Announcement

Collapse
No announcement yet.

அகத்திக்கீரை/கருவேப்பிலை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அகத்திக்கீரை/கருவேப்பிலை

    கீரையைப்பற்றிய விவரங்கள்

    பொருள்
    அகத்திக்கீரை, பெயர்ச்சொல்.
    1. கீரை வகைகளுள் ஒன்று

    மொழிபெயர்ப்புகள்
    • ஆங்கிலம்

    1. Agati tree leaves.
    2. hummingbird tree leaves.

    விளக்கம்
    மருத்துவ குணங்களுள்ள கீரை வகை. ஏகாதசி விரதம் முடிந்த மறுநாள்துவாதசியன்று கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் உண்டு. வயிற்றுக் கோளாறுகளைப் போக்கும் குணமுள்ளது. இந்த கீரையை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்தால் மிகவும் புண்ணியம்என்று கருதப்படுகிறது. அகத்திப் பூக்களையும் சமைத்து உண்பர்.
    • மருத்துவ குணங்கள்

    1. வாரத்திற்கு ஓரிரு முறை உண்டுவர உடல் சூடு குறையும்...கண்கள் குளிர்ச்சி பெறும்...மலம் இளகலாகப் போகும்...சிறுநீர் தடையில்லாமல் தாராளமாகப் போகும்...மேலும் மகோதர வீக்கம், நீரடைப்பு, பித்த மயக்கம்ஆகியவையும் நீங்கும்...
    2. இந்தக்கீரையை காம்பு, பழுப்பு, பூச்சிகள்,தூசி நீக்கி அரைத்து அடிப்பட்டு இரத்தம் சொரியும் காயங்களுக்குக் கட்ட சீழ் பிடிக்காமல் விரைவில் ஆறும்...
    3. இந்தக்கீரை மருந்துகளின் வீறுகளைக் கெடுத்துவிடுமாதலால் பத்தியம் இருப்போர் உண்ணுதல் ஆகாது.
    4. இதிலிருந்துத் தயாரிக்கப்படுவதே அகத்திக்கீரைத்தைலம். இதைக்கொண்டு வாரமொரு முறை தலையில் தேய்த்துக் குளித்துவர பித்தம் தணிந்து, பித்தத் தலைவலி போகும்...கண்களும் குளிர்ச்சி பெறும்.




    கருவேப்பிலை



    பொருள்

    மொழிபெயர்ப்புகள்
    • (ஆங்கி) - curry leaf
    • (இந்தி) - मीथ णीम पत्ता, करी पत्ता
    • (தெலுங்கு) - కరివేపాకు
    • விளக்கம்
      • கறிவேப்பிலை என்று அறியப்படும் இந்த இலைகள் கறி, சாம்பார், ரசம், கூட்டு போன்ற உணவுப் பொருட்களில் மணமும் சுவையும் ஊட்ட சேர்ப்பர்... இதைத் தனியாகவும் துவையல், தொக்கு, பொடி முதலியவன செய்து அன்னத்துடன் பிசைந்து உண்பர்...
      • மருத்துவ குணங்கள்

      கருவேப்பிலை அரோசிகம், சீதபேதியால் வரும் வயிறளைவு, புராணசுரம், பித்தம் , மந்தபசி, செறியாமை, வாந்தி, சூட்டால் ஏற்படும் ஓசையுடன் கூடிய மலக்கழிச்சல், குழந்தைகளுக்கு உண்டாகும் வாந்தி, ஓக்காளம் ஆகியனவற்றைக் குணப்படுத்தும்... இரைப்பைக்கு வலு சேர்த்தாலும், குடலில் வறட்சியை உண்டாக்கும்... ஆகவே இதைத் தனியாக உண்ணும்போது நெய்யை சற்று அதிகமாகச் சேர்த்துக்கொள்ளல் நல்லது.



      பீர்க்கங்காய்


      மொழிபெயர்ப்புகள்
      • ஆங்கிலம்:

      1. plant related to cucumber, sponge gourd
      2. ridge gourd

      விளக்கம்
      • இந்தக்காய்களின் மேற்றோலைச் சீவி வில்லைகளாக அரிந்துப் பொரியலாகவும், துவரம் பருப்பு/கடலைப்பருப்புச் சேர்த்துக் கூட்டமுதாகவும் செய்து அன்னத்துடன் கூட்டி உண்பர்... சீவப்பட்ட மேற்றோல்கள் மிக இளசாக இருந்தால் அவைகளை எண்ணெய்யில் வதக்கி, வறுத்த உளுத்தம்பருப்பு மற்றும் மிளகாய் வற்றல், புளி, உப்பு அவற்றோடு சேர்த்து அரைத்துத் துவையலாகவும் அன்னத்துடன் கூட்டி உண்பர்...இந்தக்காய்களின் முற்றிய நார் உடலை தேய்த்துக்குளிக்க பீர்க்கங்குடுவை-யாக பயனாகிறது...
      • பீர்க்கங்காயை உண்டால் பித்தம், சீதளத்தை அளவுக்கு மிஞ்சி உண்டாக்கும்...உடலில் வாத கபங்களின் தத்துவ நிலைத் தவறும்...அதிகம் உண்ணாமலிருப்பதே உடல் நலத்திற்குச் சிறந்தது...
Working...
X