Announcement

Collapse
No announcement yet.

இதயம் சில உண்மைகள்! ! ! !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • இதயம் சில உண்மைகள்! ! ! !

    Ananthanarayanan Ramaswamy
    இதயம் சில உண்மைகள்! ! ! !

    1. பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம்.

    பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும்
    (யானை - நிமிடத்திற்கு 20-30)

    சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும்

    (எலி -நிமிடத்திற்கு 500-600).

    மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.


    2. மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும்.


    3. நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.


    4. மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன.


    5. ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்பு (pump) பண்ணுகிறது. (ஒரு பேரல் என்பது 117.34 லிட்டேர்கள் ...நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்)


    6. பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.


    7. நம் இதயத்தின் அளவு நமது கையின் ஒரு பிடி அளவே (clenched fist).


    8. கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயமே.


    9. நாம் இதயத்தின் மேல் கை வை என்றால் உடனடியாக நாம் நமது கையைநெஞ்சின் இடதுபக்கம் வைப்போம் ஆனால் இதயம் நெஞ்சின் நடுவில்தான் இரண்டு நுரை ஈரலுக்கும் மத்தியில் இருக்கிறது.


    இதயத்தின் அடிபகுதி மட்டுமே சற்று இடப்பக்கம் சாய்ந்து இருக்கும் எனவேதான் நாம் அவ்வாறு உணருகிறோம்.


    10. லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறதுஎன்பதுநமக்கு தெரியும்.

    நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த சத்தம்உருவாகிறது.


    Source:harikrishnamurthy

Working...
X