ஏழைகளின் ஆப்பிள்
தக்காளியில் ஏராளமான உயிர்ச்சத்துக்களும், கால்சியம் சத்தும் அடங்கியுள்ளது. இதன் காரணமாகவே தக்காளியானது ஏழைகளின் ஆப்பிள் என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. இதை விலை மலிவாக இருப்பதால்தான் எண்ணற்றோர் இதனை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இதில் உள்ள சத்துக்களையும் தெரிந்து கொள்வதில்லை. தக்காளிப் பழத்தில், நாட்டுத்தக்காளி, ஆப்பிள் தக்காளி என்று பல வகைகள் இருந்தாலும் மருத்துவ குணத்திலும், சத்துக்களிலும் எல்லாம் ஒன்றுதான்!
மற்ற பழங்களைப்போல தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட வேண்டும். இருப்பினும் தக்காளியை எந்த வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட்டாலும் அதன் சக்தி அப்படியே நமக்குக் கிடைக்கும். உடலுக்கு பலம் தக்காளியில் வைட்டமின் ஏ,பி, பி2 மற்றும் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இவைத் தவிர சுண்ணாம்புச்சத்தும் உள்ளது. இதன் மூலம் உடலுக்கு நல்ல பலம் அதிகரிக்கும், ரத்தம் விருத்தியடையும். உடலில் புதிய ரத்தத்தை உற்பத்தி செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு. ஏழைகளின் ஆப்பிள்
Source:dinesh3737