Why Elders say" Don't talk while eating" ?
சாப்பிடும் போது பேசக்கூடாது என்று சொல்ல என்ன காரணம்.
நமது உடல் ஆரோக்கியத்திற்கும், நாம் உண்ணும் உணவுக்கும், உண்ணும் முறைக்கும் பல்வேறு தொடர்புகள் உண்டு. நொறுக்க தின்றால் நூறு வயது என்று பழமொழி கூட உண்டு. அதேபோல உணவு உண்ணும் போதும் பேசக்கூடாது என்று கூறுவார்கள் அதற்கு பல்வேறு அறிவியல் காரணங்கள் உள்ளன.
நம்முடைய முக அமைப்புக்கும் நாம் சாப்பிடும் முறைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது, நம்முடைய மண்டை ஓட்டினுடைய அமைப்பானது கபாலத்தினுடைய அடிப்பாகத்தில் தொடங்கி, தொண்டை குரல் வளையில் கீழ்ப்பகுதியில் சென்று முடிகிறதாம்.
வாய்ப்பகுதியில் இருந்து நமது உணவுக்குழாயானது தொண்டை வழியாக வயிற்று பகுதிக்கு செல்கிறது. அதே போல மூக்கிலிருந்து சுவாசக் குழாயும் தொண்டை வழியாக உணவுக் குழாயைக் கடந்து நுரையீரலுக்குப் போகிறது.
நமது உணவு குழாயும், சுவாச குழாயும் ஒன்றுடன் ஓன்று தொடர்புடையது. இதனால் நாம் உணவு உண்ணம்போது தப்பி தவறி உணவானது சுவாச குழாயினுள் சென்றுவிட்டாள் அது நமது உயிருக்கு மிகவும் ஆபத்தாக அமைந்துவிடும். இதுபோன்று நேரத்தில் சுவாச குழாயில் இருந்து உணவை வெளியேறும் நிகழ்வே புரையேறுதல்.
அதேபோல உணவு உண்ணும் நேரத்தில்தான் புரையேறுமா என்றால் நிச்சயம் இல்லை. நாம் தூங்கும் நேரங்களில் கூட பலமுறை புரையேறி பார்த்திருப்போம். அதற்கு காரணம் நாம் தூங்கும்போது உமிழ்நீர் சுவாச குழாயினுள் சென்றுவிடும் அந்த நேரத்தில் உமிழ்நீரை வெளியேற்றும்போதும் நமக்கு புரையேறுகிறது.
பொதுவாக நாம் உண்ணும்போது மற்றவர்களுடன் பேசுகையில் உணவு, காற்று இரண்டும் சேர்ந்து ஒன்றாக செல்லும்போதே இதுபோன்ற நிகழ்வுகள் அதிகமாக நிகழ்கிறத
இதனால்தான் நாம் உண்ணும்போது பேசக்கூடாது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்
tamilan-superpowerindia.blogspot
This post is for sharing knowledge only, no intention to violate any copy rights