கள் இடுகை இடம்பெற்றால் மகிழ்ச்சி மட்டற்றதாக மலர்ந்திருக்கும்.
      சொந்தக் கருத்துகளை, ஆழ்ந்த பொருளுடன், ஆராய்ந்து, தரமாக இடுகை செய்பவர்களை
      எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
      நன்றி,

      கொத்தவரங்காயில் உள்ள வாயுத் தொல்லையிலிருந்து விடுபட,
      1.காயில் உள்ள விதைகள் கடினத் தன்மை அடைவதற்கு முன், அதாவது மிகவும் பிஞ்சான
      காய்களை உபயோகிக்கவேண்டும்.
      2. முடிந்தால் விதைகளை அகற்றிவிடவேண்டும்.
      3. சிறிதளவு பெருங்காயப்பொடி (வழக்கத்தைவிட சற்று அதிகமாகச்) சேர்த்துக்கொள்ளவேண்டும்.
      4. மிகச் சிறு அளவு சமையல் சோடா சேர்த்துக்கொள்ளவேண்டும்.
      5. வதக்கல் (பொறியல்) செய்யாமல் வேகவைத்து கூட்டாகச் செய்து சாப்பிடவேண்டும்.

      மேற்கண்ட ஒவ்வொரு புள்ளியும் குறைந்தது 10 சதவீத அளவு வாயுத்தொல்லையிலிருந்து விடுவிக்கும்.

      நன்றி.
      என்.வி.எஸ்


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment


      • #4
        Re: கொத்தவரங்காய்

        எனது மதிப்புக்குரிய அன்புமிகு ஸ்ரீ N VS அவர்கட்கு
        நமஸ்காரங்கள்.

        எழுதுவதற்கு தகுந்த பொருள் கிடைக்காததினால் நமது இடுகையில் எனது கருத்துக்களை பதிவுசெய்ய வில்லையே தவிர வேறு காரணங்கள் இல்லை. இனி தொடர்ந்து எனது கருத்துக்களை பதிவுசெய்ய முயற்சிக்கிறேன்.

        கொத்தவரங்காய் (பருப்பு உசிலி)எனக்கு மிகவும் பிடித்த சமையலில் ஒன்று, ஆனால் எனது உடல் இயற்கையிலேயே வாயு தேகம். சாப்பிட்டஉடனேயே வயிற்று கோளாறு ஏற்பட்டுவிடும்.தாங்கள் கூறிய மாற்று முறைகளை உபயோகித்து பார்க்கிறேன் .

        நன்றி ,
        தங்கள் நலம் கோரும்
        ப்ரஹ்மண்யன்
        பெங்களுரு .

        Comment


        • #5
          Re: கொத்தவரங்காய்

          ஶ்ரீ:
          அன்பிற்கினிய ப்ரஹ்மண்யன் அவர்களுக்கு,
          அடியேனுடைய கோரிக்கையை ஏற்று,
          பதிவுகளைத் உடனடியாகத் தொடர்ந்துள்ளமைக்கும்,
          தொடர்ந்து பதிய சம்மதம் தெரிவித்தமைக்கும்,
          மிக்க நன்றி,
          அன்புடன்,
          என்.வி.எஸ்


          Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
          please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
          Encourage your friends to become member of this forum.
          Best Wishes and Best Regards,
          Dr.NVS

          Comment

          Working...
          X